Friday 28 September 2018


2019 ஜனவரி 8,9 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் மத்திய தொழிறசங்கங்கள் அறைகூவல்
புதுடெல்லியில் இன்று (28//9/18) நடைபெற்ற மத்திய தொழி்ற்சங்கங்களின் சார்பாக நடைபெற்ற கருததரங்கில் மத்திய அரசாங்கம் கடைபிடிக்ககூடிய புதிய பொருளாதார கொள்கைகள்,பொதுதுறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது,தொழிலாளர்களுக்கு விரோதமான,கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கைகளை எதிர்த்து மூன்று நாள் புதுடெல்லியில் நடத்திய மாபெரும் தர்ணாவிற்குப்பின்னும் மத்திய அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளிலிருந்து மாறவில்லை .ஆகவே வருகின்ற 2019 ஜனவரி 8,9 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில் INTUC,AITUC,HMS,CITU,AIUTUC,TUCC,SEWA,AICCTU,LPF,UTUC ஆகிய மத்திய தொழிற்சங்கள் கலந்து கொண்டன.நம்முடைய சங்கங்களிலிருந்தும் கனிசமான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்

Thursday 27 September 2018


AUAB தலைவர்கள் அமைச்சருக்கு கடிதம்
AUAB தலைவர்கள் மத்திய நிதிதுறை இணைஅமைச்சர் திரு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களூக்கு 27/9/18 அன்று கடிதம் எழுதியுள்ளனர்.
ஓய்வூதிய பங்களிப்பு வாங்கும் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில்இருக்க வேண்டுமென்கிற அரசாங்க உத்தரவை BSNL க்கும் அமுல்படுத்துவதற்கு தாங்கள் தலையிட வேண்டுமென்றும் இதுசம்மந்தமாக தங்களை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கவேண்டுமென்று கேட்டுள்ளார்கள்.இதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,AIGETOA,BSNLMS,TEPU,BSNLATM,BSNLOA பொதுசெயலர்கள் கையெழுத்திட்டுள்ளனர்


Wednesday 26 September 2018


25-9-2018 அன்று நடைபெற்ற ஊழியர் தரப்பு கூட்டம்
ஊதிய திருத்தத்திற்கான ஊழியர் தரப்பு கூட்டம் 25/9/18 அன்று NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நமது பொதுசெயலர் தோழர் அபிமன்யூ NFTE பொதுசெயலர் தோழர் சந்தேஷ்வர்சிங் உள்பட தோழர்கள் கலந்து கொண்டனர்.அதில் ஊதிய விகிதங்கள் சம்மந்தமாக உறுப்பினர்களிடமிருந்து கருத்து கேட்ட நிலையில் ஊதிய தேக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்ற நிலையில் DOT யின் ஒப்புதல் பெறும் வகையில் அனுப்புவதற்கு ஏதுவாக ஊதிய திருத்தத்தில் விரைவில் உடன்படிக்கை கையெழுத்து காணுவதற்கு முயற்சி கொள்ளவேண்டும்.அடுத்து பெர்க்ஸ் மற்றும் அலவன்சுகள் சம்மந்தமாக உடனடியாக பேச்சுவார்த்தை துவங்க வேண்டும்.இது DOT க்கு போகவேண்டிய அவசியமில்லை BSNL BOARD ஒப்புதல் கொடுத்தாலே போதுமானது. அதற்கான நடவடிகை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.



Friday 14 September 2018


காத்திருப்பு போராட்டம்  17-9-2018  காலை 10.00 மணிமுதல் PGM OFFICE TRICHY
ஓப்பந்த தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 7ம் தேதியன்று ஊதியம் வழங்கவேண்டுமென்று கார்ப்பரேட் அலுவலக உத்தரவு,DLC  உத்தரவு எதையும் மதிக்காமல் 15ம் தேதிக்குமேல் அதுவும் போராட்டம் நடத்திதான் ஒவ்வொரு மாதமும் வாங்கவேண்டியுள்ளது. குறைந்த ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஒப்பந்த தொழிலாளர்கள் எவ்வளவு சிரமம் சந்ந்திப்பார்கள் என்பதை கான் ட்ராக்டர்களூம் உணர்வதில்லை.PRINCIPAL EMPLOYER என்ற அடிப்படையில் நிர்வாகமும் உணர்வதில்லை கேட்டால் பல்வேறு விளக்கங்களை சொல்லிக்கொண்டிருக்கிறது, ஆனால் பிரச்சினை தீர்ந்தபாடில்லை இந்த நிலைமை தமிழ்நாடு முழுவதும் உள்ளது. சில மாவட்டங்களில் ஜூலை,ஆகஸ்ட் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவிலலை.ஆகவே BSNLEU,TNTCWU,NFTE மாநில சங்கங்கள் இணைந்து 17/9/18 முதல் ஊதியம் வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து அறைகூவல்விட்டுள்ளன.
அனைத்து ஒப்பந்ததொழிலாளர்களும் அவர்களூக்கு ஆதரவாக இரண்டு சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

Monday 3 September 2018


                       வாழ்த்துகிறோம்
மத்திய அரசின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் இணைந்து செபடம்பர் 5 ம் தேதி புதுடெல்லியில் மாபெரும் பேரணி நடத்தவுள்ளனர்.அதில் இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.நமது சங்கத்திலிருந்து இந்தியா முழுவதிலிமிருந்து சுமார் மூன்றாயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலத்திலிருந்து சுமார் 250 க்கும் மேற்படோர் கலந்து கொள்ளவுள்ளனர்.நமது மாவட்டத்திலிருந்து இரண்டு பேர் கலந்துகொள்ளவுள்ளனர்
அனைவரையும் வாழ்த்துகிறோம்..