Saturday, 30 March 2019


                காத்திருப்பு போராட்டம்
ஓப்பந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை
அவர்களுடைய குடும்பம் சொல்லொண்ணா துயரை அடைந்து வருகிறது தின்பதற்கு சோறு இல்லாமல்,வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல்,
குழந்தைகளின் படிப்பு செலவு,மருத்துவ செலவுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள் ஆகவே வேறு வழியில்லாமல் 1/4/2019 காலை 10.00 மணி முதல் 3 மாத ஊதியம் உடனே வழங்ககோரியும்,ஊதியம் வழங்கும் வரை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதென்று BSNLEU TNTCWU இரண்டு மாநில சங்கங்களும் முடிவு செய்து அறிவித்துள்ளன அந்த அடிப்படையில் நமது மாவட்டத்தில் திருச்சி PGM அலுவலகத்தில் 1/4/2019 காலை 10.00 மணிக்கு BSNLEU மற்றும் TNTCWU தோழர்கள் பங்கேற்க வேண்டுமென தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
BSNLEU-TNTCWU திருச்சி மாவட்ட சங்கங்கள்

No comments:

Post a Comment