Thursday, 7 September 2017

தேசிய கவுன்சில் முடிவுப்படி JTO CIVIL   ம்ற்றும்  ELECTRICAL
LICE தேர்வுகளை உடனடியாக நடத்தவும் மத்தியசஙகம் கோரிக்கை

கேடர்பெயர் மாற்ற கூட்டம் 

கேடர்பெயர் மாற்ற கூட்டத்தில் 
DRAFTS MAN   கேடர்  JE CIVIL என்றும்
CHARGEMAN    கேடர்   JE TF    என்றும் பெயர் மாற்ற‌
ஒத்துக்கொண்டுள்ளது.
மற்ற 15 கேடர்கள் சம்மந்தமாக 26/9/17 அடுத்த கூட்டத்தில்
தொடர்ந்து விவாதிப்பது.
                          தயாராவோம் சென்னையை நோக்கி

அன்பார்ந்த தோழர்களே ஓப்பந்த தொழிலாளர்களூக்கு
பிரதிமாதம் 7ந் தேதி ஊதியம் வழங்க வேண்டுமென்று
கார்ப்பரேட் அலுவலக உத்தரவு இருந்தும் அதை நடைமுறை
படுத்துவதில்லை,19/1/17 முதல் அரியர்ஸ் இன்னும் வழஙகவில்லை
இது போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை CGM
அலுவலத்தில் 12/9/17,13/9/17,14/9/17 ஆகிய மூன்று நாட்கள் தொடர்
உண்ணாவிரதம் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,
நமது மாவட்டத்திலிருந்து 14/9/17 அன்று கலந்து கொள்ளவேண்டும்
ஆகவே நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட ,பிரச்சினைகள்
தீர்வதற்கு சென்னை செல்ல தயாராவோம்

Tuesday, 5 September 2017

                                              வாழ்த்துக்கள்

நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக‌
JAO தேர்வு முடிவுகளை மறு பரிசிலனை செய்ய வேண்டும்
என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் திருத்தப்பட்ட‌
RESULT வெளீயாகியுள்ளது அதில் நமது ரூரல் நார்த் கிளையின்
தலைவரும் மணச்சநல்லூரில்  JE  ஆக பணிபுரிவருமான 
தோழர் S. கண்ணன் JAO தேர்வில் வெற்றிபெற்றுள்ளார்
அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

இதற்கு முயற்சி எடுத்த நமது மத்திய சங்க்த்திற்கு நமது நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறோம்
                                   அஞ்சலி செலுத்துகிறோம்

2/9/17 அன்று பணீக்கு செல்லும்போது புதிதாக நேரடி நியமனத்தில்
பணீக்கு வந்த தோழர் ஜீவா JE அவர்களும் சுமார் 20 ஆண்டுகளாக‌
பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓப்பந்த ஊழியர் தோழர் கஜேந்திரன்
அவர்களூம் சாலைவிபத்தில் அகால மரமணமடைந்துள்ளனர்,
அவர்களுக்கு திருச்சி மாவட்டத்தின் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலையும்
வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday, 31 August 2017

உததரவு வெளியாகியது

இரவு நேரம் இலவசமாக ( இரவு 9.00 மணியிலிருந்து காலை 7.00 மணி வரை)
பேசும் வசதி வாடிக்கையாளர்களூக்கு அறிமுகப்ப்டுத்தப்பட்டது. இதை BSNL ல்
பணிபுரியும் ஊழியர்களுக்கும்,ஓய்வு பெற்றவர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென்று நமது சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து பேசி ந்தது.அதன்டிப்படையில்ஓய்வுபெற்ற்வர்களூக்குஉததரவிடப்பட்டது.பணியாற்றும் ஊழியர்களூக்குஅமுல்படுத்த வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தி வந்தோம் அதனடிப்படையில்30/8/2017 அன்று BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நமது மத்திய சங்கத்திற்கு நம்முடைய மனமார்ந்த நன்றியையும்,பாராட்டுதல்களையும்
தெரிவித்துக்கொள்கிறோம்.
SC/ST ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பது BSNL ஊழியர் சங்கம் மட்டுமே

SC/ST ஊழியர்களுக்கு பதவி உயர்வில் DOP &T உத்தரவை அதையொட்டிய‌
DOT -30/11/92 உத்தரவை அமுல்படுத்த வேண்டுமென்று BSNL ஊழியர் சங்கம்
நிர்வாகத்திடம் கடிதம் மூலமும் ,நேரடியாகவும் வலியுறுத்திவந்தது.
29/12/2014 மற்றும் 28/7/2016 ஆகிய தேதிகளில் ஒரு சில சலுகைகள் கொடுக்கப்
பட்டது. ஆனால்DOT -30/11/92 உத்தரவை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்று 
நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது அதன் தொடர்ச்சியாக நிர்வாகம்
28/8/2017 அன்று உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது  இது 28/7/2016 முதல் அமுலாகும்

தொடர்ந்து முயற்சி எடுத்து உத்தரவை பெற்று தந்த மத்தியசங்கத்திற்கு நம்முடைய‌
நன்றியையும் ,பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, 30 August 2017

BSNL ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் ரொக்க தொகை அதிகரிப்பு

BSNL ஊழியர்களுக்கு சோப்பு,டவல்,டம்ளர்,பேனா,டைரி க்காக‌
ரூ 500/- வழங்கப்பட்டு வந்தது அதை உயர்த்திதர வேண்டும்
என்று மாநில கவுன்சிலில் பேசப்பட்டது அதன்படி அந்த‌
தொகை உயர்த்தப்பட்டு ரூ 750/- வருகிற ஜனவரி 2018 முதல்
வழங்கப்படும்

Tuesday, 29 August 2017

BSNL ஊழியர்சங்கம் SC/ST ஊழியர்களின் சேம்பியன்

SC/ST ஊழியர்களுக்கு பதவி உயர்வில் அவர்களூக்கு உரிய‌
சலுகைகளை கொடுக்ககூடிய DOP & T  மற்றும்  DOT 30/11/1992
உத்தரவுகளை கறாராக அமுல்படுத்த வேண்டுமென்று  
BSNL ஊழியர்சங்கம் அமுல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து
வலியுறுத்திவந்தது . அதன்படி 29/12/2014 மற்றும் 28/7/2016 தேதியிட்ட‌
உத்தரவுகளில் ஒரு சில சலுகைகள் அறிவித்தது. ஆனாலும் 
BSNL ஊழியர்சங்கம் முழுமையாக DOT 30/11/1992 உததரவை
அமுல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்திவந்தது 
அதன்படி 28/8/2017 அன்று நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி
பதவி உயர்வு தேர்வில் SC ஊழியர்கள் 20 மதிப்பெண்களும்  /ST ஊழியர்கள்
15 மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
இந்த உத்தரவு 28/7/2016 முதல் அமுலுக்குவருகிறது.இந்த தேதிக்குப்பின்
தேர்வு எழுதிய அனைத்து SC,ST ஊழியர்களுக்கு பொருந்தும்.

BSNL ஊழியர்சங்கம் SC/ST ஊழியர்களின் சேம்பியன்,SC/ST ஊழியர்களின்
உரிமைகளுக்காக போராடுகின்ற ஒரே சங்கம் BSNL ஊழியர்சங்கம்தான்.
25/8/17 தனிநபர் அந்தரங்கம் மக்களின் அடிப்படை உரிமை
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


25/8/2017 நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

DIRECTOR (HR) அவர்கள் ந்ம்முடைய சங்கத்தோடு பேசுவதற்கு
செப்டம்பர் முதல் வாரத்தில் வருமாறு நம்முடைய பொது
செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

BSNL நிர்வாகத்தை கண்டிக்கின்றோம்

SNEA   பொதுசெயலருக்கும்  AIGETOA பொதுசெயலருக்கும்
தொழிற்சங்க நடவடிக்கைகளூக்காக பழிவாங்கும் நடவடிக்கையாக‌
CHARGESHEET (MAJOR PENALTY) கொடுத்துள்ளதை வன்மையாக‌
கண்டிக்கின்றோம்.
29/8/17 திருச்சியில் நடைபெற்ற‌ கண்டன ஆர்ப்பாட்டத்தில்
மாவட்டசெயலர் அஸ்லம்பாஷா கலந்து கொண்டு வாழ்த்துரை
வழங்கியோதோடு  இரண்டு பொதுசெயலர்களூக்கும் கொடுக்கப்பட்ட‌
CHARGESHEET உடனே வாபஸ் வாங்க வேண்டும் கோரிக்கை வைத்தார்
                     BSNL CCWF அறைகூவலின்படி ஆர்ப்பாட்டம்

BSNL CCWF மத்திய செயற்குழு முடிவுன்படி பணிபாதுகாப்பு/கோரிக்கைதினம்
ஆர்ப்பாட்டம் 23/8/2017 அன்று நடத்த வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டிருந்தது
அதன்படி திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
                                   
                                   




Thursday, 24 August 2017

                     கோல் இந்தியா நிறுவனம் நமக்கு ஒரு படிப்பினை


கோல் இந்தியா நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு 25 சதவீதம் ஊதியதிருத்தம்
வேண்டும் என்று கேட்டு போராடினார்கள். நிர்வாகம் 10 சதவீதம் கொடுக்க‌
முன்வந்தது ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளவிலலை.நிர்வாகம் 18 சதவீதம்
கொடுக்க முன்வந்தது.ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.இதற்கிடையில்
DPE பொதுதுறை நிறுவனங்களுக்கு 15 சதவீதம் தான் ஊதிய ஊயர்வு என்று
அறிவித்தது.இது கோல் இந்தியாவுக்கும் பொருந்தும். அதுவும் பத்து வருட‌
ஒப்பந்தம்.ஆனால் கோல் இந்தியா ஊழியர்கள் BMS சங்கம் உள்பட ஒன்றாக‌
இணைந்து 25 சதவீதம் உயர்வு வழங்க வேண்டுமென்று  போராடிக் கொண்டிருக்
கிறார்கள் அதுவும் ஐந்து வருடங்களூக்கு.நிச்சயம் ஒரு கணிசமான ஊதிய 
உயர்வு பெறுவார்கள்.அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்கள்.
 இது BSNL ல் பணீயாற்றக்கூடிய ஊழியர்கள் படிப்பினையாக எடுத்துக் கொண்டு
அனைத்து சஙகங்களும் ஒன்று பட்டு போராட வேண்டிய அவசியமேற்பட்டுள்ளதை
புரிந்து கொள்ள வேண்டும்

Monday, 21 August 2017

                             புதுடெல்லியில் மூன்று நாள் தர்ணா

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக நடைபெற்ற 8/8/17
கருத்தரஙகில் மத்திய அரசின் ஊழியர் விரோத ,தொழிலாளர் விரோத‌
கொள்கைகளூக்காக நவம்பர் 9.10.11 மூன்று நாட்கள் தர்ணா நடத்துவது
என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.அதில் நமது சங்க உறுப்பினர்கள்
பெரும்பான்மையாக கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய சங்கம்
அறை கூவல் விட்டுள்ளது.ஆகவே நம்முடைய மாவட்டத்திலிருந்து
பெரும்பான்மையாக கல்ந்து கொள்வோம்.
ஓன்று பட்ட போராட்டத்திற்கு AIBSNLEA ஆதரவு

நமது பொது செயலர் 3வது ஊதியதிருத்தம் பெறுவதற்கு
ஒரு கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்
அதில் உங்களுடைய சங்கமும் கலந்து கொள்ளவேண்டும்
என்று 10/8/17 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதற்கு AIBSNLEA
பொதுசெயலர் ஆதரவு தெரிவிப்பதாக 18/8/17 அன்று கடிதம்
எழுதியள்ளார். 
                           BSNL ன் வருமானம் உயர்ந்துள்ளது
BSNL ன் வருமானம் 2016 ல் 28449 கோடிரூபாயாக இருந்தது
2017 ல் 28477  கோடிரூபாயாக உயர்ந்துள்ளது.