Wednesday, 27 September 2017

OVERPAYMENT RECOVERY பிரச்சினை

OVERPAYMENT RECOVERY பிரச்சினை சம்மந்தமாக 4/9/17 மற்றும்
19/9/17 கார்ப்பரேட் அலுவலக உத்தரவுபடியும்
DOP & T 6/2/2014 தேதி  உத்தரவுக்கு முன் உள்ள CASE க‌ளை
CGM அவர்கள் தீர்த்துவைப்பது. 6/12/14 க்குபின் பிடித்தம்
செய்யப்பட்டிருந்தால் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு
அனுப்ப வேண்டும். இதை மாநில செயலர்களும், மாவட்ட‌
செயலர்களும் கண்காணிக்க வேண்டுமென்று மத்திய‌
சங்கம்கூறியுள்ளது.

கேடர் பெயர் மாற்ற கூட்டம் முடிவுகள்

கேடர் பெயர் மாற்ற கூட்டம் முடிவுகள்

கேடர்பெயர் மாற்ற கூட்டம் 26/9/17 அன்று நடைபெற்றது.
அதில் கீழ்கண்ட பெயர்கள் மாற்றம் செய்வது என்று முடிவு
செய்யப்பட்டது.
JAMADAR, TELEGRPHOVERSEER,TELEGRAPHMAN,LINEMAN,CARPENTER
MASON,PLUMBER,PAINTER,AC MECHANIC,SEWERMAN,WELDER,TECHNICIAN(TF)
WIREMAN,PUMPOPERATOR,AC OPERATOR ,OPERATOR(E &M)
போன்ற கேடர்களூக்கு----JOINT TELECOM TECHNICIAN என்ற பெயர்
மாற்றம் செய்யப்படுகிறது.

TOA 4 கேடர்களூக்கும் -----JUNIOR OFFICE ASSOCIATE என்று பெயர்
மாற்றம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி  ! மாபெரும் வெற்றி

ஈரோட்டில் நஷ்டம் எனற காரணத்தை காட்டி 10 வருடங்களூக்கும்
மேலாக பணீயாற்றியவர்களை 1/9/2017 முதல் பணிநீக்கம் செய்தது
நமது மாவட்டசங்கங்கள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித‌
முன்னேற்றமும் இல்லை.பல கட்ட போராட்டமும் நடத்திவிட்டார்கள்
நிர்வாகம் அசைய மறுத்தது.ஆகவே வேறுவழியின்றி இரண்டு மாநில‌
சங்கங்கள் அறைகூவல்விட்டதின் அடிப்படையில் தமிழ்மாநில‌
முழுவதிலிருமிருந்து 800 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மதியம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அத்தனைபேரையும் மீண்டும்
பணீக்கு எடுத்துக் கொள்வது என்ற உடன்பாடு ஏற்பட்டது.
வேலுரில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்கள்
போராடி மீண்டும் பணிக்கு எடுக்க வைத்தோம்
சென்னை CGM அலுவலகத்தில் 11 பேரை கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தார்கள்
போராடி மீண்டும் பணிக்கு எடுக்க வைத்தோம்
தற்போது ஈரோட்டில் அதை செய்து முடித்துள்ளோம்.
ஓப்பந்த தொழிலாளர்கள் ஓன்றும் அனாதைகளல்ல அவர்க்ளுக்கு BSNL ஊழியர்
சங்கமும் ,ஓப்பந்த தொழிலாளர் சங்கமும் பாதுகாவலனாக இருக்கும் என்பதை
மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளோம்.
போரடாமல் பெற்றதில்லை! போராடி நாம் தோற்றதில்லை! இறுதி வெற்றி நம‌தே!

Monday, 25 September 2017

                     அநீதி கண்டு வெகுண்டெழுந்து  வாருங்கள்

ஈரோட்டில் 33 ஓப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததை
கண்டித்தும் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்ககோரியும்
26/9/2017 அன்று மாநிலந்தழுவிய உண்ணாவிரத பொராட்டம்
நடைபெறவுள்ளது.பெருவாரியான தோழர்கள் கலந்து கொள்ள‌
வேண்டுமென தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Saturday, 23 September 2017

                            அனைவரும் ஒன்றிணைகிறார்கள்

ஊதியதிருத்தம் கிடைக்கப்பெறாத பொதுதுறை நிறுவனங்களின்
சங்கங்கள் INTUC,AITUC,HMS,CITU உள்பட ஒன்றினைந்து அடுத்த‌
கட்ட போராட்டம் நடத்துவதற்கு ஹைதராபாத்தில் வருகிற 22/10/2017
கூடி திட்டமிடவுள்ளன. அதில் நமது சங்கமும் கலந்து கொள்ளவுள்ளது.

                                              மீண்டும் முயற்சி

3வது ஊதிய திருத்தம் சம்மந்தமாக அமைச்சரவை முடிவு, DPE
உத்தரவு போன்றவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லாபம் ஈட்டக்கூடிய நிறுவனத்திற்கு மட்டும்தான்
ஊதியதிருத்தம் நஷ்டம் அடைந்திருக்கிற நிறுவனத்திற்கு ஊதியதிருத்தம்
இல்லை .அதாவது AFFORDABILITY CLAUSE எடுக்காதவரை BSNL க்கு ஊதிய‌
திருத்தம் கிடையாது.ஆகவே இதற்காக நாம் ஒரு நாள் வேலைநிறுத்தம்
செய்தோம்.அதன்பின் CMDயுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
மீண்டும் ஒரு கமிட்டி போட்டு அதன் மூலம் DOT க்கு அனுப்பபடும்
என்று கூறினார்.அதன்படி தற்போது 15% FITMENT கொடுக்கவேண்டுமென்று
MANAGEMENT COMMITTEE ஒப்புதல் கொடுத்துள்ளது.அத்ன்பின் BOARD
ஓப்புதல் பெற்று DOT க்கு அனுப்பபடும் .நாம் ஒன்றை தெளிவாக புரிந்து
கொள்ள வேண்டும்.இதன் மூலம் தானாக ஊதியதிருத்தம் கிடைத்துவிடும்
என்று கருத வேண்டாம். ஒரு கடுமையான போராட்டம் நடத்தினாலொழிய‌
ஊதியதிருத்தம் பெறமுடியாது.
ஆகவே அனைத்து சங்கங்களோடு பேசுவதற்கு கூட்டம் 26/9/17 அன்று
நடைபெறுகிறது.

தடுத்து நிறுத்தப்பட்டது கார்ப்பரேட் அலுவலக உத்தரவு

நாடுமுழுவதும் CUSTOMER SERVICE CENTRE களை FRANCHISE
களுக்கு விடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்து டெண்டரும் 
கோரியிருந்தது .மத்திய சங்கம் இதை உடனடியாக கைவிட‌
வேண்டுமென்று என்றும் கண்டனம் தெரிவித்ததோடு ,க‌டிதமும்
எழுதியிருந்தது. அதன்பின் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது
அதில் கீழ்கண்ட உடன்படிக்கை எற்பட்டது.
1)நாடு முழுவதும் டெண்டர் விட்டது நிறுத்தி வைக்கப்படுகிறது.
2)ஒவ்வொரு மண்டலத்திலும் 3 CSC பரிட்சார்த்த அடிப்படையில் விடுவது
3) நாடு முழுவதும் உள்ள CSC களில் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வளவு
பேர்,அவர்களுடைய வயது  என்ன என்ற விபரஙகளை திரட்ட முடிவு
செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது.

Thursday, 14 September 2017

14/9/17 மத்திய சங்கம் DOT க்கு கடிதம்

துணை டவர் கம்பெனி உருவாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து
DOT செகரட்டரிக்கு நமது பொதுசெயலர் கடிதம் எழுதியுள்ளார்.
                               நிர்வாகம் தூக்கத்திலிருந்து விழித்தது

சென்னை CGM அலுவகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்வதென்று
முடிவு செய்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது .இந்த சூழ்நிலையில்
நிர்வாகம் மாநில சங்கங்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
அதோடு மாவட்ட நிர்வாகங்களூக்கு பல்வேறு கடிதங்கள் எழுதி வருகிறது.நாமும்
நிலைமையை கண்காணித்து வருகிறோம்.19,20,21 மூன்று நாட்கள் சென்னை 
உண்ணாவிரதத்திற்கான பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன்.

Tuesday, 12 September 2017

                              சென்னை போராட்டம் ஓத்திவைப்பு

நிர்வாகத்தின் தலையீட்டின் காரணமாக சென்னையில் நடைபெற‌
இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒரு வார காலத்திற்கு தள்ளி
வைப்பு. 19/9/17 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
சென்னை செல்ல தயாராக இருப்போம்.

Thursday, 7 September 2017

                                                       வெட்கக்கேடு

மத்திய BJP மோடி அரசாங்கம்  கார்ப்பரேட்களுக்கு 
சலுகைகள்,உதவிகள் செய்துவருவது நம் அனைவருக்கும்
தெரியம். ஆனால் தற்போது செய்திருப்பது அப்பட்டமாக‌
தெரிகிறது.
தபால் அலுவலகஙகளில் RELIANCE JIO சிம் விற்பதற்கு
உடன்பாடு போடப்பட்டு. உத்திரபபிரதேச மாநிலம்
லக்னோவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அரசு நிறுவனமான BSNL  சிம்மை விற்பதற்கு இதுவரை
முயற்சி செய்யவில்லை.கார்ப்பரேட் சிம்மை விற்பதற்கு
அனுமதி கொடுத்துள்ளதை நாம் வெட்கப்பட வேண்டிய விஷ்யம்
                                  பூனைகுட்டி வெளியில் வந்தது

நாட்டின் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் பணியில்
தனியாரையும் ,ப்ன்னாட்டு நிறுவனங்களையும் மோடி
அரசாங்கம் அனுமதி கொடுத்துளளதற்கு நாட்டின் பற்று
உள்ள அனைவரும் எதிர்த்து வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்புக்கு ,இறையாண்மைக்கு ஆபத்து என்று
தெரிந்துருந்தும் BJP அரசாங்கம் இதை செய்கிறது. தற்போதுதான்
தெரிகிறது இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கொள்ளையடிக்க‌
கொண்டுவரப்பட்டுளளது.
கொளதம் அதானி சுவீடன் கம்பெனியுடன் உடன்பாடு போட்டு
ஃபட்டர் ஜெட் விமானம் தயாரிக்கவுள்ளார்.

அரசு நிறுவனஙகள் ,பொதுதுறை நிறுவனங்கள் தனியார்மயப்படுத்துவது
கார்ப்பரேட் நலன்கருதிதான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்

                                      மீண்டும் பட்டை நாமம்

BSNL  ஊழியர்களுக்கு 15% பிட்மமெண்ட் அடிப்படையில்
ஊதியதிருத்தம் செய்ய ஆதரவாக இருந்தாலும் DOT
தயாராக இல்லை

சமீபத்தில் நம்பதகுந்த வட்டாரங்களீலிருந்து கிடைத்துள்ள‌
செய்தி என்னவென்றால் BSNL நிதி நிலைமை சரியில்லை ஆகவே
BSNL ஊழியர்களூக்கு ஊதிய திருத்தம் செய்ய வேண்டாம் என்று
அமைச்சரிடம் கூறியுள்ளது. அமைச்சரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
DOT ஆதரவாக உள்ளது அமைச்சர் ஆதரவாக உள்ளார் என்று நம்மிடையே
சில தலைவர்கள் கூறினார்கள்.BSNL ஊழியர் சங்கம் திரும்ப திரும்ப சொல்லி
வருகிறது இந்த அரசாங்கத்தின் குணத்தை புரிந்து கொண்டு ஒன்று பட்டு
போராடினால்தான் முடியும் நாம் ஊதிய்ருத்தம் பெற முடியும் என்பதை
தற்போதாவது புரிந்து கொண்டு ஒன்று பட்ட போராட்டத்திற்கு தயாராவொம்

அதற்கு சமிபத்திய உதாரணம் நிலக்கர் ஊழியர்கள் போராட்டம்.அங்கு
BMS உள்பட ஒன்றுபட்டு நின்று போராடி 20 சதவீதம் 5 ஆண்டு ஒப்பந்தம்
என்பதை நிறை வேற்றவுள்ளனர்.இத்தனைக்கும் DPE கூறியது 15% பத்து
ஆண்டு என்பதை ஒன்றுபட்டு முறியடித்துள்ளனர்.
தேசிய கவுன்சில் முடிவுப்படி JTO CIVIL   ம்ற்றும்  ELECTRICAL
LICE தேர்வுகளை உடனடியாக நடத்தவும் மத்தியசஙகம் கோரிக்கை

கேடர்பெயர் மாற்ற கூட்டம் 

கேடர்பெயர் மாற்ற கூட்டத்தில் 
DRAFTS MAN   கேடர்  JE CIVIL என்றும்
CHARGEMAN    கேடர்   JE TF    என்றும் பெயர் மாற்ற‌
ஒத்துக்கொண்டுள்ளது.
மற்ற 15 கேடர்கள் சம்மந்தமாக 26/9/17 அடுத்த கூட்டத்தில்
தொடர்ந்து விவாதிப்பது.
                          தயாராவோம் சென்னையை நோக்கி

அன்பார்ந்த தோழர்களே ஓப்பந்த தொழிலாளர்களூக்கு
பிரதிமாதம் 7ந் தேதி ஊதியம் வழங்க வேண்டுமென்று
கார்ப்பரேட் அலுவலக உத்தரவு இருந்தும் அதை நடைமுறை
படுத்துவதில்லை,19/1/17 முதல் அரியர்ஸ் இன்னும் வழஙகவில்லை
இது போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை CGM
அலுவலத்தில் 12/9/17,13/9/17,14/9/17 ஆகிய மூன்று நாட்கள் தொடர்
உண்ணாவிரதம் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,
நமது மாவட்டத்திலிருந்து 14/9/17 அன்று கலந்து கொள்ளவேண்டும்
ஆகவே நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட ,பிரச்சினைகள்
தீர்வதற்கு சென்னை செல்ல தயாராவோம்

Tuesday, 5 September 2017

                                              வாழ்த்துக்கள்

நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக‌
JAO தேர்வு முடிவுகளை மறு பரிசிலனை செய்ய வேண்டும்
என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் திருத்தப்பட்ட‌
RESULT வெளீயாகியுள்ளது அதில் நமது ரூரல் நார்த் கிளையின்
தலைவரும் மணச்சநல்லூரில்  JE  ஆக பணிபுரிவருமான 
தோழர் S. கண்ணன் JAO தேர்வில் வெற்றிபெற்றுள்ளார்
அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

இதற்கு முயற்சி எடுத்த நமது மத்திய சங்க்த்திற்கு நமது நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறோம்
                                   அஞ்சலி செலுத்துகிறோம்

2/9/17 அன்று பணீக்கு செல்லும்போது புதிதாக நேரடி நியமனத்தில்
பணீக்கு வந்த தோழர் ஜீவா JE அவர்களும் சுமார் 20 ஆண்டுகளாக‌
பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓப்பந்த ஊழியர் தோழர் கஜேந்திரன்
அவர்களூம் சாலைவிபத்தில் அகால மரமணமடைந்துள்ளனர்,
அவர்களுக்கு திருச்சி மாவட்டத்தின் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலையும்
வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.