Friday, 16 March 2018

                                                     வாழ்த்துக்கள்

சமீபத்தில் அமிர்தரஸில் நடைபெற்ற NFTE அகில இந்திய மாநாட்டில்
திருச்சி மாவட்டத்தின்NFTE  செயலர் தோழர் பழனியப்பன் அவர்கள்
அகில இந்திய உதவி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, 27 February 2018

                                             காத்திருப்பு போராட்டம்

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி கொண்டிருக்கும் ஓப்பந்த‌
தொழிலாளர்களை (PARTTIME) நிதி நிலையை காரணம்காட்டி 300 பேரை
1/3/18 முதல் பணியிலிருந்து நீக்கியுள்ளது.இது சம்மந்தமாக மாவட்ட‌
நிர்வாகத்திடம் பேசசுவார்த்தை நடத்தி 300 பேரின் பணிநீக்க உத்தரவை
திரும்ப பெற வேண்டுமென்று கேட்டேம் திருச்சி மாவட்ட நிர்வாகம்
அதற்கு தயாரில்லை ,.ஆகவே வேறுவழியின்றி 
காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
 1/3/2018      PGM அலுவலகம்   காலை 10.00 மணி முதல்

அனைவரும் பங்கேற்பீர்


BSNL EMPLOYEES UNION-----NFTE (BSNL)--------TNTCWU

Monday, 19 February 2018

                                       சஞ்சார் பவன் நோக்கி பேரணி

நம்முடைய கோரிக்கைகளூக்காக வருகிற 23/2/2018 அன்று அனைத்து
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக சஞ்சார்பவன்
நோக்கி பேரணி நடைபெறுகிறது.
BSNL ஊழியர்சங்கம் சார்பாக 1500 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து
கொள்ளவுள்ளனர்.தமிழ்நாட்டிலிருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து
கொள்ளவுள்ளனர். 

திருச்சி SSA விலிருந்து அஸ்லம்பாஷா மாவட்ட செயலரும்
தோழர் கோபி மாவட்ட :பொருளாளரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வாழ்த்தி வழியனுப்புவோபம்
                                                           ஆர்ப்பாட்ட‌ம்

இந்த வார ஆர்ப்பாட்டம் நாளை 21/2/2018 புதன் கிழமை
நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று
தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA

Wednesday, 14 February 2018

                                                          ஆர்ப்பாட்டம்

அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பாக ஓவ்வொரு
புதன் கிழமையும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்று கடந்த 6ந்தேதி
ந்டைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வாரம் 15/2/18 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமென்று கேட்டுக்
கொள்கிறோம்.

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA

Wednesday, 7 February 2018

7-2-2018 அன்று திருச்சியில் நடைப்பெற்ற TNTCWU அமைப்பு தினம் மற்றும் அகில இந்திய எதிர்ப்பு தின நிகழ்வுகள்
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, 29 January 2018

திருச்சியில் 30-1-2018 முதல் 3-2-2018 வரை ஐந்து நாட்களுக்கு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்ற நிகழ்வுகள்





























                   DO   OR    DIE   செய் அல்லது செத்து மடி 

நமது இரண்டு முக்கியமான கோரிக்கைகளான 3 வது ஊதிய திருத்தம்
1/1/2017 முதல் அமுல்படுத்த வேண்டும், 
துணை டவர் கம்பெனி உருவாக்கும் முடிவை திரும்ப பெறு வலியுறுத்தி

30/1/2018 முதல் 5 நாட்களுக்கு சத்தியாகிரக போராட்டம் 
அமைதியான வழியில் போராடுவது, ஆனால் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு
தருவதில்லை
30/1/2018 முதல் காலவரையரையற்ற விதிப்படி வேலைநிறுத்தம்.

இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை ஆகவே நமக்கு
வேறு வழியில்லை.

ஓன்று பட்டு போராடுவோம் | அனைவரும் பங்கேற்பீர்| வெற்றி பெறச்செய்வீர்|

Friday, 19 January 2018

                மாவட்ட செயற்குழு ஜனவரி 25 திருச்சியில்

நமது மாவட்ட செயற்குழு வருகிற 25ந்தேதி திருச்சியில் நமது சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்,

நமது மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

மாலை 4.00 மணிக்கு அனைத்து சங்கங்களின் சார்பாக சிறப்புக்கூட்டம் நடைபெறவுள்ளது.
கிளைசெயலர்கள் தங்களது கிளைகளிலிருந்து பெரும்பாலான தோழர்கள் கலந்து
கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறென். 

30-1-2018 முதல் 3-2-2018 வரை ஐந்து நாட்களுக்கு சத்தியாகிரக போராட்டம்
நடைபெறவுள்ளது.அதிலும் முழுமையாக கலந்து கொள்ளவேண்டும்.
                                                                  23-2-2018

                                     சஞ்சார் பவன்நோக்கி பேரணி 

நம்முடைய கோரிக்கைகளூக்காக புது டெல்லியில் சஞ்சார் பவன்நோக்கி பேரணி நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தோழமையுடன்  கேட்டுக் கொள்கிறோம்

Friday, 12 January 2018

                                      சோப்பு,டவல் காண தொகை

சோப்பு,டவல்,பேனா,டம்ளர்,டைரி ஆகியவற்றிற்கான தொகை ரூ 500 
கொடுக்கப்பட்டுவந்தது. இதை உயர்த்தி கொடுக்க வேண்டுமென்று
நாம் நிர்வாகத்திடம் தொடர்ந்து பேசி வந்தோம் அதனடிப்படையில்
நிர்வாகம் அதை ரூ 750 உயர்த்தி கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது
அதனடிப்படையில் அந்த தொகை இந்த மாதம் ஜனவரி ஊதியத்துடன்
சேர்த்து வழங்கப்படும் .மாநில சங்கத்திற்கு நமது நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, 10 January 2018

8/1/18 அன்று நடைபெற்ற அனைத்து சங்ககூட்ட முடிவுகள்

1)30/1/18 முதல் 5 நாட்களூக்கு அகில இந்திய,மாநில,மாவட்ட‌
தலைநகரங்களில் சத்தியாகிரக போராட்டம்
2)30/1/18 முதல் விதிப்படி வேலை செய்தல்
3) 28/2/18 புது டெல்லியில் MARCH TO SANCHAR BHWAVAN
4) நமது துறை அமைச்சர்,DOT SECRETARY, CMD ஐ சந்திப்பது
5) SNEA தலைவர்  G L JOGI      AIBSNLEA GS PRAHALADRAI டவர்
கம்பெனி அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடரலாமா 
என்பதை வக்கீல்களின் ஆலோசனை பெறுவது.
6) BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA ஆகிய சங்கங்களின் பொது செயலர்
களை கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி
நடைபெறுகின்ற போராட்டங்களை கண்காணிக்கும்
7) அரசியல் கட்சிகள், மற்ற துறை சஙகங்களின் ஆதரவை பெறுவது.
 கோரிக்கைகள்
__________________
1)1/1/2017 முதல் 15 பிட்மெண்டுடன் ஊதியதிருத்தம் அமுல்படுத்த வேண்டும்
2) பென்ஷனை மாற்றி அமைக்கவேண்டும்
3)2 வது ஊதிய குழுவில் விடுபட்டுள்ள கோரிக்கைகளை தீர்க்க வேண்டும்
4)டவர் கம்பெனி முடிவை திரும்ப பெற வேண்டும்
5) ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்ககூடாது.VRS
அமுல்படுத்தகூடாது. 
                                        கண்டனம் தெரிவிக்கப்பட்டது

அனைத்து சங்கங்களின் சார்பாக 9/1/2018 அன்று CMD ஐ சந்தித்து
டவர் கம்பெனிக்கு CMD ஐ நியமித்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,FNTO BTEU,BSNLMS,TEPU,SEWA,BSNLOA,TOABSNL
BSNL-ATM ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
BSNL  தற்போதைய DIRECTOR கள் டவர் கம்பெனிக்கு மெம்பர்களாக‌
நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் BSNL போர்டின் அதிகாரம் 
குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால்  CMD  இது சம்மந்தமாக மொளனமாக இருந்துவிட்டார்,
                                                   ஆதரவு ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ள போக்குவரத்து தொழிலாளர்களூக்கு
ஆதரவாக அனைத்து சங்கங்களின் சார்பாக 10/1/18 அன்று PGM அலுவலகத்தில்
நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களூக்கும் நம்முடைய‌
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.