Wednesday, 29 May 2019


இந்த மாதம் (31/5/2019) பணி ஒய்வு பெறும் நமது சங்க உறுப்பினர்கள்
1.தோழர் .S.  பாலு            JE         குளித்தலை
2. “      M. முருகேசன்       TT         புதுக்கோட்டை
3. “      S. கந்தன்            TT         அரியலூர்
4.”       P. ஆறுமுகம்        TT         புதுக்கோட்டை
5.”       K,V,  ராஜேந்திரன்    TT         தொட்டியம்
6.”       M.A.  சகாயராஜ்      JE         திருச்சி
7.”       K. பாஸ்கர்           TT        திருச்சி
8.”       S. முரளி             TT        திருச்சி
9.”       M. செந்தாமரைகண்ணன் TT      திருச்சி


பணி ஒய்வு காலத்தை நீண்ட ஆயுளுடனும்,மன நிம்மதியுடன் வாழ வேண்டுமென வாழ்த்துகிறோம்
BSNLEU திருச்சி மாவட்ட சங்கம்

Tuesday, 28 May 2019


8வது சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் விரைவில் வரவுள்ளது
             தயாராயிருப்போம்
          BSNLEU------திருச்சி மாவட்டம்


            காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
பிப்ரவரி மாதம் முதல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்ககோரி 28/5/19 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம் நேற்றைய தினம் DGM ADMN அவர்களும் (27/5/19) இன்று 28/5/19  PGM அவர்களூம் நம்மை அழைத்து பேசினார்கள் கான்ட்ராக்டர்களை அழைத்து பேசி ஊதியம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்கள்.சனிக்கிழமைக்குள் ஊதியம் பட்டுவாடா ஆகவில்லை என்றால் திங்கள் முதல் (3/6/19) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளோம்.
காத்திருப்போம் அல்லது காத்திருப்போம் போராட்டத்தை துவங்குவோம்
BSNLEU---------------TNTCWU-------திருச்சி மாவட்ட சங்கங்கள்

Saturday, 25 May 2019


                 காத்திருப்பு போராட்டம்
ஓப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக திருச்சி மாவட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை .இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக பல கட்ட போராட்டம் நடத்திய பின்பும் ஊதியம் பட்டுவாடா ஆகவில்லை ஆகவே கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் சென்னையில் மாநில அலுவலகத்தின் முன்பாக உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.டெல்லியில் நமது பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கார்ப்பரேட் அலுவலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா முழுவதும் 30 சதவீதம் நிதி 14/5/19 ஒதுக்கீடு செய்யப்பட்டது.நிதி ஒதுக்கி 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஊதியம் பட்டுவாடா செய்யப்படவில்லை.
ஆகவே ஊதியத்தை உடனடியாக பட்டுவாடா செய்யவேண்டுமென்று 28/5/2019 காலை முதல் ஊதியம் கொடுக்கும் வரை திருச்சி PGM அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.ஆகவே அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களூம் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
BSNLEU---------TNTCWU--------திருச்சி மாவட்ட சங்கங்கள்