Wednesday 3 October 2018


                         
                    வாழ்த்துகிறோம்
28/1/2018 அன்று நடைபெற்ற JE தேர்வில் குறைந்த எண்ணிக்கையில்தான் தேர்வு பெற்றார்கள் காரணம் கேள்விதாள் கடினமாக இருந்ததும் ஆனால் காலிபணியிடங்கள் அதிகமாக இருந்தது .ஆகவே மதிப்பெண்ணில் தளர்வு கொடுக்க வேண்டும் அதன் மூலம் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில்
ஊழியர்கள் தேர்ச்சி பெறவாய்ப்பு ஏற்படும்.நிர்வாகத்திற்கும் கூடுதல் எண்ணிக்கையில் JE க்கள் கிடைப்பார்கள். 2008ல் நடைபெற்ற  நரடி நியமன தேர்வில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு மதிப்பெண்ணில் தளர்வு கொடுக்கப்பட்டது.அதை இலாகா தேர்வு எழுதிய ஊழியர்களூக்கும் கொடுக்க
வேண்டுமென்று தொடர்ச்சியாக நம்முடைய மத்திய சங்கம் கடிதம் கொடுத்து  நிர்வாகத்துடன் பேசிவந்தது.10/7/18 அன்று CMD வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் நாம் எடுத்துரைத்த நியாயத்தை உணர்ந்து ஆவண செய்வதாக உறுதியளித்தார் .அதனை தொடர்ந்து DIRECTOR HR அவர்களையும் சந்தித்து பேசியதின் விளைவாக தற்போது ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் 250 ஊழியர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். நமது மாவட்டத்தில் நமது சங்கத்தை சேர்ந்த தோழியர் இந்துமதி பள்ளப்பட்டி அவர்களும் தோழர் ரவிச்சந்திரன் பெரம்பலூர் அவர்களூம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தபிரச்சினையை விடாமல் நிர்வாகத்தோடு பேசி 250 ஊழியர்கள் பதவி உயர்வு பெற நடவடிகை எடுத்த மத்தியசங்கத்திற்கு நம்முடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்


No comments:

Post a Comment