Wednesday, 14 November 2018
Monday, 12 November 2018
அநீதிகண்டு வெகுண்டெழுந்து
ஆர்ப்பரித்து போராடமால் அநீதி களைய முடியாது
காலவரையற்ற வேலை
நிறுத்த போராட்டத்திற்கு தயாராவோம்
DOT செகரட்டரியுடன்
2/11/18 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின்
BSNL க்கு அனுப்பியுள்ள
கடிதத்தில் நமது கோரிக்கைகளான 3வது ஊதிய திருத்தம்,,4G ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு,பென்ஷன்
பங்களிப்பு அடிப்படை ஊதியத்தில் இருக்க வேண்டுமென்பதை மறைமுகமாக நிராகரிக்ககூடிய வகையில்
உள்ளது.ஆகவே நாம் ஒரு கடுமையான போராட்டம் நடத்தினால்தான் நம்முடைய கோரிக்கைகளை வெல்லமுடியும்
ஆகவே ஏற்கனவே திட்டமிட்டபடி 30/11/18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராக
வேண்டியுள்ளது.
ஊழியர்களை தயார்படுத்தும்விதமாக
14/11/18 அன்று நடைபெறவுள்ள மனிதசங்கிலி இயக்கத்தில் அனைத்து ஊழியர்களூம் ,அதிகாரிகளூம்
பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
ALL UNIONS
AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA
மனிதசங்கிலி இயக்கம்
14/11/18 அன்று மாலை 3.00 மணியளவில் ஆஞ்சனேயர் கோவிலிலிருந்து நமது அலுவலம் வரை
Wednesday, 7 November 2018
நவம்பர்-20 தர்ணா
BSNL CASUAL
CONTRACT WORKERS FEDERATION சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து 20/11/2018 தர்ணா
நடத்தவுள்ளனர்.
1)குறைந்தபட்ச
ஊதியம் ரூ 18000/ வழங்கவேண்டும்
2)ஊதிய பட்டுவாடா
தாமதத்தை கண்டித்தும்
3) EPF,ESI முறையாக
கட்டவேண்டுமென்றும்
4) பணிநீக்கம்
செய்யப்பட்ட ஓப்பந்த தொழிலாளர்களூக்கு மீண்டும் பணி வழங்க கோரியும்
நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் இந்த தர்ணாவில் BSNL ஊழியர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவேண்டுமென்று
நமது மத்திய சங்கம்
அறைகூவல்விட்டுள்ளது.
ஆகவே திருச்சி
மாவட்டத்தில் வெற்றிகரமாக்கும் வகையில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Saturday, 3 November 2018
PGM வுடன் சந்திப்பு------3/11/2018
நமது மாவட்டத்திற்கு
பொறுப்பாக இருக்ககூடிய திரு.C.V.வினோத் PGM அவர்களை 3/11/2018 அன்று மரியாதை நிமித்தமாக
சந்தித்தோம்
தோழர் T.தேவராஜ்
மாவட்டதலைவர் தோழர் S.அஸ்லம்பாஷா மாவட்டசெயலாளர் தோழர் G.சுந்தரராஜீ மாநில உதவிபொருளாளர் தோழர் R.கோபி மாவட்ட பொருளாளர்.
முதன்மை பொதுமேலாளர்கள்
அவர்களின் அணுகுமுறை நன்றாக இருந்தது நாம் ஏற்கனவே ஓப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ்
கொடுக்கவேண்டுமென்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் கடிதம் கொடுத்து பேசினோம்.அதனை
தொடர்ந்து 29/10/18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதனை தொடர்ந்து புதிய முதன்மை பொதுமேலாளர்
அவர்களூக்கு கடிதம் கொடுத்து பேசினோம்.அவரும் அனைத்து கான்ட்ராக்டர்களிடமும் பேசியுள்ளார்.அதனடிப்படையில்
HOUSE KEEPING ல் பணியாற்றும் ஊழியர்களூக்கு ரூ 5250/ Manpower ல் பணியாற்றும் ஊழியர்களூக்கு
ரூ 3500/ ம் பட்டுவாடாகியுள்ளது.அனைத்து ஓப்பந்த தொழிலாளர்களூக்கும் அனைத்து கான்ட்ராக்டர்களூம்
போனஸ் பட்டுவாடா ஆகவில்லை உடனடியாக பொது மேலாளர் அவர்கள் தலையிடுவதாக உறுதியளித்துள்ளார்.
அதே போல் புதிய
டெண்டரில் முழுவதுமாக கொடுக்கும் வகையில் கண்டிஷன் சேர்க்கப்படும். திறனுக்கேற்ற ஊதியம்
கொண்டுவரப்படும் என்று
கூறினார். நமது
பிரச்சினைகள் சம்மந்தமாக கடிதம் கொடுத்து விவாதித்தோம் அனைத்திற்கும் நல்ல தீர்வு கிடைக்கும்
என்று உறுதியளித்தார்.
மீண்டும் வருகிற
14 ந்தேதி சந்திக்கலாமென்று கூறியுள்ளார்.
முதன்மை பொதுமேலாளர்
அவர்க்ளூக்கு நம்முடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
DOT SECRETARY
வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை 2/11/2018
DOT SECRETARY வுடன்
AUAB தலைவர்களூடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
1.
3
வது ஊதியதிருத்தம் BSNL யிடம் சில சந்தேகங்கள் கேட்கப்பட்டுள்ளது அது கிடைத்தவுடன்
அமைச்சரவை குறிப்பு தயார் செய்து மற்ற அமைச்சரகங்களூக்கு சுற்றுக்கு விடப்பட்டு மத்திய
அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபடும். BSNL நிறுவனம் இந்த மாத இறுதிக்குள் DOT
எழுப்பிய சந்தேகங்களூக்கு பதில் கொடுத்துவிடும்.மூன்று
மாதங்களூக்குள் இதை முடிவுக்கவேண்டும் .பாராளூமன்ற தேர்தல் அறிவித்துவிட்டால் சிரமமாகிவிடுமென்று
சொல்லப்பட்டது.விரைவில் தீர்த்துவைக்கப்படும் என்று DOT SECRETARY உறுதியளித்தார்.
2.
4G
ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு சம்மந்தமாக அமைச்சரவை குறிப்பு
மற்ற
அமைச்சரகங்களூக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது பின் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு
அனுப்பபடும்
3.பென்ஷன்
பங்களிப்பு உண்மை ஊதியத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை
DOT யின் RECOMMENDATION வுடன் அடுத்த வாரம் DEPARTMENT OF EXPENDITURE க்கு அனுப்பபடும்
4.பென்ஷன்
திருத்தம் சம்மந்தமான பிரச்சினையில் DOT SECRETARY அவர்கள் MEMBER SERVICES ஐ உடனடியாக
இது சம்மந்தமாக தன்னுடன் விவாதிக்க வேண்டுமென்று கேட்டுள்ளார்.
5.
நேரடி நியமன ஊழியர்களூக்கு ஓய்வூதிய பலன்களை
உயர்த்தி
கொடுக்கவேண்டுமென்ற கோரிக்கை சம்மந்தமாக BSNL CMD தான் முடிவெடுக்கவேண்டுமென்று
DOT SECRETARY கூறினார்.CMD அவர்கள் ஏற்கனவே இருந்ததைவிட இன்னும் கூடுதலாக 2 சதவீதம்
உயர்த்துவதாக கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்குப்பின்
AUAB தலைவர்கள் கூடி பேசினார்கள்.மற்ற பிரச்சினைகளில் DOT யின் பதில்கள் திருப்தியாக
இருந்தாலும் ஊதிய திருத்த பிரச்சினையில் நாம்
எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை ஆகவே ஏற்கனவே திட்டமிட்ட 14 ந் தேதி
பேரணி சக்திமிக்கதாக நடத்தவேண்டுமென்று AUAB கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
DOT
SECRETARY ஐ சந்திப்பதற்கு முன் நடைபெற்ற AUAB கூட்டத்தில்
கீழ்கண்ட
முடிவுகள் எடுக்கப்பட்டன
1)
AUAB
வின் சேர்மனாக தோழர் சந்தேஷ்வர்சிங் கன்வீனராக தோழர் அபிமன்யூ அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
2)
நிர்வாகத்திற்கு
கொடுக்கும் கடிதங்களில் இருவரும் கையெழுத்து இட்டு தருவார்கள்
3)
வேலைநிறுத்த
நோட்டீசீல் அனைத்து பொதுசெயலர்களூம் கையெழுத்து இடுவார்கள்
4)
இதேபோன்று
அமைப்பு மாநில, மாவட்டங்களிலும் ஏற்படுத்தவேண்டும்.
Wednesday, 31 October 2018
Tuesday, 30 October 2018
Friday, 26 October 2018
CMD யுடன் சந்திப்பு
நமது பொதுசெயலர்
தோழர் அபினயூ அவர்கள் தோழர் அபினயூ அவர்கள்
CMD ஐ 25/10/18 அன்று சந்தித்து மத்திய அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென
கேட்டுக்கொண்டார். அதற்கு CMD அவர்கள் ஏற்கனவே18/10/18 சந்திப்பதற்கு முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அது
முடியவில்லை ஆகவே வருகிற 29/10/18 அன்று சந்திப்பதற்கு முயற்சி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
மத்திய செயற்குழுவின்
முக்கிய முடிவுகள்
1)
மத்திய
அரசாங்கத்தின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெறும் 2019 ஜனவரி
8,9 நடைபெறும் இரண்டு நாள் வேலைநிறுத்ததில் நமது சங்கம் கலந்து கொள்வதோடல்லாமல் அதை வெற்றிகரமாக நடத்தும் வகையில் அனைத்து மாநிலங்களிலும்
விரிவடைந்த மாநில செயற்குழு நடத்து வேண்டும்
2)
AUAB
அறிவித்துள்ள இயக்கங்களை வெற்றிகரமாக நடத்த பணியாற்ற வேண்டும்
3)
ஊதிய
மாற்ற பிரச்சினையில் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களூம் கூட்டாக ஒற்றுமையுடன் பணியாற்றுவதற்கு
பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சிறப்பான ஊதிய திருத்தம் மற்றும் HRA பெறுவதை உறுதிபடுத்த
வேண்டும்
4)
அகில
இந்திய மாநாட்டிற்கான சார்பாளர் கட்டணம் ரூ 1000/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5)
BSNL
CASUAL AND CONTRACT WORKERS FEDERATION அறிவித்துள்ள தர்ணாவை வெற்றிகரமாக்க நாம் முழுஒத்துழைப்பு
கொடுக்கவேண்டும்
6)
BSNL
புனரமைக்க கொண்டுவந்துள்ள திட்டமான BSNL AT YOUR DOOR STEP திட்டத்தை கீழ்மட்டம் வரை
கொண்டு செல்ல நம்முடைய தோழர்கள் பணியாற்ற வேண்டும்.
Thursday, 25 October 2018
மீண்டும் போராட்டத்தை
தீவிரப்படுத்துவோம்
ALL UNIONS
AND ASSOCIATIONS OF BSNL ன் 8/10/18 புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட
முடிவுகளை நமது மாவட்டத்தில் சிறப்பாக அமுல்படுத்துவதற்கான கூட்டம் 17/10/18 அன்று
நடைபெற்றது.அதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,TEPU ஆகிய சங்கங்களின் சார்பாக தோழர்கள்
கலந்து கொண்டனர்.கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1)
2000
நோட்டீஸ்கள் அச்சடித்து மாவட்டம் முழுவதும் வினியோகம் செய்வது.PGM OFFICE COMPOUND
ல் 29/10/18 அன்று காலை வினியோகம் செய்வது.
2)
29/10/18
அன்று மதியம் 3.00 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
கூட்டம்
நடத்துவது
3)
30/10/18
ஓரு நாள் தர்ணா திருச்சி PGM அலுவலகத்தில் நடத்துவது அனைத்து சங்கங்களிலிருந்தும் ஊழியர்களை
திரட்டுவது.
4)
14/11/18
பேரணி மற்றும் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்துவது.
5)
30/11/18
க்குள் பிரச்சினை தீராவிட்டால் வேலைநிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிகைகளூக்காக
ஊழியர்களை திரட்டுவது.
ஆகவே
அனைத்து அதிகாரிகளூம்,ஊழியர்களூம் அனைத்து இயக்கங்களிலும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன்
கேட்டுக் கொள்கிறோம்.
போராடமல்
பெற்றதில்லை, போராடி நாம் தோற்றதில்லை
ஓன்றுபடுவோம்| போராடுவோம்| வெற்றிபெறுவோம்|||
ALL
UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA
Thursday, 18 October 2018
Monday, 15 October 2018
மாவட்டமாநாடு
நமது மாவட்டத்தின்
9வது மாநாடு கீரனுரில் 10/10/18 அன்று மாவட்டதலைவர் தோழர் தேவராஜ் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.அதில் அகில இந்திய உதவிபொதுசெயலர் தோழர் S செல்லப்பா மாநில செயலர் தோழர்
A.பாபுராதாகிருஷ்ணன் நமது முதன்மை பொதுமேலாளர் திருமதி S E ராஜம் மற்றும் அதிகாரிகளும்
நமது சகோதர சங்க தோழர்கள் G சுந்தரராஜூ மாநிலஉதவி பொருளாளர் தோழர் M மல்லிகா மாநில
செயற்குழு உறுப்பினர் BSNL WWCC தோழர் I ஜான்பாஷா
DS AIBDPA தோழர் R கல்லடியான் மாநில செயற்குழு உறுப்பினர் TNTCWU G முபாரக் மாவட்ட
செயலர் TNTCWU தோழர் சின்னையன் மாநில செயற்குழு உறுப்பினர் AIBDPA ஆகியோர் கலந்து கொண்டனர்
செயல்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது, வரவு செலவு கணக்குகள்
சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின் கீழ்கண்ட
நிர்வாகிகள் ஏகமனாதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
1.மாவட்ட தலைவர் தோழர் T. தேவராஜ் TT
DTAX TRICHY
2.மாவட்ட உதவி
தலைவர் “ G. கார்திகேயன் AOS(G) CSC KARUR
3.” “ “ K. ராஜப்பா JE
PADALUR
4” “ “ R ஜம்புலிங்கம் TT
VIRAGALUR
5” “ “ U பூம்பாவை AOS(TG)
CSC PDK
6 மாவட்ட செயலாளர் “
S அஸ்லம்பாஷா AOS(TG) PGM-CSC
7 மாவட்ட உதவி
செயலர் “ G. சுந்தரராஜூ JE
AIRPORT TR
8 “ “ “ R முருகேசன் TT
BAZAR KARUR
9” “ “ G பாலசுப்ரமணியன் TT CM NWOP KRU
10 “ “ “
A இளங்கோவன் TT AUTO TRICHY
11 மாவட்ட பொருளாளர் “
R கோபி TT ARIYALUR
12.மாவட்ட உதவி
பொருளாளர் “ P ரவிச்சந்திரன் TT
TRICHY
13.மாவட்ட அமைப்பு
செயலர் “ A சண்முகம் TT WORAIYUR TR
14. “ “ “
K பன்னீர்செல்வம் TT KULITALAI
15 “ “ “
K தியாகராஜன் OS (T) PGM-CSC TR
16 “ “ “
K. பொன்னுசாமி TT THUVARNKURICHY
17 “ “ “
K. தண்டபானி TT THENNILAI
18 “ “ “
C ராஜேந்திரன் TT KEERANUR
Wednesday, 3 October 2018
வாழ்த்துகிறோம்
28/1/2018 அன்று
நடைபெற்ற JE தேர்வில் குறைந்த எண்ணிக்கையில்தான் தேர்வு பெற்றார்கள் காரணம் கேள்விதாள்
கடினமாக இருந்ததும் ஆனால் காலிபணியிடங்கள் அதிகமாக இருந்தது .ஆகவே மதிப்பெண்ணில் தளர்வு
கொடுக்க வேண்டும் அதன் மூலம் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில்
ஊழியர்கள் தேர்ச்சி
பெறவாய்ப்பு ஏற்படும்.நிர்வாகத்திற்கும் கூடுதல் எண்ணிக்கையில் JE க்கள் கிடைப்பார்கள்.
2008ல் நடைபெற்ற நரடி நியமன தேர்வில் காலிப்பணியிடங்கள்
நிரப்புவதற்கு மதிப்பெண்ணில் தளர்வு கொடுக்கப்பட்டது.அதை இலாகா தேர்வு எழுதிய ஊழியர்களூக்கும்
கொடுக்க
வேண்டுமென்று தொடர்ச்சியாக
நம்முடைய மத்திய சங்கம் கடிதம் கொடுத்து நிர்வாகத்துடன்
பேசிவந்தது.10/7/18 அன்று CMD வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் நாம் எடுத்துரைத்த
நியாயத்தை உணர்ந்து ஆவண செய்வதாக உறுதியளித்தார் .அதனை தொடர்ந்து DIRECTOR HR அவர்களையும்
சந்தித்து பேசியதின் விளைவாக தற்போது ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும்
250 ஊழியர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். நமது மாவட்டத்தில் நமது சங்கத்தை சேர்ந்த தோழியர்
இந்துமதி பள்ளப்பட்டி அவர்களும் தோழர் ரவிச்சந்திரன் பெரம்பலூர் அவர்களூம் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தபிரச்சினையை
விடாமல் நிர்வாகத்தோடு பேசி 250 ஊழியர்கள் பதவி உயர்வு பெற நடவடிகை எடுத்த மத்தியசங்கத்திற்கு
நம்முடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்
வாழ்த்துகிறோம்
அக்டோபர் 1 மற்றும்
2 தேதிகளில் திருப்பூரில் நடைபெற்ற TNTCWU
6வது மாநிலமாநாட்டில் தோழர் முருகையா
அவர்கள் தலைவராகவும் தோழர் வினோத்குமார் அவர்கள் மாநிலசெயலாளராகவும் தோழியர் பிரதீபா
அவர்கள் பொருளாளராகவும் நம்முடைய மாவட்டத்தை சேர்ந்த தோழர் கல்லடியான் அவர்கள் செயற்குழு
உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அவர்களூக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)