Sunday 9 December 2018

இலாகா அமைச்சருடன் அனைத்து சங்க கூட்டமைப்பு சந்திப்பு

 03/12/2018  நமது இலாக்கா அமைச்சருடன் அனைத்து  சங்க  கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதுநமது கோரிக்கைகளில்  கீழ்க்கண்ட  முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

4G அலைக்கற்றை ஒதுக்கீடு

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக மத்திய அமைச்சரவை  ஒப்புதல் விரைவில்  பெறப்படும்இதற்கான  பணியை  செய்து  முடிக்க  DOTயின்  மூத்த  அதிகாரி ஒருவர் சிறப்பு அதிகாரியாக   நியமிக்கப்படுவார்.

ஓய்வூதிய மாற்றம்

ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும்.ஊதியமாற்றத்திற்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும் இனி  யாதொரு சம்பந்தமுமில்லை...ஓய்வூதியமாற்றம் ஊதியமாற்றத்தோடு இனி இணைக்கப்படாது.

ஓய்வூதியப்பங்களிப்பு

வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு  என்ற மத்திய அரசு உத்திரவு BSNLலிலும் இனி அமுல்படுத்தப்படும்.

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பு

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு மார்ச் 2019 முதல் கூடுதலாக 3 சத ஓய்வூதியப்பங்களிப்பு செய்யப்படும்.   நாளடைவில் மீதமுள்ள 4 சத பங்களிப்பும் வழங்கப்படும்.

புதிய சம்பள விகிதங்களுக்கு ஒப்புதல்..

BSNL பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதங்களுக்கு ‘உரிய ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணியை செய்து முடிக்க DOT அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார்.

3வது ஊதிய மாற்றம்..

BSNL ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான 3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது பற்றி BSNL மற்றும் DOT இடையே ஒருமித்த கருத்து உருவாவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

எனவே ஊதியமாற்றத்தில் நல்லதொரு முடிவினை எட்டிட…BSNL மற்றும் DOTக்கு  கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய அவசியம் இருப்பதால் டிசம்பர் 10 அன்று நடைபெறவிருந்த  காலவரையரையற்ற வேலைநிறுத்தத்தை மறு அறிவிப்பு வரும்வரை ஒத்தி வைத்திட அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment