Saturday, 31 March 2018

                    UNION BANK க்கான கடன் திட்டம் நீட்டிப்பு

UNION BANK க்கான கடன் திட்டம் 31/12/2017 வுடன் முடிந்துவிட்டது
இதை நீட்டிக்க வேண்டுமென்று நிர்வாகத்திடம் தொடர்ந்து
கேட்டு வந்தோம். அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
1/1/2018 முதல் 31/12/2018 வரை அமுலில் இருக்கும்.

                                   நிறுவனம் காக்க மீண்டும் போராட்டம்

நம்முடைய எதிர்ப்பையும் மீறி துணைடவர் கம்பெனி 1/4/2018 முதல்
செயல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.ஆகவே இதை கண்டித்து
27/3/18 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், இதனை
தொடர்ந்து BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,BSNLATM.AIGETOA,BSNLOA,FNTO.
SEWABSNL,BSNLMS ஆகிய சங்கங்கள் இணைந்து DOT க்கு மெமோரண்டம்
கொடுத்துள்ளனர். துணைடவர் கம்பெனி செயல்படுத்தும் முயற்சியை
உடனடியாக கைவிட வேண்டும்.இதை வலியுறுத்தி கீழ்கண்ட 
இயக்கங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை நமது மாவட்டத்தில்
வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஓத்துழைப்பு கொடுக்க வேண்டுமென‌
கேட்டுக்கொள்கிறோம்.
1) 12-4-2018     தர்ணா 

2) இயக்குனர் குழுவில் ஒப்புதல் அளித்தால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

3)19/4/2018 அன்று கவர்னரிடம் மனு கொடுப்பது.

Friday, 30 March 2018

                                                   வாழ்த்துக்கள்

மார்ச் மாதம் செல் இணைப்புக்கள் தமிழ்நாட்டில் 10 லட்சம் இணைப்புகளுக்கு
மேல் கொடுத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு லட்சத்து
இருபதாயிரத்திற்கு மேல் செல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களையும் 
பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, 23 March 2018

                                         27/3/2018   ஆர்ப்பாட்டம்

BSNL ன் டவர்களை தனியாக பிரித்து துணைடவர் கம்பெனி உருவாக்ககூடாது
என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.அரசாங்கம் தற்போது 1/4/18 முதல்
அதை உருவாக்க திட்டமிட்டுள்ளது அதற்கான பூர்வாங்க வேலைகள் 
நடைபெற்று வருகிறது.ஆக வே இதை கண்டித்து அனைத்து சங்கங்களும்
(BSNLEU,   NFTE   SNEA    AIBSNLEA    FNTO    SEWABSNL    BSNLMS BSNLOA )
27-3-2018 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த் வேண்டுமென்று 
அறை கூவல் விட்டுள்ளன . ஆகவே அதை நம்முடைய மாவட்டத்தில்
வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்

 27/3/2018 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
 
 
 
 
 
 
 
 

Wednesday, 21 March 2018

சங்க அமைப்பு தினம்---------22-3-2018

நமது சங்கம் 2001 ல் விசாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்து 
18 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறோம்.
இந்த 17 ஆண்டுகளில் ஊழியர்களின் தொடர்ந்த நம்பிக்கையின்காரணமாக‌
தொடர்ச்சியாக 6 வது முறையாக அங்கீகார தேர்தலில் வெற்றி பெற்று
வந்துள்ளோம்.
BSNL  ன்உரிமைக்காகவும்,BSNL ஐ பாதுகாக்கவும் பாடுபடும் என்று உறுதியேற்போம்

Friday, 16 March 2018

                                                     வாழ்த்துக்கள்

சமீபத்தில் அமிர்தரஸில் நடைபெற்ற NFTE அகில இந்திய மாநாட்டில்
திருச்சி மாவட்டத்தின்NFTE  செயலர் தோழர் பழனியப்பன் அவர்கள்
அகில இந்திய உதவி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, 27 February 2018

                                             காத்திருப்பு போராட்டம்

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி கொண்டிருக்கும் ஓப்பந்த‌
தொழிலாளர்களை (PARTTIME) நிதி நிலையை காரணம்காட்டி 300 பேரை
1/3/18 முதல் பணியிலிருந்து நீக்கியுள்ளது.இது சம்மந்தமாக மாவட்ட‌
நிர்வாகத்திடம் பேசசுவார்த்தை நடத்தி 300 பேரின் பணிநீக்க உத்தரவை
திரும்ப பெற வேண்டுமென்று கேட்டேம் திருச்சி மாவட்ட நிர்வாகம்
அதற்கு தயாரில்லை ,.ஆகவே வேறுவழியின்றி 
காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
 1/3/2018      PGM அலுவலகம்   காலை 10.00 மணி முதல்

அனைவரும் பங்கேற்பீர்


BSNL EMPLOYEES UNION-----NFTE (BSNL)--------TNTCWU

Monday, 19 February 2018

                                       சஞ்சார் பவன் நோக்கி பேரணி

நம்முடைய கோரிக்கைகளூக்காக வருகிற 23/2/2018 அன்று அனைத்து
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக சஞ்சார்பவன்
நோக்கி பேரணி நடைபெறுகிறது.
BSNL ஊழியர்சங்கம் சார்பாக 1500 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து
கொள்ளவுள்ளனர்.தமிழ்நாட்டிலிருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து
கொள்ளவுள்ளனர். 

திருச்சி SSA விலிருந்து அஸ்லம்பாஷா மாவட்ட செயலரும்
தோழர் கோபி மாவட்ட :பொருளாளரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வாழ்த்தி வழியனுப்புவோபம்
                                                           ஆர்ப்பாட்ட‌ம்

இந்த வார ஆர்ப்பாட்டம் நாளை 21/2/2018 புதன் கிழமை
நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று
தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA

Wednesday, 14 February 2018

                                                          ஆர்ப்பாட்டம்

அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பாக ஓவ்வொரு
புதன் கிழமையும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்று கடந்த 6ந்தேதி
ந்டைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வாரம் 15/2/18 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமென்று கேட்டுக்
கொள்கிறோம்.

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA

Wednesday, 7 February 2018

7-2-2018 அன்று திருச்சியில் நடைப்பெற்ற TNTCWU அமைப்பு தினம் மற்றும் அகில இந்திய எதிர்ப்பு தின நிகழ்வுகள்
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, 29 January 2018

திருச்சியில் 30-1-2018 முதல் 3-2-2018 வரை ஐந்து நாட்களுக்கு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்ற நிகழ்வுகள்