Sunday 27 May 2018

                                         AUAB போராட்டம் சரியானதே
     MTNL யிடம் இருக்கும் டவர்களை தனியாக பிரித்து 
தனி கம்பெனியாக உருவாக்கி பின் அதை தனியாருக்கு விற்றுவிட‌
வேண்டுமென்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
BSNL    யிடம் இருக்கும் டவர்களை தனியாக பிரித்து தனி கம்பெனியாக‌
உருவாக்குவது என்று அரசாங்கம் முடிவு செய்து அதற்குண்டான பணீகளில்
ஈடுபட்டுள்ளது. ஆனால் BSNLல் இருக்கும் அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் சங்கங்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்தம் ஊள்பட 
போராட்டங்கள் நடத்தி வருவதால் அரசாங்கம் மேற்கொண்டு நடவடிக்கை
எடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.
ஆகவே தான் சொல்கிறோம்     AUAB போராட்டம்  நடத்துவது சரியானதே

Friday 25 May 2018

                                  துணைடவர் கம்பெனி வழக்கு

துணைடவர் கம்பெனி செயல்படுவதை வாபஸ் பெறவேண்டுமென்று
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்று AUAB சார்பாக ஏற்கனவே
முடிவெடுக்கப்பட்டது. அதன்டிப்படையில் வழக்கும் போடப்பட்டது.
இந்த வழக்கு 25/5/18 விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற வழக்கு முடியும் வரை
துணைடவர் கம்பெனியை செயல்படுத்த கூடாது.வழக்கு 25/9/18 க்கு
ஓத்திவைக்கப்பட்டுள்ளது
                                    வெளிநடப்பு போராட்டம் ஒத்திவைப்பு

துணை டவர் கம்பெனிக்கான CMD ஐ நியமிப்பது சம்மந்தமாக 
28ந்தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இயக்குனரகர்கள்
கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளதாக அறிந்து அனைத்து சங்கங்களின்
சார்பாக வெளிநடப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்
பட்டிருந்தது.நேற்று CMD யுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
அந்த அஜந்தா இல்லை என்று தெரிவித்தார்,
 CMDகொடுத்த உறுதி மொழியின் பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tuesday 22 May 2018

                                       கண்டன ஆர்ப்பாட்டம்

மோடி அரசின் தொழிலாளர் விரோத ,மக்கள் விரோத கொள்கைகளை
எதிர்த்து  தமிழக மக்கள் மேடை சார்பாக 23/5/18 திருச்சி சிந்தாமணி
அண்ணாசிலை அருகில் மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது
மத்திய ,மாநில, பொதுதுறை நிறுவன,வாலிபர்,மாணவர், மாதர் 
சங்கங்களின் சார்பாக நடைபெறுகிறது. ஆகவே அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ள வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Sunday 20 May 2018

                                                 கருத்தரங்கம்

தோழர் மோனிபோஸ் 8வது நினைவு தினத்தையொட்டி நமது
மத்திய செயற்குழு முடிவின்படி 22/5/2018 அன்று கும்பகோணத்தில்
மதியம் 3.30 மணியளவில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
நமது மாவட்டத்திற்கு 20 பேர் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே
கிளைக்கு ஓருவர் கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு தோழமையுடன்
கேட்டுக்கொள்கிறேண்.
22-5-2018 =செவ்வாய்=கும்பகோணம்=மதியம் 3.30 மணி=PLA HOTEL ரயில்வே
ஸ்டேஷன் அருகில்





                                           நன்றி        நன்றி       நன்றி

துணைடவர் கம்பெனியை திரும்ப பெற கோரி 7ந்தேதி முதல் 11ந் தேதி வரை
பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்வது என்று புதுடெல்லியில் 
நடைபெற்ற AUAB கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது . அதன்படி திருச்சியில்
நடைபெற்ற‌ AUAB கூட்டத்தில் 10000 நோட்டீஸ்கள் அச்சடித்து பத்து குழுக்கள்
மூலம் வினியோகிப்பது என்ற முடிவுபடி திருச்சி SSA முழுவதும் 63 இடங்களீல்
நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.
இதில்  AUAB அமைப்பில் உள்ள சங்கங்களோடு TNTCWU  AIBDPA சங்க தோழர்களும்
கலந்து கொண்டனர். அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்



Wednesday 16 May 2018

ஊதிய பேச்சுவார்த்தை துவங்கலாம் DOT ஒப்புதல் அளித்துள்ளது

கடந்த 27/4/18 அன்று DOT CMD க்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் NONEXECUTIVES
ஊழியர்களுக்கான ஊதிய திருத்தம் சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான‌
நடவடிக்கைகளை துவக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது.அதே சமயம்
மத்திய அமைச்சரவை ஓப்புதலும் தேவை என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
கடந்த 24/2/2018 அன்று அமைச்சரோடு சங்கங்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்
போது அமைச்சர் அமைச்சரவையின் ஓப்புதல் பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார்
என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
28/1/2018 அன்று நடந்த JE  தேர்வு முடிவுகளூக்கு RELAXATION
கொடுக்க வேண்டுமென்று நிர்வாகத்திற்கு கடிதம்

28/1/2018 அன்று நடந்த JE  தேர்வு முடிவுகளுக்கான RESULT சமீபத்தில்
வெளியாகியது. 9145 காலிபணியிடங்களூக்கான தேர்வில் .தேர்வு
எழுதியவர்கள் 1800 பேர். தேர்வாகியவர் 95 பேர் மட்டுமே. ஆகவே
பெரும்பகுதி காலிபணியிடங்கள் இருப்பதாலும் ,அங்கங்கு
பணியாற்றும் ஊழியர்களூக்கு பணிச்சுமை இருப்பதால். 28/1/18 
தேர்வு எழுதியவர்களூக்கு மதிப்பெண்ணில் எவ்வாறு 2008 
நேரடிநியமன தேர்வில் RELAXATION கொடுக்கப்பட்டதோ அதேபோல்
நமது ஊழியர்களூக்கும் கொடுக்கவேண்டுமென்று  CMD யிடம் ஏற்கனவே பேசப்பட்டுள்ளது    
இதனை தொடர்ந்து நிர்வாகத்திற்கு க‌டிதம் எழுதப்பட்டுள்ளது
சின்ன மீன்களை பெரிய மீன்கள் விழுங்குவது தொடர்கிறது

டெலிநார் கம்பெனி எர்டெல் கம்பெனியுடன் இணைவதற்கு DOT ஓப்புதல்
அளித்துள்ளது.இதன் மூலம் எர்டெல்லின் வாடிக்கையாளர் எண்ணிக்கை
330 மில்லியனாக உயர்கிறது.