Saturday, 19 August 2017

17-08-2017 அன்று நடைபெற்ற சிறப்பு கூட்டம்


 
 



 
 
 
 
 
 

 
 
 
 
 
BSNL  நிறுவனம் கேட்கிறது நீட்டிப்பு

BSNL  நிறுவனத்திற்கு லைசன்ஸ் 2000 த்தில் கொடுத்தாலும்
அது 2002 முதல்தான் செல் இணைப்பு கொடுக்க துவங்கியது
ஆகவே 2022 வரை (2 வருடத்திற்கு ) லைசன்ஸை நீடித்து தர‌
வேண்டுமென்று அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

Wednesday, 16 August 2017

ஓன்றுபட்ட போராட்டத்திற்கு AIBSNLEA பொதுசெயலருக்கு அழைப்பு

DPE உத்தரவுக்குப்பின் ஏற்பட்டுள்ள நிலைமையை ஒட்டி
ஓன்றுபட்ட போராட்டத்திற்கு AIBSNLEA பொதுசெயலர் வரவேண்டும்
என்று நம்முடைய பொதுசெயலர் வரவேற்றுள்ளார்

                                                   சிம் விற்பனை பாதிப்பு

ஜூலை 1ந் தேதி முதல் நிர்வாகத்திற்கு கொடுத்து வந்த ஒத்துழைப்பை
வாபஸ்பெறப்பட்டதால் சிம் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
ஜூன் மாதம் 2390993 சிம் விற்பனையானது ஆனால் ஜுலை மாதம் 1775953
தான் விற்பனைதான் ஆகியுள்ளது.
ஊழியர்கள் ஒத்துழைப்பின்றி வளர்ச்சி இல்லை என்பது இதன் மூலம்
நிருபிக்கப்பட்டுள்ளது.
UNIFORM க்கு பதில் பணம் ஏற்றுக்கொள்ள தயாரில்லை

UNIFORM க்கு பதில் பணம் கொடுப்பதாக நிர்வாகம் நம்மிடம்
கருத்து கேட்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற நமது மத்திய‌
செயற்குழுவில் இது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது.
பணம் கொடுப்பதை ஏற்க வேண்டாம் தரமான சீருடை வழங்க‌
வேண்டும் என்று தோழர்கள் கருத்து சொன்னதின் அடிப்படையில்
நிர்வாகத்திற்கு பொதுசெயலர் கடிதம் எழுதியுள்ளார்.
                                                     CMD அழைப்பு

CMD அழைப்பின் பேரில் BSNLEU,SNEA,AIBSNLEA பொதுசெயலர்கள்
சந்தித்து பேசினார்கள். அப்போது ஊதிய திருத்தம் ,மற்றும் BSNL 
நிலைமை பற்றி பேசியுள்ளார்கள். CMD நம்மோடு இருப்பதாக‌
உறுதி கூறியுள்ளார்.
DOT நமக்கு சாதகமாக இருக்கவேண்டும்.
அதற்கு ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே வழி

Friday, 11 August 2017

                                                 PGM வுடன்சந்திப்பு

8/8/17 அன்று மாலை 6.30 மணியளவில் PGM அழைப்பின் பேரில்
மாவட்டசெயலரும் ,மாவட்ட உதவி செயலர் தோழர் G.சுந்தராஜீ
அவர்களூம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டாம்

9/8/17 அன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்
11/8/17 அன்று நிலுவை தொகை வழங்க வேண்டும் இல்லையென்றால்
16/8/17 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துவிட்டோம்

போனஸ்:--- 2015-16 முதல் போனஸ் ரூ 7000/- ஆக மத்திய அரசாங்கம் உயர்த்தியுள்ளது
அதை திருச்சியில் நடைமுறைபடுத்த வேண்டும் என்று கேட்டோம் .அதை உரிய‌
உத்தரவுகளை பரிசிலிப்பதாக கூறினார்

திறனுக்கேற்ற ஊதியம்: ஓவ்வொரு ஊழியரும் அவர்கள் பார்க்கின்ற வேலையை
வைத்து முடிவு செய்யப்படும்

PROJECT SANJAY: நமது மாவட்டத்தில் அமுல்படுத்த வேண்டும் என்று
கேட்டோம்- பரிசிலிப்பதாக கூறியுள்ளார்


                                            காத்திருப்பு போராட்டம்

திருச்சி SSA வில் ஒவ்வொரு மாதமும் ஓப்பந்த தொழிலாளர்களுக்கு
ஊதியம் மாநில நிர்வாகத்தின் உத்தரவுப்படி 7ந் தேதி வழங்குவதில்லை
ஆகவே 8 ந் தேதி அனைத்து ஓப்பந்ததொழிலாளர்களூம் PGM அலுவலக‌
வாயிலில் திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்ற அடிப்படையில்
8/8/17 10.00 மணீக்கு 100 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள்  திரண்டுவிட்டனர்
சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்தியபின் அனைவரும் வாசலில் அமர்ந்தனர்.
மாலை 5.00 மணி வரை அந்த போராட்டம் தொடர்ந்தது. இதற்கிடையில்
பெரும்பாலான இடஙகளூக்கு ஊதியம் பட்டுவாடா  செய்யப்பட்டதாக் செய்தி
வந்தது.19/1/17 முதல் கிடைக்க வேண்டிய நிலுவை  தொகை கொடுக்கவில்லை
ஆகவே 9ந் தேதி காலை PGM CHAMBER முன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.










 





மூன்று நாள் தர்ணா- தேசிய கருத்தரங்கம் முடிவு

அனைத்து மத்திய‌சங்க கருத்தரங்கம் புதுடெல்லியில் 8/8/17
அன்று நடைபெற்றது.அதில் மத்திய அரசாங்கத்தின் 
தொழிலாளர் விரோத ,மக்கள் விரோத கொள்கைகளை
எதிர்த்து முதல் கட்டமாக‌

நவம்பர் 9 முதல் 11 வரை புதுடெல்லியில் தர்ணா நடத்துவது
அடுத்த கட்ட போராட்டம் அதன்பின் முடிவு எடுப்பது.

                                  சீத்தாரம் யெச்சுரி கேள்வி
வங்கிகள் 81683 கோடி ரூபாய்கள் பெருமுதலாளிகளூக்கு
தள்ளுபடி செய்துள்ளனபெருமுதலாளிகள் வங்கிகளில்
கோடிக்கணக்கில் கடன் வாங்குவதும் அதை அரசாங்கம் 
தொடர்ந்து தள்ளுபடி செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்
ஏழைகளூக்கு உதவ ஆட்சி வருகிறேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த‌
திரு நரேந்திரமோடி வந்தபின் கார்ப்பரேட்களுக்கு உதவிசெய்து கொண்டுள்ளார்,

இந்தியா முழுவதும் விவசாயிகள் தங்களுடைய கடன் சுமார் 70000 கோடியை
தள்ளுபடி செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் போது
அதை தள்ளுபடி செய்ய திரு ந்ரேந்திரமோடி தயாராக இல்லை ஆனால்  பெரு
முதலாளிகளுக்கு ஒரு வருடத்தில் 81683 கோடி தள்ளுபடி செயவது நியாயமா?
இதுவரை சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செயதுள்ளது.

Monday, 7 August 2017

                                                   பட்டை நாமம்

போராட்டத்தை தவிர  வேறுவழியில்லை

ஓன்றுபட்டு போராடினால் வெற்றீ நிச்சயம்

இறுதியில் DPE 3வது ஊதியதிருத்தம் செய்வதற்குண்டான உத்தரவை
வெளியிட்டுவிட்டது
அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது லாபம் மீட்டும் கன்பெனிகளூக்கு
மட்டுமே ஊதிய திருத்தம் (நஷ்டம் அடைந்த நிறுவனங்களுக்கு இல்லையென்று
 DPE தெளிவுபடுத்திவிட்டது. 

DIRECTOR (HR) வாரத்திற்கு ஒரு கடிதம் ஊழியர்களுக்கு எழுதினார் எப்படியம்
BSNL ஊழியர்களுக்கு ,அதிகாரிகளூக்கு ஊதியதிருத்தம் கிடைத்துவிடும் .CMD
நமக்கு சாதகமாகவுள்ளார், DOT நமக்கு சாதகமாகவுள்ளது, துறை அமைச்சர்
சாதகமாக உள்ளார்.ஆகவே விரைவில் ஊதியதிருத்தம் வந்துவிடும் என்றும்
போராடும் சங்கங்கள் மீது துஷ்பிரச்சாரம் செய்தார், தேவையில்லாமல் 
போராடுகிறார்கள் என்று பல விஷயங்களை சங்கங்களூக்கு எதிராக கடிதம் 
மூலம் தெரிவித்து வந்தார்.
ஒரு சிலசங்கங்களூம் அதையே  சொன்னது.அனைவரும் நமக்கு சாதகமாக‌
இருக்கிறார்கள் ஆகவே விரைவில் ஊதியதிருத்தம் வந்துவிடும் என்று
பிரச்சாரம் செய்தார்கள்.
UNIONS AND ASSOCIATIONS தெளிவாக சொல்லியது AFFORDABILITY CLAUSE
அதிலிருந்து BSNL க்கு வ்லககு அளிக்காதவரை நமக்கு ஊதியதிருத்தம்
என்பதே இல்லை. ஆகவே அதை பெறுவதற்கு DOT ஐ அரசை நிர்பந்திக்க‌
வேண்டுமென்றுதான் அனைத்து சங்கங்களோடு பேசி போராட்ட திட்டம்
வகுக்கப்பட்டு தர்ணா,உண்ணாவிரதம்,வேலைநிறுத்தம் சிறப்பாக 
நடைபெற்றுள்ளது ஒருசில சங்கங்கள் ஒதுங்கிகொண்டன.. 
UNIONS AND ASSOCIATIONS அடுத்த கடட போராட்டத்திற்கு திட்டமிடவுள்ளன.

DOT க்கு இரண்டுவாய்ப்புகள் கிடைத்தது ஆனால் அது தவறவிட்டது.DOT 
நமக்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

DOT ஐ நிர்பந்தபடுத்தினால் இது முடியம அதற்கு ஒரு கடுமையான‌
போராட்டம் ஓன்றுபட்டு நடத்தினால்தான் இதை சாதிக்கமுடியும்

ஓன்றுபடுவோம்"   போராடுவோம்"   வெற்றிபெறுவோம்"


Thursday, 3 August 2017

மன்னிப்பு கோரினார் CGM NETF (NORTH EAST TASK FORCE)

கடந்த 27/7/2017 அன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தின் போது
அஸ்ஸாமில்  வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள்மீது
சுமார் 400 பேர் மீது போலீஸீல் புகார் செய்து அவர்களை கைது
செய்து காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.இருந்தாலும்
அங்கு வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. நிர்வாகத்தின்
இந்த செயலை கண்டித்து 28/7/19 அன்று கொளஹாத்தியில் மாபெரும்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து CGM NETF திரு ஜே ன் ஜா
அவர்கள் மன்னிப்பு கோரினார்.(WRITING)
போராட்டம் இல்லாமல் யாராட்டமும் செல்லாது

ஓய்வு பெற்றவர்களூக்கு மெடிக்கல் அலவன்ஸ் உடனடியாக வழங்கவேண்டும்

நமது துணைபொதுசெயலர் GM (ADMN) அவர்களை 3/8/17 அன்று சந்தித்து
ஓய்வு பெற்றவர்களூக்கு மெடிக்கல் அலவன்ஸ் உடனடியாக வழங்கவேண்டும்
என்று கேட்டுக் கொண்டார்  GM (ADMN) ஆவண செயவதாக உறுதியளித்துள்ளார்

Monday, 31 July 2017

செங்கொடி தாழ்த்தி அன்சலி செலுத்துகிறோம்

அரசு ஊழியர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவராக ,பொதுசெயலராக‌
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயலராக திறம்பட செயலாற்றியவரும்
ஜெயலலிதா அரசாங்கம் ஒரே உத்தரவில் 1.75 லட்சம் ஊழியர்களை பணநீக்கம்
செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அனைவரையும் மீண்டும்
பணிக்கு சேர்த்ததில் முக்கிய பங்காற்றியவருமான‌
அருமை தோழர் RMS என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்
R.முத்து சுந்தரம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார்.

அவருக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலையும்,அன்சலியையும் செலுத்துகின்றோம்

நன்றி                          நன்றி                          நன்றி

வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்கள்,அதிகாரிகள்,
ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறோம்.