Wednesday 26 October 2016


Wednesday, 26 October, 2016

ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனையை அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தோடு பேசக்கூடாதாம்(!)
ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனையை, அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் கூட விவாதிக்கக் கூடாது என தலைமை பொது மேலாளர்களுக்கு வழிகாட்டி 21.10.2016 அன்று கார்ப்பரேட் அலுவலகம் ஒரு கடிதத்தை எழுதியுள்ளது. BSNL ஊழியர் சங்கம் இதனை வன்மையாக கண்டித்ததோடு, இந்தக் கடிதத்தை திரும்பப் பெற வேண்டுமென CMD BSNLஐ வலியுறுத்தி உள்ளது. தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகம் உள்ளிட்ட 90 சதவிகித இடங்களில் குறைந்த பட்ச கூலி, EPF, ESI உள்ளிட்டவைகளை அமுலாக்க வேண்டும் என்கிற கார்ப்பரேட் அலுவலகத்தின் உத்தரவுகள் அமுலாக்கப்படுவதில்லை. இந்த இடங்களில் எல்லாம் ஒப்பந்த ஊழியர்கள் கடுமையாக சுரண்டப்படுவதோடு, அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை, ஒப்பந்ததாரர்களும், ஊழலில் திளைக்கும் சில அதிகாரிகளும் கொள்ளையடிக்கின்றனர். இதைப்பற்றி எல்லாம் ஒப்பந்த ஊழியர்கள் கேள்வி கேட்டார்கள் என்றால் அவர்கள் பணியில் இருந்து தூக்கி எறியப்படுகின்றனர். சங்கம் அமைக்க முயற்சித்தாலும் அவர்களின் கதி அதோகதி தான். ஒப்பந்த ஊழியர்களின் சட்ட பூர்வ உரிமைகளை அமுலாக்க வேண்டும் என கார்ப்பரேட் அலுவலகம் ஒரே மாதிரியான கடிதங்களை எழுதி வருகிறது. ஆனால் தலமட்டங்களில் அவற்றை முறையாக அமுலாக்குவதை உறுதி செய்ய உருப்படியான நடவடிக்கை இல்லை. ஒப்பந்த ஊழியர்களை சுரண்டுவது தொடரும் வரை அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் BSNL ஊழியர் சங்கம் என்றும் முன்னணியில் இருக்கும். இது போன்ற கடிதங்களை எழுதுவதை கைவிட்டு பிரச்சனைகளை தீர்வு காண நிர்வாகம் தயாராகட்டும்.

No comments:

Post a Comment