Sunday 30 December 2018


அனைவருக்கும் புத்தாண்டு                         2019
                     நல்வாழ்த்துக்கள்

       BSNL ஊழியர் சங்கம் திருச்சி தொலைதொடர்பு மாவட்டம்

Tuesday 25 December 2018


வெகுண்டெழுந்து  போராடுவோம்
ஜனவரி 8,9 இரண்டு நாட்கள் பொதுவேலைநிறுத்தம்
மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத,விவாசாயிகள்
விரோத,பொதுதுறைக்களூக்கு எதிரான,தனியார்மய ஆதரவு கொள்கைகளை எதிர்த்து நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் 10 க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள்,பல நூறுக்கும் மேற்பட்ட துறைவாரி தொழிற்சங்கங்களும்
கலந்து கொள்ளவுள்ளன
இது புதிய பொருளாதார கொள்கை அமுல்படுத்தப்பட்டு நடக்கும் 18 வது பொதுவேலைநிறுத்தம் ஏற்கனவே நடைபெற்ற 17 வேலை நிறுத்தங்களிலும்
BSNL ஊழியர் சங்கம் என்ற அடிப்படையிலும்,K G BOSE அணியினர் என்ற அடிப்படையிலும் கலந்து கொண்டுள்ளோம்.
வருகிற ஜனவரி 8,9 நடைபெறுகிற இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் BSNL லில் BSNLEU,NFTE-BSNL,TEPU,BSNLMS ஆகிய நான்கு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்வது என்று நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் இதை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் பங்கேற்போம்| வெற்றி பெறச்செய்வோம்
BSNL EMPLOYEES UNION TRICHY SSA

Sunday 23 December 2018


வெற்றிகரமாக நடந்து முடிந்த அகில இந்தியமாநாடு
நமது அகில இந்திய மாநாடு டிசம்பர் 17 முதல் 20 வரை கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்றது.முதல் நாள் கருத்தரங்கம் மற்றும் பொதுஅரங்கில் சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அடுத்த மூன்று நாட்கள் நடைபெற்ற பொருளாய்வுகுழுவில் சார்பாளர்கள்,பார்வையாளர்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அறிக்கை மீது விவாதம்,நம்முடைய பிரச்சினைகளைப்பற்றி விவாதித்து 12 தீர்மானங்கள்,சங்க சட்டவிதிகளில் திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக        தோழர் அனிமேஷ்மித்ரா
பொதுசெயலராக           அபிமன்யூ
துணைபொதுசெயலராக  தோழர் ஸ்வபன்சக்கரவர்த்தி
பொருளாளராக                  கோகுல் போரா
உதவி பொதுசெயலராக         செல்லப்பா
உள்பட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

Sunday 9 December 2018

JTO தேர்வு காலியிடங்கள்
ஜனவரி 2019ல் 2016-17ஆம் ஆண்டுக்கான JTO தேர்வு நடைபெறவுள்ளது.

இதற்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

OC/MBC - 176
SC           -     56
ST           -     55   மொத்தம்---287
இலாகா அமைச்சருடன் அனைத்து சங்க கூட்டமைப்பு சந்திப்பு

 03/12/2018  நமது இலாக்கா அமைச்சருடன் அனைத்து  சங்க  கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதுநமது கோரிக்கைகளில்  கீழ்க்கண்ட  முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

4G அலைக்கற்றை ஒதுக்கீடு

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக மத்திய அமைச்சரவை  ஒப்புதல் விரைவில்  பெறப்படும்இதற்கான  பணியை  செய்து  முடிக்க  DOTயின்  மூத்த  அதிகாரி ஒருவர் சிறப்பு அதிகாரியாக   நியமிக்கப்படுவார்.

ஓய்வூதிய மாற்றம்

ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும்.ஊதியமாற்றத்திற்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும் இனி  யாதொரு சம்பந்தமுமில்லை...ஓய்வூதியமாற்றம் ஊதியமாற்றத்தோடு இனி இணைக்கப்படாது.

ஓய்வூதியப்பங்களிப்பு

வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு  என்ற மத்திய அரசு உத்திரவு BSNLலிலும் இனி அமுல்படுத்தப்படும்.

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பு

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு மார்ச் 2019 முதல் கூடுதலாக 3 சத ஓய்வூதியப்பங்களிப்பு செய்யப்படும்.   நாளடைவில் மீதமுள்ள 4 சத பங்களிப்பும் வழங்கப்படும்.

புதிய சம்பள விகிதங்களுக்கு ஒப்புதல்..

BSNL பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதங்களுக்கு ‘உரிய ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணியை செய்து முடிக்க DOT அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார்.

3வது ஊதிய மாற்றம்..

BSNL ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான 3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது பற்றி BSNL மற்றும் DOT இடையே ஒருமித்த கருத்து உருவாவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

எனவே ஊதியமாற்றத்தில் நல்லதொரு முடிவினை எட்டிட…BSNL மற்றும் DOTக்கு  கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய அவசியம் இருப்பதால் டிசம்பர் 10 அன்று நடைபெறவிருந்த  காலவரையரையற்ற வேலைநிறுத்தத்தை மறு அறிவிப்பு வரும்வரை ஒத்தி வைத்திட அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அமைச்சர் வழிகாட்டுதலின் படி அனைத்து சங்க கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திட DOT சார்பில் அதிகாரியை நியமித்திடு கூட்டமைப்பு - DOT செயலருக்கு கடிதம்...


வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அனைத்து சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகளை தொடர்ந்து விவாதிக்க DOT தரப்பிலிருந்து ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அனைத்து சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் தெவித்திருந்தார். DOT வெளியிட்ட மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரக்குறிப்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அமைச்சரின் வழிகாட்டுதலின் படி அதிகாரி ஒருவரை நியமிக்க  அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக கூட்டமையின் தலைவர் சந்தேஸ்வர் சிங் அவர்களும் ஒருங்கிணைப்பாளர் தோழர் அபிமன்யு அவர்களும் கூட்டாக கையெழுத்திட்டு திருமதி அருணா சுந்தரராஜன் , DOT செயலர் அவர்களுக்கு இன்று 06.12.2018 கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடித்தத்தில் அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரி DOT யின் கூடுதல் செயலராக இருப்பின் DOTயின் மீதான நம்பகத் தன்மை அதிகரிக்கும் என்றும் கூடிய விரைவில் அவ்வதிகாரியை நியமித்தால் மட்டுமே தொடர்ந்து விவாதித்து அமைச்சரின் உறுதிமொழிகள் நிறைவேறுவது என்பது நனவாகும் என்றும் ஊழியர் நலனை முன்னிட்டும் தொழில் அமைதியை காக்கவும் அனைத்து சங்க கூட்டமைப்புடன் விவாதிக்க அவரை விரைவாக நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கடிதத்தின் நகல் DOTயின் கூடுதல் செயலர் அன்சு பிரகாஷ் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஓப்பந்ததொழிலாளர்களுக்கு ஊதிய தாமதத்தை கண்டித்து இயக்கங்கள்

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அக்டோபர்,நவம்பர் மாத ஊதியம் இன்னும் வழங்கவில்லை.ஆகவே கீழ்கண்ட இயகக்ங்கள் நடத்த வேண்டுமென்று இரண்டு மாநில சங்கங்கள் அறிவித்துள்ளன.இதை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தும் வகையில் இரண்டு சங்கங்களின் உறுப்பினர்கள் கலநது கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
11/12/2018-------------------------கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்
14/12/2018------------------------மாலை நேர தர்ணா
BSNLEU-------------------------TNTCWU--------------------மாவட்ட சங்கங்கள் திருச்சி

Monday 3 December 2018


               நன்றி|  நன்றி  நன்றி
டிசம்பர் 3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தன்னை ஈடுபடுத்திகொள்ள நினைத்த ஊழியர்கள்,அதிகாரிகள்,ஓப்பந்ததொழிலாளர்கள்.ஆதரவு கொடுக்க நினைத்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
அடுத்த அறிவிப்பும் வரை வேலை நிறுத்தபோராட்டம் ஓத்திவைக்கப்பட்டுள்ளது.

ALL UNIONS AND ASSOCIATION OF BSNL TRICHY SSA