Saturday 3 November 2018


PGM வுடன் சந்திப்பு------3/11/2018
நமது மாவட்டத்திற்கு பொறுப்பாக இருக்ககூடிய திரு.C.V.வினோத் PGM அவர்களை 3/11/2018 அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்
தோழர் T.தேவராஜ் மாவட்டதலைவர் தோழர் S.அஸ்லம்பாஷா மாவட்டசெயலாளர் தோழர் G.சுந்தரராஜீ மாநில உதவிபொருளாளர்        தோழர் R.கோபி மாவட்ட பொருளாளர்.
முதன்மை பொதுமேலாளர்கள் அவர்களின் அணுகுமுறை நன்றாக இருந்தது நாம் ஏற்கனவே ஓப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கவேண்டுமென்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் கடிதம் கொடுத்து பேசினோம்.அதனை தொடர்ந்து 29/10/18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதனை தொடர்ந்து புதிய முதன்மை பொதுமேலாளர் அவர்களூக்கு கடிதம் கொடுத்து பேசினோம்.அவரும் அனைத்து கான்ட்ராக்டர்களிடமும் பேசியுள்ளார்.அதனடிப்படையில் HOUSE KEEPING ல் பணியாற்றும் ஊழியர்களூக்கு ரூ 5250/ Manpower ல் பணியாற்றும் ஊழியர்களூக்கு ரூ 3500/ ம் பட்டுவாடாகியுள்ளது.அனைத்து ஓப்பந்த தொழிலாளர்களூக்கும் அனைத்து கான்ட்ராக்டர்களூம் போனஸ் பட்டுவாடா ஆகவில்லை உடனடியாக பொது மேலாளர் அவர்கள் தலையிடுவதாக உறுதியளித்துள்ளார்.
அதே போல் புதிய டெண்டரில் முழுவதுமாக கொடுக்கும் வகையில் கண்டிஷன் சேர்க்கப்படும். திறனுக்கேற்ற ஊதியம் கொண்டுவரப்படும் என்று
கூறினார். நமது பிரச்சினைகள் சம்மந்தமாக கடிதம் கொடுத்து விவாதித்தோம் அனைத்திற்கும் நல்ல தீர்வு கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
மீண்டும் வருகிற 14 ந்தேதி சந்திக்கலாமென்று கூறியுள்ளார்.
முதன்மை பொதுமேலாளர் அவர்க்ளூக்கு நம்முடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

1 comment:

  1. "அதனடிப்படையில் HOUSE KEEPING ல் பணியாற்றும் ஊழியர்களூக்கு ரூ 5250/ Manpower ல் பணியாற்றும் ஊழியர்களூக்கு ரூ 3500/ ம் பட்டுவாடாகியுள்ளது." is it acceptable to us.Manpower ல் பணியாற்றும் ஊழியர்கhal performed daily 8hrs duty and 21 ie; 18 impcs+3 in IQ clrs also performing 8 hrs duty. so we will fight for 7000 Rs for the clrs. CC ex DS.

    ReplyDelete