Thursday, 31 January 2019


           வேலை நிறுத்தத்திற்கு தயாராவோம்
25/1/2019 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற AUAB கூட்டத்தில் பிப்ரவரி 18 முதல் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆலோசனை கூட்டம் 29/1/2019 அன்று நடைபெற்றது. அதில் தோழர் அஸ்லம்பாஷா  BSNLEU தோழர் பழனியப்பன் NFTE தோழர் சக்திவேல் SNEA தோழர் சசிக்குமார் AIBSNLEA தோழர் அண்ணாதுரை TEPU ஆகியோர் கலந்து கொண்டனர்.கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
1)   2000 நோட்டீஸ்கள் அச்சடித்து வினியோகம் செய்வது
2)   ஊழியர்களிடம் பிரச்சாரம் செய்யும் வகையில் பயண திட்டம் வகுப்பது
3)   கோரிக்கை FLUX  வைப்பது
4)   செலவுகளை ஈடுகட்டும் வகையில் ஊழியர்களிடம் நிதி திரட்டுவது
5)   பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவது.
6)   மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் சிறப்புகூட்டம் நடத்துவது அதற்கு ஊழியர்களை திரட்டுவது

No comments:

Post a Comment