Friday 29 June 2018

BSNL அகில இந்திய‌ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பெங்களுருவில் 30/6/2018 அன்று நடைபெறவுள்ளது. 
ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழு

ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டுமென்று நமது
சங்கம் தொடர்ந்து நிர்வாகத்திடம் கேட்டு வந்தது கடந்த 19/6/18 அன்றும்
 GM SRசந்தித்தபோது   அவர் இன்னும் 10 நாளில் அமைக்கப்படுவிடும் என்று கூறினார்.
அதன்படி 28/6/18 அன்று கார்ப்பரேட் அலுவலகம் சங்கங்களீடம் இருந்து
முன்மொழிவுகளை கேட்டுள்ளது.அதன்படி முதன்மை சங்கத்திலிருந்து
 BSNLEU மூன்று உறுப்பினர்களும் இரண்டாவது சங்கங்கமான‌ NFTE-BSNL
சார்பாக 2 உறுப்பினர்கள் பெயர்கள் கொடுக்கவேண்டும், இது சம்மந்தமாக‌
நமது சங்கம் உடன்டியாக கடிதம் எழுதியுள்ளது.குறைந்தது தேசிய கவுன்சில்
அடிப்படையில் அதாவது BSNLEU க்கு-9 NFTEBSNL-க்கு   -5 உறுப்பினர்களை
ஒதுக்கவேண்டுமென்று கேட்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது யாரை நியமிப்பது என்று சங்கங்களின் விருப்பத்திற்கு
விட்டுவிட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

Wednesday 27 June 2018

ALL UNIONS AND ASSOCIATIONS -26-6-2018 கூட்ட முடிவுகள்

ALL UNIONS AND ASSOCIATIONS  சார்பாக  -26-6-2018 புதுடெல்லியில் நடைபெற்ற‌
கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவுகள்
BSNLEU---NFTE---SNEA---AIBSNLEA---FNTO---AIGETOA----BSNLMS----TEPU----BSNLATM
ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன.
24-2-2018 அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உறுதிமொழிகள்
பரிசிலீக்கப்பட்டு ஊதியமாற்றம் உள்பட பிரச்சினைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தை
கண்டிதது கீழ்க்ண்ட இயக்கங்கங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
1)11/7/18 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
2)24,25,26 ஜூலைமாவட்ட தலைநகரங்களில் தொடர் உண்ணாவிரதம்
3) விரைவில் அமைச்சரை சந்திப்பது
4) 4G SPECTRUM உடனடியாக BSNL க்கு கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியின்
அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டுமென்று அமைச்சருக்கு கடித்ம்
எழுதுவது
5) சிக்கன நடவடிக்கை அதிகாரிகளுக்கு அமுல்படுத்துவது

நமது திருச்சி மாவட்டத்தில் இந்த இயக்கங்களை வெற்றிகரமாக்க‌
அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்

Tuesday 26 June 2018

சம்பள தேதியை மாற்றுவதை எதிர்த்து CMD க்கு கடிதம்

சம்பள தேதியை 1ந்தேதி நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களூடன்
கலந்து பேசாமல் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இதை கண்டித்து
நமது சங்கத்தின் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து
பழைய முறையே தொடரவேண்டுமென்று கேட்டுள்ளார்.

Thursday 14 June 2018

                                        அகில இந்திய மாநாடு மைசூரில்

ம து அகில இந்திய மாநாடு வருகிற 2019 ம் ஆண்டு ஜனவரி 4ந் தேதி
முதல் 7ந்தேதி வரை கர்நநாடகா மாநிலம் மைசூரில் நடைபெறவுள்ளது.

Tuesday 5 June 2018

                                     JTO LICE தேர்வு உடனே நடத்துக‌

கடந்த 2013-14,2014-15,2015-16 JTO LICE தேர்வு நடைபெற்றது
2016-17,2017-18 காலி[பணியிடங்களுக்கான தேர்வு உடனடியாக‌
நடத்த வேண்டும் என்று நம்து பொதுசெயலர் கடிதம் எழுதியுள்ளார்.
                                    ஊதிய திருத்தம் தற்போதைய நிலை

ஊதிய திருத்தம் சம்மந்தமாக தற்போதைய நிலையை
நமது பொது செயலர் தோழர் அபிமன்யூ அவர்கள்   DOT DIRECTOR
திரு பவன்குமார் அவர்களை சந்தித்து 31/5/18 அன்று பேசினார்
அமைச்சரவைக்கு அனுப்ப வேண்டிய குறிப்பு தயாராகி 
கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.அதை விரைவு படுத்த வேண்டுமென்று
நமது பொது செயலர் கேட்டுக்கொண்டார்