Sunday, 19 November 2017

                     வேலைநிறுத்த கூட்டம் நமது மாவட்டத்தில்

அனைத்து சங்கங்களின் சார்பாக கீழ்கண்ட இடங்களில் 
கீழ்கண்ட தேதிகளில் நடைபெறவுள்ளது.அனைத்து சங்க‌
தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுகிறோம்.

BSNLEU---NFTE---SNEA---AIBSNLEA---FNTO---AIGETOA---SEWABSNL---BSNLMS
BSNLOA----BSNLATM----TEPU-----AIBSNLOA----BEABSNL

17/11/2017-----AUTO EXCHANGE   (நடைபெற்றுவிட்டது)

18/11/2017----D-TAX BUILDING   (நடைபெற்றுவிட்டது)

20/11/2017----PUDUKOTTAI

22/11/2017----KARUR

23/11/2017-----TRICHY PGM OFFICE  HUMANCHAIN மனிதசங்கலி இயக்கம்

24/11/2017----PERAMBALUR

25/11/2017----ARIYALUR

7-12-2017----TRICHY PGM OFFICE MEETING

Wednesday, 15 November 2017

                                              நன்றி  நன்றி நன்றி

நேற்று நடைபெற்ற தேசியகவுன்சில் கூட்டத்தில் ஊழியர்களுக்கு
தற்போது வழங்கி வருகின்ற ரூ 200 இலவச செல் கால்களுக்கு பதில்
தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள PLANT 429 திட்டத்தை
ஊழியர்களுக்கு வழங்கவேண்டுமென்று நமது பொதுசெயலர்
கோரிக்கைவைத்தார். கவுன்சிலின் தலைவர் DIRECTOR (HR) அதை
ஏற்றுக்கொண்டார். விரைவில் உத்தரவு வெளியாகும்.

இதன் மூலம் மூன்று மாதத்திற்கு எந்த NETWORK க்கும் UNLIMITED
பேசிக்கொள்ளலாம்.தினமும் 1 GB        DATA பயன்படுத்திக்கொள்ளலாம்

மத்தியசஙகத்திற்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

Sunday, 12 November 2017

கால வரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராவோம்

மூன்று நாட்கள் பல லட்சம் பேர் கலந்துகொண்ட தர்ணா
புதுடெல்லியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
அடுத்த பட்ஜெட் கூட்டத்தின்போது சிறைநிரப்பும் போராட்டமும்
அதற்கு அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவது
என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Friday, 3 November 2017

                                       வாழ்த்தி வழி அனுப்புகிறோம்

மத்திய அரசின் தொழிலாளர்விரோத கொள்கைகளை எதிர்த்து
11 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து 12 முக்கிய கோரிக்கைகளை
முன்வைத்து பல்வேறு இயக்கங்களுக்கு முடிவு செய்து அது
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக வருகிற‌
9,10,11 மூன்று நாட்கள் புதுடெல்லியில் பல லட்சம் பேர் கலந்து
கொள்ளக்கூடிய தர்ணா நடைபெறவுள்ளது. அதில் BSNLEU சார்பாக‌
நாடு முழுவதும் பல நூறு பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலத்
திலிருந்து 150 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நமது மாவட்டத்திலிருந்து BSNLEU   சார்பாக 8 பேரும்  AIBDPA சார்பாக 2
பேரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அவர்கள் அனைவரும் திங்கட்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ளனர்
அவர்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்

Monday, 23 October 2017

தேசிய வொர்க்ஷாப் ஹைதராபாத்தில்-22/1/2017

22/10/17 அன்று ஹைதராபாத்தில் மத்திய சங்கங்கள் பங்கேற்ற‌
வொர்க்ஷாப் நடைபெற்றது அதில் INTUC,AITUC,HMS,CITU,LPF,JAC
BANGALORE,JAC HYDERABAD போன்ற சங்கங்கள் கலந்து கொண்டன.
நமது பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கலந்து கொண்டார்
பல்வேறு பிரச்சினைகளைப்பற்றி விவாதித்தாலும் முக்கியமாக‌
ஊதியதிருத்தம்,பொதுதுறை நிறுவனங்களை பங்கு விற்பனை,
தனியார்மயப்படுத்துதல், ஆகியவற்றைபற்றி விவாதித்து இறுதியாக‌
கீழ்கண்ட முடிவுகளை எடுக்கப்பட்டது.

1)ஊதியதிருத்தம் 5 ஆண்டுக்கு ஒருமுறை செய்ய முயற்சி எடுப்ப;து
2)பொதுதுறை நிறுவனங்களை பங்கு விற்பனை,
தனியார்மயப்படுத்துதலை எதிர்த்து போராடுவது.
3)நிரந்தர வேலைகளீல் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதை தடுப்பது
4)ஓப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய திருத்தம் செய்வது

இதற்காக அனைவரும் ஓன்றுபட்டு போராடுவது
கூட்டு பேச்சுவார்த்தைகுழு அமைத்திடுக‌

PLI சம்மந்தமாக ஏற்கனவே நாம் 13/10/17 அன்று நாடுமுழுவதும்
ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.அதை தொடர்ந்து நிர்வாகம் இரண்டு
அங்கீகாரம் பெற்ற சங்கங்களையும் அழைத்து பேசி இது சம்மந்தமாக‌
PLI  கமிட்டியில் பேசி முடிவு வரலாம் என்று சொல்லப்பட்டது.ஆகவே
23/10/17 அன்று நமது பொதுசெயலர் GM SR அவர்களை சந்தித்து
கூட்டு பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார்.

விரிவடைந்த மாநில செயற்குழு மற்றும் கருத்தரங்கம்

நமது மாநிலத்தின் விரிவடைந்த செயற்குழு கிளைசெயலர்களும்
பங்கேற்ற கூட்டம் மதுரையில் 21/10/17 அன்று நடைபெற்றது. அதில்
வர இருக்ககூடிய அனைத்து சங்க இயக்கங்களைப்பற்றி நமது
பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கோரிக்கை சம்மந்தமாக‌
விளக்கி உரையாற்றினார்.நம்மை தயார்படுத்த வேண்டும் நூறு சதவீதம்
வெற்றிபெற செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

மதியம் ரஷ்யாவில் நடைபெற்ற பாசிச ஆட்சியை கடுமையான‌
போராட்டத்தின் மூலமாக விரட்டியடித்து உலகத்தில் முதன்முதலில்
தொழிலாளர்கள் தலைமையில் ஆட்சி அமைத்த தோடு மற்றநாடுகளில்
சுதந்திரத்திற்காக போராடுபவர்களூக்கு உத்வேகம் அளித்து அதன் மூலம்
ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வைத்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு
கருத்தரங்கம் நடைபெற்றது.அதில் CITU வின் அகில இந்திய துணை தலைவர்
தோழர் A K பத்மனாபன் சிறப்புரையாற்றினார்.நமது பொதுசெயலர் அவர்களும்
உரையாற்றினார். 

Sunday, 22 October 2017

வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது

1.3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துக‌
2.துணைடவர் கம்பெனியை உருவாக்காதே
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வதன்று
அனைத்து சங்கங்களின் சார்பாக முடிவு செய்யப்பட்டு அதற்கான‌
நோட்டீஸ்  11/10/2017 அன்று நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Monday, 16 October 2017

காத்திருப்பு போராட்டம்



 

 
 
 

காத்திருப்பு போராட்டம் வெற்றி

நாம் எற்கனவே நமது ஒப்பந்த தொழிலாளர்களின் 9 கோரிக்கைகளை முன்வைத்து 7-10-2௦17 அன்று உண்ணாவிரதம் நடத்தினோம். அதன்பின் சில முன்னேற்றங்கல் வந்தாலும் முழுவதுமாக பிரச்சினைகள் தீரவில்லை, ஆகவே அடுத்தகட்டமாக 12-10-2௦17 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது, மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலைந்து கொண்டனர்.
தோழர் C.பழனிச்சாமி (அகில இந்திய உதவி பொது செயலர் BSNLCCWF) துவக்கிவைத்தார், அதன்பின் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் PGM, DGM(A), DGM-CFA-I, AGM-SALES, AGM-CM நிர்வாகத்தரப்பிலும், நமது சங்கத்திலிருந்து தோழர் T.தேவராஜ் DP, தோழர் S.அஸ்லாம்பாஷா DS, தோழர் Gசுந்தராஜ் ADS, தோழர் R.கோபி DT, தோழர் C.பழனிச்சாமி (அகில இந்திய உதவி பொது செயலர் BSNLCCWF)  கலந்துகொண்டனர். கிழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன ,
1) விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் இன்றைக்குள் வழங்கப்படும்,
2) விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை தொகை சனிகிழமைக்குள்        வழங்கப்படும்,
3) 20-05-2009 முதல் கிடைக்கவேண்டிய நிலுவை தொகை பட்டுவாடா சம்பந்தமாக ஸ்டே விலக்கு செய்வதற்கு மாநில நிர்வாகத்திற்கு கடிதம் எழுதப்படும்,
4) போனஸ் பட்டுவாடாவிற்கு அனைத்து ஒப்பந்தகாரரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. திபாவளிக்குள் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,
5) விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 15 ஊதியம் உடனடியாக வழங்கப்படும்,
6) பணி நேரம் 6 மணி நேரத்திலிருந்து 8 நேரமாக உயர்த்துவது, திறனுக்கேற்ற ஊதியம் போன்றவை தேவைக்கேற்றபடி முடிவு செய்யும்,
7) ஆளில்லா தொலைபேசி நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்க வேண்டுமென்று கேட்டோம், அந்த லிஸ்ட் கொடுத்தல் பரிசிலித்து முடிவு செய்யப்படும்,
8) குளித்தலை, முசிறி, கரூர் பகுதியில் MAN POWER டெண்டர் அமுல்படுத்துவது சம்பந்தமாக பரிசிலனை செய்யப்படும்.

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், தோழிகளுக்கும் இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, 11 October 2017

                                           PLI ஐ கேட்டு ஆர்ப்பாட்டம்

இந்த வருடம் PLI வழங்கவேண்டுமென்று நமது பொதுசெயலர்
CMD க்கு 2 முறை கடிதம் எழுதியுள்ளார்.பலமுறை நேரில் சந்தித்து
பேசியுள்ளார். ஆனாலும் நிர்வாகம் BSNL ன் நிதிநிலையை காரணம்காட்டி
மறுக்கின்றது.ஆகவே அனைத்து சங்கங்களும் இணைந்து போராடுவோம்
என்று அனைத்து சங்க பொதுசெயலர்களூக்கும் 7/10/17 அன்று கடிதம்
எழுதியுள்ளார்.ஆனால் அதில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால்
13/10/2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து
சஙகங்களூம் ஆதரவு கொடுக்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.

13/10/2017- அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்

Sunday, 8 October 2017

PLI க்காக ஓன்று பட்ட போராட்டத்திற்கு அழைப்பு

PLI சம்மந்தமாக ஏற்கனவே 2 முறை நிர்வாகத்திடம் பேசப்பட்டுள்ளது
ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆகவே ஒரு ஒன்று பட்ட‌
போராட்டம் நடத்தி நிர்வாகத்தை நிர்பந்தப்படுத்தினால்தான் நாம் PLI
பெறமுடியம்.எனவே ஒன்று பட்டு போராடுவதற்கு வருமாறு நம்முடைய‌
பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

Friday, 6 October 2017

PLI வழங்ககோரி DIRECTOR HR&FINANCE க்கு மத்தியசங்கம் கடிதம்

இந்த ஆண்டுக்கான PLI வழங்க வேண்டுமென்று பொதுசெயலர்
ஏற்கனவே 14/9/17 அன்று கடிதம் எழுதியிருந்தார்.தற்போது 5/10/17
மீண்டும் அதை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்

Thursday, 5 October 2017

வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள்

4/10/17 அன்று புதுடெல்லியில் அனைத்துசங்க கூட்டம் நடைபெற்றது.
அதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,FNTO,AIGETOA,SEWABSNL,BSNLMS,
ATM,TOABSNL ஆகியசஙகங்களின் பொதுசெயலர்கள் கலந்து
கொண்டனர்,
ஊதியதிருத்தம் மற்றும் துணைடவர் கம்பெனி உருவாக்குவது
சம்மந்தமாக விரிவான விவாதம் நடைபெற்று கீழ்கண்ட முடிவுகள்
எடுக்கப்பட்டன,

1) இந்த அமைப்பு இனி ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அதாவது
BSNL ன் அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சஙகங்கள் என்ற‌
பதாகையின் கீழ்செயல்படும்
2)இனி நிர்வாகத்திற்கு,அரசாங்கத்திற்கு கொடுக்கப்ப‌டும் கடிதஙகங்களீல்
அனைத்து பொதுசெயலர்களும் கையெழுத்திடுவார்கள்.
3)3 வது ஊதியதிருத்தம் 1/1/2017 முதல் அமுல்படுத்த வேண்டும்,2வது
ஊதியதிருத்தத்தில் நிலுவையிலுள்ள நேரடி நியமன ஊழியர்களூக்கு
பணிஓய்வு பலன்களை வழங்கவேண்டும்
4)16/10/17 அன்று கார்ப்பரேட் அலுவலகம்,மாநில தலைமையகம்,மாவட்ட‌
தலைமையகஙகளில் ஆர்ப்பாட்டம்
5)16/11/17 மேற்சொன்ன இடஙகளில் மனித சஙகலி போராட்டம்
6) நாடாளூமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளிப்பது
7)டிசம்பர் 12,13 தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தம்
8)பிரச்சினை தீரவில்லையென்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்
எப்போது என்று முடிவு செய்யப்படும்
9)அடுத்த கூட்டம் 23/10/17 அன்று நடைபெறும்