Thursday 31 January 2019


AUAB தலைவர்கள்  DOT அதிகாரிகளுடன் சந்திப்பு
 AUAB தலைவர்கள்  DOT அதிகாரிகளை 30/1/2019 அன்று சந்திந்து
பேச்சுவார்த்தை  நடத்தினார்கள்.அனைத்து பிரச்சினைகளையும் விரிவாக பேசினார்கள்.DOT சார்பாக 5 சதவீதம் பிட்மெண்ட் மும்மொழியப்பட்டுள்ளது.
AUAB தலைவர்கள் இதை நிராகரித்துவிட்டார்கள்.இதை ஏற்றுக்கொண்டால் 5/2/19 அன்று நடைபெறும் DIGITAL COMMISSION கூட்டத்தில் வைக்கப்படும் பின் மத்திய அமைச்சரவையின் ஓப்புதலுக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.AUAB  தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.மீண்டும் CMD யுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஓரிரு நாளில் மீண்டும் பேசலாமென்று
ADDITIONAL SECRETARY DOT கூறியுள்ளார்.
3/12/2018 அன்று அமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 சதவீதம் பிட்மெண்ட் கொடுக்கமுடியாது என்று கூறினார்.10/1/2019 அன்று  ADDITIONAL SECRETARY DOT யுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 0 சதவீதம் தான் கொடுக்கமுடியும் என்று கூறினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


           வேலை நிறுத்தத்திற்கு தயாராவோம்
25/1/2019 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற AUAB கூட்டத்தில் பிப்ரவரி 18 முதல் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆலோசனை கூட்டம் 29/1/2019 அன்று நடைபெற்றது. அதில் தோழர் அஸ்லம்பாஷா  BSNLEU தோழர் பழனியப்பன் NFTE தோழர் சக்திவேல் SNEA தோழர் சசிக்குமார் AIBSNLEA தோழர் அண்ணாதுரை TEPU ஆகியோர் கலந்து கொண்டனர்.கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
1)   2000 நோட்டீஸ்கள் அச்சடித்து வினியோகம் செய்வது
2)   ஊழியர்களிடம் பிரச்சாரம் செய்யும் வகையில் பயண திட்டம் வகுப்பது
3)   கோரிக்கை FLUX  வைப்பது
4)   செலவுகளை ஈடுகட்டும் வகையில் ஊழியர்களிடம் நிதி திரட்டுவது
5)   பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவது.
6)   மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் சிறப்புகூட்டம் நடத்துவது அதற்கு ஊழியர்களை திரட்டுவது

Wednesday 30 January 2019


                   வாழ்த்துகிறோம்
இன்று பணியிலிருந்து ஓய்வுபெறும் தோழர்கள்.தோழரியர்கள் அனைவரும் தங்களுடைய ஓய்வுகாலத்தை நீண்ட ஆயளூடனும் மன நிம்மதியுடன் வாழவேண்டுமென வாழ்த்துகிறோம்.

Wednesday 16 January 2019


              மீண்டும் வலியுறுத்தப்பட்டது
இன்று (16/1/2019) காலை CMD யுடன் AUAB தலைவர்கள் சந்தித்து ஊதிய திருத்தம் சம்மந்தமாக பேச்சுவார்த்தை ஏற்கனவே DOT ADDL SECRETARY சொன்னதின் அடிப்படையில் நடைபெற்றது.
அதில் AUAB தலைவர்கள் 15 சதவீதம் பிட்மெண்ட் கொடுக்கவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தினார்கள்.CMD அவர்களும் அதை ஆமோதித்தார்.பாராளுமன்ற தேர்தல் மார்ச் மாதம் அறிவிக்ககூடிய வாய்ப்புள்ளதால் உடனடியாக இந்த பிரச்சினையை தீர்க்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
மேலும் 15 சதவீத பிட்மெண்ட் கொடுக்கவில்லையென்றால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என்று தெரிவித்து விட்டனர்.

Thursday 10 January 2019


          வாழ்த்துகிறோம் | பாராட்டுகிறோம்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை எதிர்த்து  நடைபெற்ற
வேலைநிறுத்தத்தில் அனைத்து தோழர்கள்.தோழியர்கள் அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.