Tuesday, 28 May 2019


8வது சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் விரைவில் வரவுள்ளது
             தயாராயிருப்போம்
          BSNLEU------திருச்சி மாவட்டம்


            காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
பிப்ரவரி மாதம் முதல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்ககோரி 28/5/19 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம் நேற்றைய தினம் DGM ADMN அவர்களும் (27/5/19) இன்று 28/5/19  PGM அவர்களூம் நம்மை அழைத்து பேசினார்கள் கான்ட்ராக்டர்களை அழைத்து பேசி ஊதியம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்கள்.சனிக்கிழமைக்குள் ஊதியம் பட்டுவாடா ஆகவில்லை என்றால் திங்கள் முதல் (3/6/19) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளோம்.
காத்திருப்போம் அல்லது காத்திருப்போம் போராட்டத்தை துவங்குவோம்
BSNLEU---------------TNTCWU-------திருச்சி மாவட்ட சங்கங்கள்

Saturday, 25 May 2019


                 காத்திருப்பு போராட்டம்
ஓப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக திருச்சி மாவட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை .இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக பல கட்ட போராட்டம் நடத்திய பின்பும் ஊதியம் பட்டுவாடா ஆகவில்லை ஆகவே கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் சென்னையில் மாநில அலுவலகத்தின் முன்பாக உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.டெல்லியில் நமது பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கார்ப்பரேட் அலுவலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா முழுவதும் 30 சதவீதம் நிதி 14/5/19 ஒதுக்கீடு செய்யப்பட்டது.நிதி ஒதுக்கி 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஊதியம் பட்டுவாடா செய்யப்படவில்லை.
ஆகவே ஊதியத்தை உடனடியாக பட்டுவாடா செய்யவேண்டுமென்று 28/5/2019 காலை முதல் ஊதியம் கொடுக்கும் வரை திருச்சி PGM அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.ஆகவே அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களூம் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
BSNLEU---------TNTCWU--------திருச்சி மாவட்ட சங்கங்கள்

Wednesday, 10 April 2019


                கண்டன ஆர்ப்பாட்டம்
BSNL ஐ புத்தாக்கம் செய்வதற்கு  VRS அமுல்படுத்தப்படும் என்று DOT யும் BSNL ம் மாறி மாறி கூறி வருகின்றன.VRS ஐ BSNL லில் அமுல்படுத்துவதை ஏற்கமாட்டோம் இதை உடனடியாக கைவிட வேண்டுமென்று இதை கண்டித்து வருகிற 12-4-2019 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டுமென்று BSNLEU,NFTE-BSNL,AIBSNLEA,BSNLMS,BSNL-ATM,TEPU,BSNLOA
ஆகிய சங்கங்கள் அறைகூவல் விட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தும் வகையில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
BSNLEU-NFTE-BSNL-AISBNLEA-TEPU-     TRICHY SSA

Saturday, 30 March 2019


                காத்திருப்பு போராட்டம்
ஓப்பந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை
அவர்களுடைய குடும்பம் சொல்லொண்ணா துயரை அடைந்து வருகிறது தின்பதற்கு சோறு இல்லாமல்,வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல்,
குழந்தைகளின் படிப்பு செலவு,மருத்துவ செலவுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள் ஆகவே வேறு வழியில்லாமல் 1/4/2019 காலை 10.00 மணி முதல் 3 மாத ஊதியம் உடனே வழங்ககோரியும்,ஊதியம் வழங்கும் வரை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதென்று BSNLEU TNTCWU இரண்டு மாநில சங்கங்களும் முடிவு செய்து அறிவித்துள்ளன அந்த அடிப்படையில் நமது மாவட்டத்தில் திருச்சி PGM அலுவலகத்தில் 1/4/2019 காலை 10.00 மணிக்கு BSNLEU மற்றும் TNTCWU தோழர்கள் பங்கேற்க வேண்டுமென தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
BSNLEU-TNTCWU திருச்சி மாவட்ட சங்கங்கள்


5/4/19 அன்று டெல்லியில் சஞ்சார்பவன் நோக்கி பேரணி
நம்முடைய முக்கியமான கோரிக்கைகளுக்காக டெல்லியில் சஞ்சார்பவன் நோக்கி பேரணி AUAB சார்பாக நடைபெறவுள்ளது.நமது சங்கத்திலிருந்து நாடு முழுவதிலிருந்து பல ஆயிரக்கணக்கான தோழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலம் சார்பாக  நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்கவுள்ளனர். நமது மாவட்டத்திலிருந்து 8 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல் மற்ற சங்கங்களூம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


25/3/19 அன்று GTI யின் முதல் கூட்டம்
அதிகாரிகளூக்கு இன்சூரன்ஸ் பணம் பிடிப்பதற்கு LIC யுடன் போடப்பட்டுள்ளது.அதேபோல் ஊழியர்களூக்கும் ஏற்பாடு செய்யவேண்டுமென்று கேட்டிருந்தோம் அதனுடைய முதல் கூட்டம் 25/3/19 அன்று நடைபெற்றது.தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.


28/3/19 அன்று AUAB தலைவர்கள் CMD ஐ சந்தித்து கீழ்கண்ட பிரச்சினைகள் சம்மந்தமாக விவாதித்தனர்
1)   பிப்ரவரி மாதம் நடைபெற்ற 3 நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களூக்கு FR-17A கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதை அறிந்து CDA RULE ல் அப்படிப்பட்ட ஏற்பாடு இல்லை ஆகவே . FR-17A கொடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள்.கைவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று உறுதியளித்துள்ளார்.
2)   3 நாள் வேலைநிறுத்தத்திற்கான சம்பளம் பிடித்தம் 28 நாள் கணக்கீடு செய்வதற்குப் பதில் 30 பதில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது இதனால் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.சரி செய்வதாக நிர்வாகம் ஓத்துக்கொண்டது.
3)   AUAB அறை கூவலான ஏப்ரல் 5 ந்தேதி டெல்லியில் சஞ்சார்பவன் நோக்கி பேரணியில் கலந்து கொள்பவர்களூக்கு NO WORK NO PAY என்பது அமுல்படுத்த வேண்டுமென்று SR BRANCH லிருந்து CGM க்கு கடிதம் அனுப்பபட்டுள்ளதை சுட்டிகாட்டி அதை வாபஸ் வாங்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.தலையிடுவதாக DIR HR கூறியுள்ளார்.


1/4/2019 முதல் IDA  2.6 கூடியுள்ளது 138.8 + 2.6 =  மொத்தம் 141.4 %

Saturday, 23 March 2019


திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பாக நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

Friday, 15 March 2019


                  AUAB கூட்டமுடிவுகள்
AUAB வின் கூட்டம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.இதை திருச்சியில் வெற்றிகரமாக நடத்துவோம்.
1.5.4.2019 அன்று டெல்லியில் சஞ்சார் பவன் நோக்கி பேரணி
2.BSNL சந்திக்கும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை விளக்கும் வகையில்
விரிவான சுற்றறிக்கையினை ஊழியர்களூக்கு அனுப்புவது.
3.ஆதரவு கோரும் வகையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அணுகுவது.
4.பிரதமர் அலுவலக முதன்மை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுவது.
5.அரசியல் கட்சிகளின் மாநில கட்சி தலைவர்களை சந்திப்பது
6.தொலைதொடர்பு துறையின் செயலாளரை சந்திக்க நேரம் கேட்பது.
7.பாராளூமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களை சந்திப்பது.
8.AUAB யின் கடுமையான எதிர்ப்பையும் மீறி டவர் பராமரிப்பை OUTSOURCING செய்ய எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து CMD க்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதுவது.
9.அனைத்து ஊழியர்களூம் TWITTER ல் கணக்கை துவங்கி SAVE BSNL கணக்கினை FOLLOW செய்வது

Thursday, 14 March 2019


BSNL ஊழியர்களூக்கு பிப்ரவரி மாத ஊதியம் வெள்ளிக்கிழமை (15/3/19) பட்டுவாடா செய்யப்படுமென்று நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளன



ரூ 7100/- லிருந்து ரூ 6550/- அடிப்படை ஊதிய குறைப்பு பிரச்சினை
இது சம்மந்தமாக 10/7/18 அன்று CMD ஐ சந்தித்து பேசும்போது அவரும் அதை நிவர்த்தி செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு OPTION கேட்கப்படும் என்று கூறினார்.ஆனால் இது வரை அதற்கான உத்தரவு வெளியாகவில்லை ஆகவே SR GM ESTT அவர்களை நமது தலைவர்கள் சந்தித்து பேசினார்கள் விரைவில் அதற்கான கடிதம் வெளியிடப்படும் என்று கூறினார்.


                பிப்ரவரி மாத ஊதியம்
BSNL ஊழியர்களுக்கும் அதிகாரிகளூக்கும் பிப்ரவரி மாத ஊதிய பட்டுவாடா சம்மந்தமாக CMD ஐ AUAB தலைவர்கள் 13/3/19 அன்று சந்தித்து பேசினார்கள்
CMD அவர்கள் 20/3/19 ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அதோடு BSNLன் நிலைமை சம்மந்தமாக ஊதிய தாமதம்,வருவாய் அதிகரிக்க விவாதிக்க சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென்று AUAB தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள். CMD யும் அதை ஏற்றுக்கொண்டார் விரைவில் அந்த கூட்டம் நடைபெறும்.