Monday 30 July 2018

                                                   வாழ்த்துகிறோம்

மது முதன்மை பொதுமேலாளர்
திரு V.  ராஜூ அவர்கள் தமிழ்நாடு சர்க்கிளின் தலைமை பொதுமேலாளராக பதவிஉயர்வு பெற்றுள்ளார்.
அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

Sunday 29 July 2018

                                           நன்றி  நன்றி  நன்றி
 நமது துறை அமைச்சரோடு 24/2/18 நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகளை/உறுதிமொழிகளை அமுல்படுத்த வேண்டுமென்று 24/7/18 அன்று திருச்சியிலும்,25/7/18 அன்று புதுகோட்டையிலும்,26/7/18 அன்று கரூரிலும் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

Saturday 28 July 2018

நன்றி! நன்றி! நன்றி! 24.02.2018 அன்று மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் AUAB தலைவர்களுக்கு கொடுத்த உறுதிமொழியை அமலாக்க வலியுறுத்தி ஜூலை 24 முதல் 26வரை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் BSNLEU சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday 20 July 2018

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழுவின் மாநில மா நாடு பாண்டிச்சேரியில் 15/7/18 அன்று நடைபெற்றது.
அதில் நமது மாவட்டத்திலிருந்து 5 தோழியர்கள் கலந்து கொண்டனர்.
நமது மாவட்டத்தை சேர்ந்த தோழியர்
மல்லிகா மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர்களூக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநாட்டில் கலந்து கொண்ட நமது
தோழியர்களுக்கும் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்

 ஊதிய திருத்த பேச்சுவார்த்தை குழுவின் முதல் கூட்டம் 20/7/18 அன்று நடைபெற்றது.
அதில் நமது சங்கத்திலிருந்து 5 பேரும் NFTE  3 பேரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தை நடத்தி விரைவில் ஊதிய திருத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று நமது பொதுசெயலர் வலியுறுத்தினார்.  நிர்வாகமும் அதை ஏற்றுக்கொண்டது.அடுத்த கூட்டம் 9/8/18 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இரண்டு சங்கங்களும் இணைந்து ஊதியதிருத்தத்திற்கான முன்மொழிவை
கொடுப்பது.அதற்கான கூட்டம் 3/8/18 அன்று  நடைபெறும்.

Monday 9 July 2018

ஊதிய கூட்டுக்குழு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்குக‌

3வது ஊதியதிருத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை துவங்கலாம்
என்று DOT  உத்தரவிட்டபின்  நிர்வாகம் தரப்பில் 5 பேரும்
BSNLEU  சார்பாக 3 பேரும் NFTE  சார்பாக 2 பேரும் பெயர்
கொடுக்கவேண்டுமென்று நிர்வாகம் கடிதம் கொடுத்தது. உடனடியாக‌
நமது பொதுசெயலர் ஊழியர் தரப்பில் இன்னும் கூடுதலான உறுப்பினர்கள்
நியமிப்பதற்கு பரிசிலனை செய்ய வேண்டுமென்று கடிதம் கொடுக்கப்பட்டது
அதனடிப்படையில் தற்போது நிர்வாகம் BSNLEU     5 பேரும்   
 NFTE   3 பேரும் பெயர் கொடுக்கலாம் என்று சங்கங்களூக்கு கடிதம்
கொடுத்தது.அதனடிப்படையில் நமது சங்கத்திலிருந்து பெயர்கள் கொடுக்கப்பட்டு
விட்டது.நேற்றைய தினம்  (9/7/18) GM SR அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை
குழுவை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை துவங்கவேண்டுமென்று கேட்டுள்ளது.