Sunday 30 December 2018


அனைவருக்கும் புத்தாண்டு                         2019
                     நல்வாழ்த்துக்கள்

       BSNL ஊழியர் சங்கம் திருச்சி தொலைதொடர்பு மாவட்டம்

Tuesday 25 December 2018


வெகுண்டெழுந்து  போராடுவோம்
ஜனவரி 8,9 இரண்டு நாட்கள் பொதுவேலைநிறுத்தம்
மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத,விவாசாயிகள்
விரோத,பொதுதுறைக்களூக்கு எதிரான,தனியார்மய ஆதரவு கொள்கைகளை எதிர்த்து நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் 10 க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள்,பல நூறுக்கும் மேற்பட்ட துறைவாரி தொழிற்சங்கங்களும்
கலந்து கொள்ளவுள்ளன
இது புதிய பொருளாதார கொள்கை அமுல்படுத்தப்பட்டு நடக்கும் 18 வது பொதுவேலைநிறுத்தம் ஏற்கனவே நடைபெற்ற 17 வேலை நிறுத்தங்களிலும்
BSNL ஊழியர் சங்கம் என்ற அடிப்படையிலும்,K G BOSE அணியினர் என்ற அடிப்படையிலும் கலந்து கொண்டுள்ளோம்.
வருகிற ஜனவரி 8,9 நடைபெறுகிற இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் BSNL லில் BSNLEU,NFTE-BSNL,TEPU,BSNLMS ஆகிய நான்கு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்வது என்று நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் இதை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் பங்கேற்போம்| வெற்றி பெறச்செய்வோம்
BSNL EMPLOYEES UNION TRICHY SSA

Sunday 23 December 2018


வெற்றிகரமாக நடந்து முடிந்த அகில இந்தியமாநாடு
நமது அகில இந்திய மாநாடு டிசம்பர் 17 முதல் 20 வரை கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்றது.முதல் நாள் கருத்தரங்கம் மற்றும் பொதுஅரங்கில் சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அடுத்த மூன்று நாட்கள் நடைபெற்ற பொருளாய்வுகுழுவில் சார்பாளர்கள்,பார்வையாளர்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அறிக்கை மீது விவாதம்,நம்முடைய பிரச்சினைகளைப்பற்றி விவாதித்து 12 தீர்மானங்கள்,சங்க சட்டவிதிகளில் திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக        தோழர் அனிமேஷ்மித்ரா
பொதுசெயலராக           அபிமன்யூ
துணைபொதுசெயலராக  தோழர் ஸ்வபன்சக்கரவர்த்தி
பொருளாளராக                  கோகுல் போரா
உதவி பொதுசெயலராக         செல்லப்பா
உள்பட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

Sunday 9 December 2018

JTO தேர்வு காலியிடங்கள்
ஜனவரி 2019ல் 2016-17ஆம் ஆண்டுக்கான JTO தேர்வு நடைபெறவுள்ளது.

இதற்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

OC/MBC - 176
SC           -     56
ST           -     55   மொத்தம்---287
இலாகா அமைச்சருடன் அனைத்து சங்க கூட்டமைப்பு சந்திப்பு

 03/12/2018  நமது இலாக்கா அமைச்சருடன் அனைத்து  சங்க  கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதுநமது கோரிக்கைகளில்  கீழ்க்கண்ட  முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

4G அலைக்கற்றை ஒதுக்கீடு

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக மத்திய அமைச்சரவை  ஒப்புதல் விரைவில்  பெறப்படும்இதற்கான  பணியை  செய்து  முடிக்க  DOTயின்  மூத்த  அதிகாரி ஒருவர் சிறப்பு அதிகாரியாக   நியமிக்கப்படுவார்.

ஓய்வூதிய மாற்றம்

ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும்.ஊதியமாற்றத்திற்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும் இனி  யாதொரு சம்பந்தமுமில்லை...ஓய்வூதியமாற்றம் ஊதியமாற்றத்தோடு இனி இணைக்கப்படாது.

ஓய்வூதியப்பங்களிப்பு

வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு  என்ற மத்திய அரசு உத்திரவு BSNLலிலும் இனி அமுல்படுத்தப்படும்.

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பு

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு மார்ச் 2019 முதல் கூடுதலாக 3 சத ஓய்வூதியப்பங்களிப்பு செய்யப்படும்.   நாளடைவில் மீதமுள்ள 4 சத பங்களிப்பும் வழங்கப்படும்.

புதிய சம்பள விகிதங்களுக்கு ஒப்புதல்..

BSNL பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதங்களுக்கு ‘உரிய ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணியை செய்து முடிக்க DOT அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார்.

3வது ஊதிய மாற்றம்..

BSNL ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான 3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது பற்றி BSNL மற்றும் DOT இடையே ஒருமித்த கருத்து உருவாவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

எனவே ஊதியமாற்றத்தில் நல்லதொரு முடிவினை எட்டிட…BSNL மற்றும் DOTக்கு  கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய அவசியம் இருப்பதால் டிசம்பர் 10 அன்று நடைபெறவிருந்த  காலவரையரையற்ற வேலைநிறுத்தத்தை மறு அறிவிப்பு வரும்வரை ஒத்தி வைத்திட அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அமைச்சர் வழிகாட்டுதலின் படி அனைத்து சங்க கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திட DOT சார்பில் அதிகாரியை நியமித்திடு கூட்டமைப்பு - DOT செயலருக்கு கடிதம்...


வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அனைத்து சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகளை தொடர்ந்து விவாதிக்க DOT தரப்பிலிருந்து ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அனைத்து சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் தெவித்திருந்தார். DOT வெளியிட்ட மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரக்குறிப்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அமைச்சரின் வழிகாட்டுதலின் படி அதிகாரி ஒருவரை நியமிக்க  அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக கூட்டமையின் தலைவர் சந்தேஸ்வர் சிங் அவர்களும் ஒருங்கிணைப்பாளர் தோழர் அபிமன்யு அவர்களும் கூட்டாக கையெழுத்திட்டு திருமதி அருணா சுந்தரராஜன் , DOT செயலர் அவர்களுக்கு இன்று 06.12.2018 கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடித்தத்தில் அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரி DOT யின் கூடுதல் செயலராக இருப்பின் DOTயின் மீதான நம்பகத் தன்மை அதிகரிக்கும் என்றும் கூடிய விரைவில் அவ்வதிகாரியை நியமித்தால் மட்டுமே தொடர்ந்து விவாதித்து அமைச்சரின் உறுதிமொழிகள் நிறைவேறுவது என்பது நனவாகும் என்றும் ஊழியர் நலனை முன்னிட்டும் தொழில் அமைதியை காக்கவும் அனைத்து சங்க கூட்டமைப்புடன் விவாதிக்க அவரை விரைவாக நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கடிதத்தின் நகல் DOTயின் கூடுதல் செயலர் அன்சு பிரகாஷ் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஓப்பந்ததொழிலாளர்களுக்கு ஊதிய தாமதத்தை கண்டித்து இயக்கங்கள்

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அக்டோபர்,நவம்பர் மாத ஊதியம் இன்னும் வழங்கவில்லை.ஆகவே கீழ்கண்ட இயகக்ங்கள் நடத்த வேண்டுமென்று இரண்டு மாநில சங்கங்கள் அறிவித்துள்ளன.இதை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தும் வகையில் இரண்டு சங்கங்களின் உறுப்பினர்கள் கலநது கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
11/12/2018-------------------------கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்
14/12/2018------------------------மாலை நேர தர்ணா
BSNLEU-------------------------TNTCWU--------------------மாவட்ட சங்கங்கள் திருச்சி

Monday 3 December 2018


               நன்றி|  நன்றி  நன்றி
டிசம்பர் 3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தன்னை ஈடுபடுத்திகொள்ள நினைத்த ஊழியர்கள்,அதிகாரிகள்,ஓப்பந்ததொழிலாளர்கள்.ஆதரவு கொடுக்க நினைத்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
அடுத்த அறிவிப்பும் வரை வேலை நிறுத்தபோராட்டம் ஓத்திவைக்கப்பட்டுள்ளது.

ALL UNIONS AND ASSOCIATION OF BSNL TRICHY SSA

Saturday 24 November 2018


AUAB  சார்பாக வேலை நிறுத்த கூட்டங்கள்

26/11/18—மதியம் 1.30 மணி PGM அலுவலக் ம் திருச்சி
27/11/18-09.30 மணி திருவரங்கம்,மெயின்கார்டுகேட்
மாலை 4.00 மணி சாலை ரோடு உறையுர்
28/11/18-09.30 மணி BHEL TOWN SHIP EXCHANGE
29/11/18—கரூர்,குளித்தலை
30/11/18—பெரம்பலூர்
1/12/18—PGM அலுவலகம் திருச்சி
அனைத்து ஊழியர்களூம்,அதிகாரிகளூம் பங்கேற்க வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday 14 November 2018


3-12-2018  முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் AUAB அறைகூவல்
14/11/2018 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற AUAB  கூட்டத்தில்  நடைபெற்ற நமது இயக்கங்களையும்,6/11/2018 அன்று DOT, BSNLக்கு எழுதிய கடிதத்தில் நமது கோரிக்கைகளை நிராகரித்து இருப்பதையும் ஆழமாக விவாதித்து கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
1)   3வது ஊதிய திருத்தம் அமுல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவைக்கு அனுப்புவதற்கு பதிலாக கால தாமதத்தை தவிர்க்க  DOT யே ஓப்புதல் கொடுக்கவேண்டுமென்று வலியுறுத்துவது.
2)   3/12/2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு செல்வது
3)   அரசாங்கத்தின் திட்டங்களான NOFN,NFS,LWE ஆகிய பணிகளை புறக்கணிப்பது
4)   AUAB ல் அங்கம் வகிக்காத மற்ற சங்கங்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அழைப்பது

ஆகவே வேலைநிறுத்தம் ஓன்றே நமது கோரிக்கைகளை வென்றடைய முடியும்
நமது ஒன்றுபட்ட சக்தியினை திருச்சி மாவட்டத்தில் திரட்டுவோம்
வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்,கோரிக்கைகளை வெல்வோம்.

Monday 12 November 2018


அநீதிகண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடமால் அநீதி களைய முடியாது
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராவோம்
DOT செகரட்டரியுடன் 2/11/18 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின்
BSNL க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நமது கோரிக்கைகளான 3வது ஊதிய திருத்தம்,,4G ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு,பென்ஷன் பங்களிப்பு அடிப்படை ஊதியத்தில் இருக்க வேண்டுமென்பதை மறைமுகமாக நிராகரிக்ககூடிய வகையில் உள்ளது.ஆகவே நாம் ஒரு கடுமையான போராட்டம் நடத்தினால்தான் நம்முடைய கோரிக்கைகளை வெல்லமுடியும் ஆகவே ஏற்கனவே திட்டமிட்டபடி 30/11/18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராக வேண்டியுள்ளது.
ஊழியர்களை தயார்படுத்தும்விதமாக 14/11/18 அன்று நடைபெறவுள்ள மனிதசங்கிலி இயக்கத்தில் அனைத்து ஊழியர்களூம் ,அதிகாரிகளூம் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA
மனிதசங்கிலி இயக்கம் 14/11/18 அன்று மாலை 3.00 மணியளவில் ஆஞ்சனேயர் கோவிலிலிருந்து நமது அலுவலம் வரை

Wednesday 7 November 2018


                       நவம்பர்-20 தர்ணா
BSNL CASUAL CONTRACT WORKERS FEDERATION சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து 20/11/2018 தர்ணா நடத்தவுள்ளனர்.
1)குறைந்தபட்ச ஊதியம் ரூ 18000/ வழங்கவேண்டும்
2)ஊதிய பட்டுவாடா தாமதத்தை கண்டித்தும்
3) EPF,ESI முறையாக கட்டவேண்டுமென்றும்
4) பணிநீக்கம் செய்யப்பட்ட ஓப்பந்த தொழிலாளர்களூக்கு மீண்டும் பணி வழங்க கோரியும்
நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் இந்த தர்ணாவில் BSNL ஊழியர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவேண்டுமென்று நமது மத்திய சங்கம்
அறைகூவல்விட்டுள்ளது.
ஆகவே திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக்கும் வகையில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

Saturday 3 November 2018


PGM வுடன் சந்திப்பு------3/11/2018
நமது மாவட்டத்திற்கு பொறுப்பாக இருக்ககூடிய திரு.C.V.வினோத் PGM அவர்களை 3/11/2018 அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்
தோழர் T.தேவராஜ் மாவட்டதலைவர் தோழர் S.அஸ்லம்பாஷா மாவட்டசெயலாளர் தோழர் G.சுந்தரராஜீ மாநில உதவிபொருளாளர்        தோழர் R.கோபி மாவட்ட பொருளாளர்.
முதன்மை பொதுமேலாளர்கள் அவர்களின் அணுகுமுறை நன்றாக இருந்தது நாம் ஏற்கனவே ஓப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கவேண்டுமென்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் கடிதம் கொடுத்து பேசினோம்.அதனை தொடர்ந்து 29/10/18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதனை தொடர்ந்து புதிய முதன்மை பொதுமேலாளர் அவர்களூக்கு கடிதம் கொடுத்து பேசினோம்.அவரும் அனைத்து கான்ட்ராக்டர்களிடமும் பேசியுள்ளார்.அதனடிப்படையில் HOUSE KEEPING ல் பணியாற்றும் ஊழியர்களூக்கு ரூ 5250/ Manpower ல் பணியாற்றும் ஊழியர்களூக்கு ரூ 3500/ ம் பட்டுவாடாகியுள்ளது.அனைத்து ஓப்பந்த தொழிலாளர்களூக்கும் அனைத்து கான்ட்ராக்டர்களூம் போனஸ் பட்டுவாடா ஆகவில்லை உடனடியாக பொது மேலாளர் அவர்கள் தலையிடுவதாக உறுதியளித்துள்ளார்.
அதே போல் புதிய டெண்டரில் முழுவதுமாக கொடுக்கும் வகையில் கண்டிஷன் சேர்க்கப்படும். திறனுக்கேற்ற ஊதியம் கொண்டுவரப்படும் என்று
கூறினார். நமது பிரச்சினைகள் சம்மந்தமாக கடிதம் கொடுத்து விவாதித்தோம் அனைத்திற்கும் நல்ல தீர்வு கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
மீண்டும் வருகிற 14 ந்தேதி சந்திக்கலாமென்று கூறியுள்ளார்.
முதன்மை பொதுமேலாளர் அவர்க்ளூக்கு நம்முடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்


DOT SECRETARY வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை 2/11/2018
DOT SECRETARY வுடன் AUAB  தலைவர்களூடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
1.   3 வது ஊதியதிருத்தம் BSNL யிடம் சில சந்தேகங்கள் கேட்கப்பட்டுள்ளது அது கிடைத்தவுடன் அமைச்சரவை குறிப்பு தயார் செய்து மற்ற அமைச்சரகங்களூக்கு சுற்றுக்கு விடப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபடும். BSNL நிறுவனம் இந்த மாத இறுதிக்குள் DOT எழுப்பிய சந்தேகங்களூக்கு பதில் கொடுத்துவிடும்.மூன்று மாதங்களூக்குள் இதை முடிவுக்கவேண்டும் .பாராளூமன்ற தேர்தல் அறிவித்துவிட்டால் சிரமமாகிவிடுமென்று சொல்லப்பட்டது.விரைவில் தீர்த்துவைக்கப்படும் என்று   DOT SECRETARY உறுதியளித்தார்.
2.   4G ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு சம்மந்தமாக அமைச்சரவை குறிப்பு
மற்ற அமைச்சரகங்களூக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது பின் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபடும்
3.பென்ஷன் பங்களிப்பு உண்மை ஊதியத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை DOT யின் RECOMMENDATION வுடன் அடுத்த வாரம் DEPARTMENT OF EXPENDITURE க்கு அனுப்பபடும்
4.பென்ஷன் திருத்தம் சம்மந்தமான பிரச்சினையில் DOT SECRETARY அவர்கள் MEMBER SERVICES ஐ உடனடியாக இது சம்மந்தமாக தன்னுடன் விவாதிக்க வேண்டுமென்று கேட்டுள்ளார்.
5. நேரடி நியமன ஊழியர்களூக்கு ஓய்வூதிய பலன்களை
உயர்த்தி கொடுக்கவேண்டுமென்ற கோரிக்கை சம்மந்தமாக BSNL CMD தான் முடிவெடுக்கவேண்டுமென்று DOT SECRETARY கூறினார்.CMD அவர்கள் ஏற்கனவே இருந்ததைவிட இன்னும் கூடுதலாக 2 சதவீதம் உயர்த்துவதாக கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்குப்பின் AUAB தலைவர்கள் கூடி பேசினார்கள்.மற்ற பிரச்சினைகளில் DOT யின் பதில்கள் திருப்தியாக இருந்தாலும்  ஊதிய திருத்த பிரச்சினையில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை ஆகவே ஏற்கனவே திட்டமிட்ட 14 ந் தேதி பேரணி சக்திமிக்கதாக நடத்தவேண்டுமென்று AUAB கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
DOT SECRETARY ஐ சந்திப்பதற்கு முன் நடைபெற்ற AUAB கூட்டத்தில்
கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
1)   AUAB வின் சேர்மனாக தோழர் சந்தேஷ்வர்சிங் கன்வீனராக தோழர் அபிமன்யூ அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
2)   நிர்வாகத்திற்கு கொடுக்கும் கடிதங்களில் இருவரும் கையெழுத்து இட்டு தருவார்கள்
3)   வேலைநிறுத்த நோட்டீசீல் அனைத்து பொதுசெயலர்களூம் கையெழுத்து இடுவார்கள்
4)   இதேபோன்று அமைப்பு மாநில, மாவட்டங்களிலும் ஏற்படுத்தவேண்டும்.

Wednesday 31 October 2018


                       நன்றி நன்றி நன்றி
நேற்றைய தினம் 30/10/18 AUAB  சார்பாக நடைபெற்ற தர்ணாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
நம்முடைய போராட்டத்தின் வீச்சின்காரணமாக 2/11/18 மாலை 5.00 மணிக்கு
AUAB தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு DOT SECRETARY அழைப்பு விடுத்துள்ளார்.

Friday 26 October 2018


                                         CMD யுடன் சந்திப்பு
நமது பொதுசெயலர் தோழர் அபினயூ அவர்கள்  தோழர் அபினயூ அவர்கள் CMD ஐ 25/10/18 அன்று சந்தித்து மத்திய அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதற்கு CMD அவர்கள் ஏற்கனவே18/10/18  சந்திப்பதற்கு முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அது முடியவில்லை ஆகவே வருகிற 29/10/18 அன்று சந்திப்பதற்கு  முயற்சி செய்வதாக உறுதியளித்துள்ளார்.


      மத்திய செயற்குழுவின் முக்கிய முடிவுகள்
1)   மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெறும் 2019 ஜனவரி 8,9 நடைபெறும் இரண்டு நாள் வேலைநிறுத்ததில் நமது சங்கம் கலந்து கொள்வதோடல்லாமல்  அதை வெற்றிகரமாக நடத்தும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் விரிவடைந்த மாநில செயற்குழு நடத்து வேண்டும்
2)   AUAB அறிவித்துள்ள இயக்கங்களை வெற்றிகரமாக நடத்த பணியாற்ற வேண்டும்
3)   ஊதிய மாற்ற பிரச்சினையில் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களூம் கூட்டாக ஒற்றுமையுடன் பணியாற்றுவதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சிறப்பான ஊதிய திருத்தம் மற்றும் HRA பெறுவதை உறுதிபடுத்த வேண்டும்
4)   அகில இந்திய மாநாட்டிற்கான சார்பாளர் கட்டணம் ரூ 1000/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5)   BSNL CASUAL AND CONTRACT WORKERS FEDERATION அறிவித்துள்ள தர்ணாவை வெற்றிகரமாக்க நாம் முழுஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்
6)   BSNL புனரமைக்க கொண்டுவந்துள்ள திட்டமான BSNL AT YOUR DOOR STEP திட்டத்தை கீழ்மட்டம் வரை கொண்டு செல்ல நம்முடைய தோழர்கள் பணியாற்ற வேண்டும்.

Thursday 25 October 2018


       மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ன் 8/10/18 புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நமது மாவட்டத்தில் சிறப்பாக அமுல்படுத்துவதற்கான கூட்டம் 17/10/18 அன்று நடைபெற்றது.அதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,TEPU ஆகிய சங்கங்களின் சார்பாக தோழர்கள் கலந்து கொண்டனர்.கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1)   2000 நோட்டீஸ்கள் அச்சடித்து மாவட்டம் முழுவதும் வினியோகம் செய்வது.PGM OFFICE COMPOUND ல் 29/10/18 அன்று காலை வினியோகம் செய்வது.
2)   29/10/18 அன்று மதியம் 3.00 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
கூட்டம் நடத்துவது
3)   30/10/18 ஓரு நாள் தர்ணா திருச்சி PGM அலுவலகத்தில் நடத்துவது அனைத்து சங்கங்களிலிருந்தும் ஊழியர்களை திரட்டுவது.
4)   14/11/18 பேரணி மற்றும் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்துவது.
5)   30/11/18 க்குள் பிரச்சினை தீராவிட்டால் வேலைநிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிகைகளூக்காக ஊழியர்களை திரட்டுவது.
ஆகவே அனைத்து அதிகாரிகளூம்,ஊழியர்களூம் அனைத்து இயக்கங்களிலும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

போராடமல் பெற்றதில்லை, போராடி நாம் தோற்றதில்லை
ஓன்றுபடுவோம்| போராடுவோம்| வெற்றிபெறுவோம்|||

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA




Monday 15 October 2018


                    மாவட்டமாநாடு
நமது மாவட்டத்தின் 9வது மாநாடு கீரனுரில் 10/10/18 அன்று மாவட்டதலைவர் தோழர் தேவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதில் அகில இந்திய உதவிபொதுசெயலர் தோழர் S செல்லப்பா மாநில செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் நமது முதன்மை பொதுமேலாளர் திருமதி S E ராஜம் மற்றும் அதிகாரிகளும் நமது சகோதர சங்க தோழர்கள் G சுந்தரராஜூ மாநிலஉதவி பொருளாளர் தோழர் M மல்லிகா மாநில செயற்குழு உறுப்பினர் BSNL WWCC தோழர்  I ஜான்பாஷா DS AIBDPA தோழர் R கல்லடியான் மாநில செயற்குழு உறுப்பினர் TNTCWU G முபாரக் மாவட்ட செயலர் TNTCWU தோழர் சின்னையன் மாநில செயற்குழு உறுப்பினர் AIBDPA ஆகியோர் கலந்து கொண்டனர் செயல்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது, வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனாதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
1.மாவட்ட தலைவர்          தோழர் T. தேவராஜ்       TT  DTAX   TRICHY
2.மாவட்ட உதவி தலைவர்           G. கார்திகேயன்   AOS(G) CSC KARUR
3.”                                  K. ராஜப்பா        JE       PADALUR
4”                                  R  ஜம்புலிங்கம்     TT      VIRAGALUR
5”                                  U  பூம்பாவை      AOS(TG)   CSC PDK
6 மாவட்ட செயலாளர்               S  அஸ்லம்பாஷா  AOS(TG)   PGM-CSC           
7 மாவட்ட உதவி செயலர்           G. சுந்தரராஜூ      JE  AIRPORT TR
8 “                                 R முருகேசன்      TT  BAZAR KARUR
9”                                  G பாலசுப்ரமணியன் TT CM NWOP KRU
10 “                                A இளங்கோவன்    TT AUTO TRICHY
11 மாவட்ட பொருளாளர்             R கோபி           TT ARIYALUR
12.மாவட்ட உதவி பொருளாளர் “    P ரவிச்சந்திரன்  TT   TRICHY 
13.மாவட்ட அமைப்பு செயலர்      A  சண்முகம்     TT WORAIYUR TR
14.                               K பன்னீர்செல்வம் TT  KULITALAI
15                               K தியாகராஜன்  OS (T) PGM-CSC TR
16                               K. பொன்னுசாமி   TT  THUVARNKURICHY
17                               K. தண்டபானி     TT THENNILAI
18                               C ராஜேந்திரன்     TT KEERANUR                       

Wednesday 3 October 2018


                         
                    வாழ்த்துகிறோம்
28/1/2018 அன்று நடைபெற்ற JE தேர்வில் குறைந்த எண்ணிக்கையில்தான் தேர்வு பெற்றார்கள் காரணம் கேள்விதாள் கடினமாக இருந்ததும் ஆனால் காலிபணியிடங்கள் அதிகமாக இருந்தது .ஆகவே மதிப்பெண்ணில் தளர்வு கொடுக்க வேண்டும் அதன் மூலம் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில்
ஊழியர்கள் தேர்ச்சி பெறவாய்ப்பு ஏற்படும்.நிர்வாகத்திற்கும் கூடுதல் எண்ணிக்கையில் JE க்கள் கிடைப்பார்கள். 2008ல் நடைபெற்ற  நரடி நியமன தேர்வில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு மதிப்பெண்ணில் தளர்வு கொடுக்கப்பட்டது.அதை இலாகா தேர்வு எழுதிய ஊழியர்களூக்கும் கொடுக்க
வேண்டுமென்று தொடர்ச்சியாக நம்முடைய மத்திய சங்கம் கடிதம் கொடுத்து  நிர்வாகத்துடன் பேசிவந்தது.10/7/18 அன்று CMD வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் நாம் எடுத்துரைத்த நியாயத்தை உணர்ந்து ஆவண செய்வதாக உறுதியளித்தார் .அதனை தொடர்ந்து DIRECTOR HR அவர்களையும் சந்தித்து பேசியதின் விளைவாக தற்போது ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் 250 ஊழியர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். நமது மாவட்டத்தில் நமது சங்கத்தை சேர்ந்த தோழியர் இந்துமதி பள்ளப்பட்டி அவர்களும் தோழர் ரவிச்சந்திரன் பெரம்பலூர் அவர்களூம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தபிரச்சினையை விடாமல் நிர்வாகத்தோடு பேசி 250 ஊழியர்கள் பதவி உயர்வு பெற நடவடிகை எடுத்த மத்தியசங்கத்திற்கு நம்முடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்



                       வாழ்த்துகிறோம்
அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் திருப்பூரில் நடைபெற்ற TNTCWU  6வது  மாநிலமாநாட்டில் தோழர் முருகையா அவர்கள் தலைவராகவும் தோழர் வினோத்குமார் அவர்கள் மாநிலசெயலாளராகவும் தோழியர் பிரதீபா அவர்கள் பொருளாளராகவும் நம்முடைய மாவட்டத்தை சேர்ந்த தோழர் கல்லடியான் அவர்கள் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அவர்களூக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Friday 28 September 2018


2019 ஜனவரி 8,9 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் மத்திய தொழிறசங்கங்கள் அறைகூவல்
புதுடெல்லியில் இன்று (28//9/18) நடைபெற்ற மத்திய தொழி்ற்சங்கங்களின் சார்பாக நடைபெற்ற கருததரங்கில் மத்திய அரசாங்கம் கடைபிடிக்ககூடிய புதிய பொருளாதார கொள்கைகள்,பொதுதுறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது,தொழிலாளர்களுக்கு விரோதமான,கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கைகளை எதிர்த்து மூன்று நாள் புதுடெல்லியில் நடத்திய மாபெரும் தர்ணாவிற்குப்பின்னும் மத்திய அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளிலிருந்து மாறவில்லை .ஆகவே வருகின்ற 2019 ஜனவரி 8,9 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில் INTUC,AITUC,HMS,CITU,AIUTUC,TUCC,SEWA,AICCTU,LPF,UTUC ஆகிய மத்திய தொழிற்சங்கள் கலந்து கொண்டன.நம்முடைய சங்கங்களிலிருந்தும் கனிசமான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்

Thursday 27 September 2018


AUAB தலைவர்கள் அமைச்சருக்கு கடிதம்
AUAB தலைவர்கள் மத்திய நிதிதுறை இணைஅமைச்சர் திரு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களூக்கு 27/9/18 அன்று கடிதம் எழுதியுள்ளனர்.
ஓய்வூதிய பங்களிப்பு வாங்கும் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில்இருக்க வேண்டுமென்கிற அரசாங்க உத்தரவை BSNL க்கும் அமுல்படுத்துவதற்கு தாங்கள் தலையிட வேண்டுமென்றும் இதுசம்மந்தமாக தங்களை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கவேண்டுமென்று கேட்டுள்ளார்கள்.இதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,AIGETOA,BSNLMS,TEPU,BSNLATM,BSNLOA பொதுசெயலர்கள் கையெழுத்திட்டுள்ளனர்


Wednesday 26 September 2018


25-9-2018 அன்று நடைபெற்ற ஊழியர் தரப்பு கூட்டம்
ஊதிய திருத்தத்திற்கான ஊழியர் தரப்பு கூட்டம் 25/9/18 அன்று NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நமது பொதுசெயலர் தோழர் அபிமன்யூ NFTE பொதுசெயலர் தோழர் சந்தேஷ்வர்சிங் உள்பட தோழர்கள் கலந்து கொண்டனர்.அதில் ஊதிய விகிதங்கள் சம்மந்தமாக உறுப்பினர்களிடமிருந்து கருத்து கேட்ட நிலையில் ஊதிய தேக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்ற நிலையில் DOT யின் ஒப்புதல் பெறும் வகையில் அனுப்புவதற்கு ஏதுவாக ஊதிய திருத்தத்தில் விரைவில் உடன்படிக்கை கையெழுத்து காணுவதற்கு முயற்சி கொள்ளவேண்டும்.அடுத்து பெர்க்ஸ் மற்றும் அலவன்சுகள் சம்மந்தமாக உடனடியாக பேச்சுவார்த்தை துவங்க வேண்டும்.இது DOT க்கு போகவேண்டிய அவசியமில்லை BSNL BOARD ஒப்புதல் கொடுத்தாலே போதுமானது. அதற்கான நடவடிகை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.



Friday 14 September 2018


காத்திருப்பு போராட்டம்  17-9-2018  காலை 10.00 மணிமுதல் PGM OFFICE TRICHY
ஓப்பந்த தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 7ம் தேதியன்று ஊதியம் வழங்கவேண்டுமென்று கார்ப்பரேட் அலுவலக உத்தரவு,DLC  உத்தரவு எதையும் மதிக்காமல் 15ம் தேதிக்குமேல் அதுவும் போராட்டம் நடத்திதான் ஒவ்வொரு மாதமும் வாங்கவேண்டியுள்ளது. குறைந்த ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஒப்பந்த தொழிலாளர்கள் எவ்வளவு சிரமம் சந்ந்திப்பார்கள் என்பதை கான் ட்ராக்டர்களூம் உணர்வதில்லை.PRINCIPAL EMPLOYER என்ற அடிப்படையில் நிர்வாகமும் உணர்வதில்லை கேட்டால் பல்வேறு விளக்கங்களை சொல்லிக்கொண்டிருக்கிறது, ஆனால் பிரச்சினை தீர்ந்தபாடில்லை இந்த நிலைமை தமிழ்நாடு முழுவதும் உள்ளது. சில மாவட்டங்களில் ஜூலை,ஆகஸ்ட் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவிலலை.ஆகவே BSNLEU,TNTCWU,NFTE மாநில சங்கங்கள் இணைந்து 17/9/18 முதல் ஊதியம் வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து அறைகூவல்விட்டுள்ளன.
அனைத்து ஒப்பந்ததொழிலாளர்களும் அவர்களூக்கு ஆதரவாக இரண்டு சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

Monday 3 September 2018


                       வாழ்த்துகிறோம்
மத்திய அரசின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் இணைந்து செபடம்பர் 5 ம் தேதி புதுடெல்லியில் மாபெரும் பேரணி நடத்தவுள்ளனர்.அதில் இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.நமது சங்கத்திலிருந்து இந்தியா முழுவதிலிமிருந்து சுமார் மூன்றாயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலத்திலிருந்து சுமார் 250 க்கும் மேற்படோர் கலந்து கொள்ளவுள்ளனர்.நமது மாவட்டத்திலிருந்து இரண்டு பேர் கலந்துகொள்ளவுள்ளனர்
அனைவரையும் வாழ்த்துகிறோம்..

Tuesday 28 August 2018

ஊதிய மாற்றக் குழுவின் மூன்றாவது கூட்டம்
ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் தலைமையில் 27.08.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தின் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு பெற்றனர். கடந்த கூட்டத்தில் ஊழியர் தரப்பு தங்களின் முன்மொழிவை கொடுத்திருந்தது. இந்தக் கூட்டத்தில் நிர்வாக தரப்பு அவர்களின் முன் மொழிவை முன்வைத்தது. நிர்வாக தரப்பில் புதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவிற்கு பழையை ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச ஊதியத்தை 2.4ஆல் பெருக்கி NE1ன் குறைந்த பட்ச ஊதிய விகிதத்தை 18,600 ரூபாய் என முன்வைத்தது. ஊழியர் தரப்பு அதனை ஏற்றுக் கொள்ளாமல் பெருக்கல் காரணி என்பது 2.44ஆக இருக்க வேண்டும் என்றும் அதன் காரணமாக E1 ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவு ரூ.18,934/- என இருப்பதை முழுமையாக்கி ரூ.19,000/- என இருக்க வேண்டும் என்று வாதிட்டனர். அத்துடன் அனைத்து ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவை கணக்கிட பெருக்கல் காரணியாக 2.44 என்பதை அடிப்படையாக வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதனை பரிசீலிக்க நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. 
ஊதிய விகிதத்தின் கால அளவு 43 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் முன்வைத்த ஆலோசனைக்கு பதிலளித்த நிர்வாக தரப்பு, இதன் காரணமாக ஓய்வூதிய பங்கீட்டில் செலவு கடுமையாக உயரும் என தெரிவித்தது. ஊதிய மாற்றத்திற்கு பின் எந்த ஒரு ஊழியரும் ஊதிய தேக்க நிலையை அடைந்துவிடாமல் இருப்பதற்கு தேவையான கால அளவு இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்தை 10.09.2018 அன்று நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது. 
பேச்சு வார்த்தை மிக மெதுவாக செல்வது குறித்து ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். இதே வேகத்தில் சென்றால் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க முடியாது என்று தெரிவித்த அவர்கள் இன்னமும் குறைந்த கால இடைவெளியில் இந்தக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். 

Monday 27 August 2018


               ஊதிய திருத்த பேச்சுவார்த்தை-27-8-18
மூனறாவது கட்டமாக 27/8/18 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
நிர்வாகம்—பழைய அடிப்படை சம்பளம் அதனுடன் 2.4 காரணி பெருக்கலாக வரக்கூடிய ரூ 18600/-NE-1 க்கு என்பதை முன்மொழிந்தது
ஊழியர் தரப்பு --- அடிப்படை சம்பளம் அதனுடன் 2.4 காரணி பெருக்கலாக
வரக்கூடிய ரூ 18944/- NE-1 க்கு என்பதை ரூ 19000/- என்பதை வலியுறுத்தினார்கள். நிர்வாகம் பரிசிலிப்பதாக கூறியுள்ளது.
ஊழியர் தரப்பு-----MAXIMUM என்பதை 43 வருஷமாக இருக்கவேண்டுமென்று கேட்கப்பட்டது.
நிர்வாகதரப்பு------அவ்வளவு அதிகமாக  நீட்டமுடியாது காரணம் பென்ஷன் பங்களிப்பு செலவு அதிகமாகும்.ஆனால் ஊழியர் தரப்பு அதிக பட்சமாக நீட்ட வேண்டுமென்று எந்த ஊழியரும் பாதிக்ககூடாது. என்று கோரினார்கள் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த கூட்டம் 10/9/18 அன்று நடைபெறும்

Wednesday 22 August 2018


                   நன்றி| நன்றி| நன்றி|



கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த மா நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நிதி வழங்கவேண்டுமென்று அனைவரிடமும் கேட்டோம். அந்த வகையில்
நன்கொடை அளித்துள்ளார்கள்
PGM OFFICE             RS 11805-
AUTOEXGE               RS 1750
KARUR                 RS 8700
ARIYALUR              RS 1800
CANT TR              RS 1700
                   ________________
TOTAL               RS 25755
                  _______________________
நன்கொடை அளித்த அனைவருக்கும் நம்முடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.       


Friday 17 August 2018

                               கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்

முன்னாள் பிரதமர் ,பாரதரத்னா விருதுபெற்றவரும் ,கவிஞருமான திரு
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்
காலமாகிவிட்டார் என்பதை கேட்டு வருத்தம் அடைந்தோம்.
அன்னாரது பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

Tuesday 14 August 2018

                                              நன்றி| நன்றி| நன்றி|
கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் வகையில் நன்கொடை
வழங்கவேண்டும் என்று கேட்டோம் ஊழியர்கள்,அதிகாரிகள்,ஓப்பந்த தொழிலாளர்கள் ரு 11605/- கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

Sunday 12 August 2018

                                   கேரளத்திற்கு உதவிடுவோம்

கடந்த 5 நாட்களுக்காக பெய்யும் கடும் மழையால் கேரளாவிலுள்ள 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அங்கு வசிக்கும் மக்கள் வீடிழந்து பொருட்களை இழந்து
தவிக்கின்றனர். கேரள அரசாங்கம் போர்கால நடவடிகையை மேற்கொண்டுள்ளது. இருந்தும் நாமும்
நம்முடைய உதவியை செய்யும் வகையில் நன்கொடை வசூலித்து அனுப்புவோம்.ஆகவே தோழர்கள் தாராளமாக  நிதிஉதவி அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்

Tuesday 7 August 2018

                                    கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்

முன்னாள் முதல்வர்,போராளி,பன்முகதன்மை கொண்ட டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் மறைவிற்கு நம்முடைய ஆழ் ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

Sunday 5 August 2018

                                              வாழ்த்துகிறோம்

தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் 5வது மாவட்டமாநாடு திருவெறும்பூர் 
5/8/18 அன்று நடைபெற்றது. அதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
தோழர் G  சுந்தராஜீ மாவட்டதலைவராகவும் தோழர் முபாரம் மாவட்டசெயராகவும் தோழர் A சண்முகம் மாவட்டபொருளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
அவர்களூக்கு நமக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday 30 July 2018

                                                   வாழ்த்துகிறோம்

மது முதன்மை பொதுமேலாளர்
திரு V.  ராஜூ அவர்கள் தமிழ்நாடு சர்க்கிளின் தலைமை பொதுமேலாளராக பதவிஉயர்வு பெற்றுள்ளார்.
அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

Sunday 29 July 2018

                                           நன்றி  நன்றி  நன்றி
 நமது துறை அமைச்சரோடு 24/2/18 நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகளை/உறுதிமொழிகளை அமுல்படுத்த வேண்டுமென்று 24/7/18 அன்று திருச்சியிலும்,25/7/18 அன்று புதுகோட்டையிலும்,26/7/18 அன்று கரூரிலும் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

Saturday 28 July 2018

நன்றி! நன்றி! நன்றி! 24.02.2018 அன்று மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் AUAB தலைவர்களுக்கு கொடுத்த உறுதிமொழியை அமலாக்க வலியுறுத்தி ஜூலை 24 முதல் 26வரை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் BSNLEU சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.