Thursday, 27 July 2017

ஜூலை 27 அன்று திருச்சியில் நடைபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்  ஒருநாள் வேலை நிறுத்ததில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

 




Tuesday, 25 July 2017



தீக்கதிர் செய்தி                       
பிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்
புதுதில்லி, ஜூலை 25-
பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஜூலை 27 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்திட முடிவு செய்திருப்பதாக, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கன்வீனர் பி.அபிமன்யு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஊதியத் திருத்தம் கோரி, வரும் ஜூலை 27 அன்று பிஎஸ்என்எல் ஊழியர்களும், அலுவலர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
பொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதியத் திருத்தம் குறித்தபேச்சுவார்த்தைகள் 2017 ஜனவரி 1 அன்றே தொடங்கியிருக்க வேண்டும். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையில் மூன்றாவது ஊதிய திருத்தக்குழு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அக்குழுவும்தன் அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்பி, அமைச்சரவைக்குழுவும் அதனை 2017ஜூலை 19 அன்று ஏற்றுக்கொண்டுவிட்டது. அக்குழு அளித்துள்ள பரிந்துரையில் மிகவும் முக்கியமான ஒன்று, தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக லாபம் ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத் திருத்தம் செய்திட வேண்டும் என்பதாகும்.இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஊதியத் திருத்தத்திற்கு தகுதி அற்றவர்களாகிறார்கள்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றைய தினம் நட்டத்தில் இயங்குவதற்கு அதன் ஊழியர்கள் காரணமல்ல, மாறாகஅரசாங்கமே காரணம் என்பதையும் அது அமல்படுத்திவரும் பிஎஸ்என்எல் விரோத கொள்கைகளே காரணம் என்பதையும் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம், 2006 ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டுவரை தன்னுடையமொபைல் வலை விரிவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்குஅரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட டெண்டர்களை அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக தள்ளுபடி செய்து வந்துள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செய்து வந்தது.
அரசாங்கமே தொடர்ந்து முட்டுக்கட்டை விதித்து வந்ததன் காரணமாகவே, மொபைல் வளர்ச்சியில் பிஎஸ்என்எல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. எனவே, பிஎஸ்என்எல் அலுவலர்களும், ஊழியர்களும் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 27 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லைஎன்றால், பிஎஸ்என்எல் அலுவலர்கள் – ஊழியர்கள் போராட்டங்கள் தீவிரமாகும். இவ்வாறு பி.அபிமன்யு கூறியுள்ளார்
21-07-2017 அன்று புதுகையில் நடந்த வேலை நிறுத்த விளக்க கூட்டம்


 
 
 
 

Monday, 24 July 2017

வேலைநிறுத்த தயாரிப்புகூட்டம்/விளக்க கூட்டங்கள்

1)துறையுர்-------12/7/17-----                -தோழர்.    T.  தேவராஜ்     மாவட்டதலைவர்
2) CSC-MGG,AUTO---22=7-17                                       S.அஸ்லம்பாஷா மாவட்டசெயலர்
3)CANT,D-TAX  ------19-7-17                                         S.அஸ்லம்பாஷா மாவட்டசெயலர்
4)WESR------------------                                                       A.  இளங்கோவன் மாவட்ட உதவிசெயலர்
5)RURAL-SOUTH---24/7/17                                             K.    நாகராஜன் மாவட்ட அமைப்புசெயலர்
6RURAL -NORTH---22/7/17                                              T.  தேவராஜ்     மாவட்டதலைவர்
7)KULITALAI,MUSIRI--24/7/17                                      G.  சுந்தராஜூ மாவட்ட உதவி செயலர்
8)KARUR-URBAN--------25/7/17                                    T.  தேவராஜ்     மாவட்டதலைவர்  
9)KARUR-RURAL--------21/7/17                                     G. பாலசுப்ரமணீயன் மாவட்ட உதவி செயலர்
10)ARAVAKURICHY---25/7/17                                      G. பாலசுப்ரமணீயன் மாவட்ட உதவி செயலர்
11)PERAMBALUR------19/7/ G                                              சுந்தராஜூ மாவட்ட உதவி செயலர்
12)PDK-U.PDK-R-------21/7/17                                        S.அஸ்லம்பாஷா மாவட்டசெயலர்
13)TUB--------------------25/7/17                                       A.சண்முகம் மாவட்ட அமைப்புசெயலர்
மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டகூட்டங்கள் நடைபெற்றுள்ளன,
தோழர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இன்னும் ஒருநாள் தான் உள்ளது ஆகவே இன்னும் சந்திக்காத நமது உறுப்பினர்களை
சந்தித்து பிரச்சாரம் செயவது,மாற்று சங்க தோழர்களையும் சந்தித்து வேலைநிறுத்ததில்
கலந்து கொள்ளவைப்பது..
                                   விரைவில் உத்தரவு வருகிறது


இரவு நேரம் இலவசமாக பேசும் வசதி பணியாற்றும் ஊழியர்களூக்கும்
விரிவுபடுத்த வேண்டும் என்றுதொடர்ச்சியாக கேட்டு வந்தோம் 
விரைவில் உத்தரவு வெளியாகும் என்று நிர்வாகம் கூறியுள்ளது.

Friday, 14 July 2017

                               வாழ்த்தி              வரவேற்கிறோம்

FNTO சங்கம் 27/7/ 17 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில்
கலந்துகொள்கிறது

FNTO சங்கத்தின் மத்தியசெயற்குழு சமீபத்தில் பாட்னாவில்
நடைபெற்றது.அதில் 27/7/17 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்ததில்
கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் சரியான முடிவு செய்த FNTO சங்கத்தை வாழ்த்துகிறோம்
அதற்கு முயற்சி எடுத்த நமது பொதுசெயலருக்கு வாழ்த்துகளை 
தெரிவித்துக் கொள்கிறோம்.

கூடுதல் பலத்துடன் போராடுவோம்.

Thursday, 13 July 2017



ஊதியமாற்ற பிரச்சினைக்காக BSNL ஊழியர்சங்கம் மற்றும் கூட்டணி சங்கங்கள் சார்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் இன்று திருச்சியில் நடைப்பெற்றது. உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி NFTE   மாவட்ட துணை செயலர்  தோழர்  M.பாலகிருஷ்ணன்  ,TEPU மாவட்டதுணை பொது செயலர் தோழர் M.ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .


 

 
 


 
 
 
 

Sunday, 9 July 2017



7-7-2017 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழு மற்றும் தோழர்.P.கலையரசன் மாவட்ட துணைத்தலைவர்  அவர்களின் பணிநிறைவு பாராட்டுவிழா நிகழ்வுகள்







 

Tuesday, 4 July 2017

மாவட்ட செயற்குழு--------7-7-2017----பெரம்பலூர்
நம்முடைய சங்கத்தின் மாவட்டசெயற்குழ் வருகிற 7/7/17 அன்று
பெரம்பலூரில் நடைபெறவுள்ளது.மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள்
கிளைசெயலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவ

7-7-2017        நேரம் ----- 10.30 மணி  இடம் --தொலைபேசி நிலையம் பெரம்ப‌லூர்

ஆய்படுபொருள்
1) 13/7/2017-உண்ணாவிரதம்  27/7/17 ---ஒருநாள் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக‌
நடத்துவது சம்மந்தமாக விவாதம்
2)மத்திய செயற்குழு முடிவுகள் அமுலாக்கம்
3) தல மட்ட பிரச்சினைகள்
4) ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள்---போராட்ட திட்டமிடல்
5) வொர்க்ஸ் கமிட்டிக்கு நியமனம்
6) பிற தலைவர் அனுமதியுடன்

தோழர்.S.சுப்பிரமணீயன் மாநில உதவிசெயலர் துவக்கி வைககவுள்ளார்

அன்று மாலை 4.00 மணியளவில் மாவட்ட உதவி தலைவர்
தோழர்.P. கலையரசன் அவர்களுக்கு 
மாவட்டசங்கத்தின் சார்பாக பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

Monday, 3 July 2017

ஊதியமாற்ற பிரச்சினைக்காக NFTE மற்றும் அதன் கூட்டணிசங்கங்கள் சார்பாக தொடர் உண்ணாவிரதம் இன்று திருச்சியில் நடைப்பெற்றது.
தொடர் உண்ணாவிரத்தை  வாழ்த்தி BSNLEU  மாவட்ட துணைத்தலைவர் தோழர்  G.சுந்தரராஜ்   , மாவட்டசெயலர் தோழர் S.அஸ்ஸலாம்பாஷா  ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .