Monday 30 April 2018

3/5/2018 கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

நமது மத்திய செயற்குழு முடிவின்படி 3/5/18 அன்று
அனைத்து கிளைகளிலும் கருப்பு அட்டை அணிந்து
ஆர்ப்பாட்டம்  ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்
கோரிக்கைகள்
1) BSNL பணிகளை வெளியாட்களுக்கு விடாதே
2)பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் மருத்துவ வசதிகளை
குறைக்காதே
3)ஓப்பந்த தொழிலாளர்களை பணீநீக்கம் செய்யாதே
4) BSNL  நிறுவனத்தின் வீண்செலவுகளை குறைத்திடு
5)SR TOA கேடரில் புதிய நியமனங்களை செய்திடு

ஓய்வூதியர்கள் ,மற்றும் ஓப்பந்த தொழிலாளர்களை
இணைத்துக் கொள்ளவும்,
3/5/2018 அன்று அவசர மாவட்டசெயற்குழு

நமது சங்கத்தின் அவசர மாவட்ட செயற்குழு 3/5/18 அன்று
திருச்சியில் நமது சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்டசங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள் தவறாமல்
கலந்து கொள்ளவும்
1) மத்தியசெயற்குழு முடிவுகள் அமுலாக்கம்
2) மாநில செயற்குழு முடிவுகள் அமுலாக்கம்
3) பிற தலைவர் அனுமதியுடன்

Tuesday 24 April 2018

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள்
புதுடெல்லியில் 24/4/18 அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL
கூட்டம் நடைபெற்றது. அ தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1)மே மாதம்  7ந் தேதி முதல் 11ந் தேதி வரை துணை டவர் கம்பெனி
துவக்குவதை எதிர்த்து தெரு முனை பிரச்சாரம் நடத்த வேண்டும்
2) மே 11ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், பிரதமமந்திரிக்கு
FAX  கொடுக்கவேண்டும்
3) ஊதியதிருத்தம் சம்மந்தமாக DPE யிலிருந்து   DOT க்கு வந்த சூழ்நிலையில்
அமைச்சரையும் , DOT செகரட்டரியையும் சந்திப்பது.
4)புது டெல்லியில் நடைபெறவுள்ள கருத்தரங்க தேதி பின்னர் அறிவிக்கப்படும்
5) அடுத்த கூட்டம் மே 8ந்தேதி நடைபெறும்.
                                                     வாழ்த்துகிறோம்

சமீபத்தில் 28/1/2018 நடைபெற்ற JE தேர்வில் தமிழ்நாட்டில் 6 பேர்
தேர்வாகியுள்ளனர்.
நமது மாவட்டத்தை சேர்ந்தவரும் நமது சங்கத்தின் அரவாக்குறிச்சி
கிளையில் பணியாற்றுபவரான தோழர்   சுரேஷ்குமார் அவர்கள்
தேர்வாகியுள்ளார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.

Sunday 22 April 2018

கிரிமினல் பொதுமேலாளர் ஆதேஷ்குமார் குப்தா CBI யால்
கைது செய்யப்பட்டார்.

 ஆதேஷ்குமார் குப்தா பொதுமேலாளர் பரிதாபாத் CBI யால்
கைது செய்யப்பட்டார்.இவர்தான் காசியாத்தின் பொதுமேலாளராக‌
இருந்தபோது நமது மாவட்ட செயலர் தோழர் சுகேந்தர் பால்சிங்
அவர்கள் கொலையில் சம்மந்தப்பட்டவர்.
அதேபோல் நொய்டாவின் பொதுமேலாளராக இருந்த போதும்
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின் 
மேலிட செல்வாக்கோடு வெளியில் வந்தார். தற்போது
CBI யால்கைது செய்யப்பட்டுள்ளார்.
                                                       GPF   பட்டுவாடா

INTEREST CALCULATION நடந்து கொண்டிருப்பதால் GPF   26ந் தேதி 
பட்டுவாடா ஆகும்.

Wednesday 18 April 2018


8/4/18 அன்று எர்ணாகுளத்தில் நடைபெற்ற கருத்தரங்க முடிவுகள்

அனைத்து மத்திய பொதுதுறை நிறுவன தொழிற்சங்கங்களின் சார்பாக‌
.8/4/18 அன்று எர்ணாகுளத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நமது பொதுசெயலர்
தோழர் அபிமன்யூ அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்
அதில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1) நாடு முழுவதும் அனைத்து பொதுதுறை நிறுவனங்களிலும் பிரச்சாரம்
செயவது
2)பிரதம மந்திரி மற்றும் கனரக மந்திரிக்கு FAX அனுப்புவது
3)அ) தனியார்மயம் ஆ) ஊதிய திருத்தம் இ) FIXED EMPLOYMENT இது சம்மந்தமாக‌
விவாதிக்க புதுடெல்லியில் மே 25 ந் தேதி கருத்தரங்கம் நடத்துவது.

Tuesday 10 April 2018

  12/4/2018   அன்று நடைபெற்ற  தர்ணா


 
 
 

                                                  12/4/2018   தர்ணா

துணைடவர் கம்பெனி செயல்படுத்த துவங்குவதை எதிர்த்து 
12/4/18 அன்று நாடு முழுவதும் ALL UNIONS AND ASSOCIATIONS 
சார்பாக தர்ணா நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தும் வகையில்
அனைத்து கிளைகளிலிருந்தும் பெருவாரியான தோழர்கள்
கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்

Wednesday 4 April 2018

                                           அடுத்த அகில இந்திய மாநாடு

நமது சங்கத்தின் அடுத்த அகில இந்திய மாநாடு கர்நாடகா மாநிலம்
மைசூரில் 2019 பிப்ரவரியில் நடைபெறவுள்ளது