Friday 21 June 2019

19/6/2019 அன்று புதுடெல்லியில் நடந்த AUAB கூட்ட முடிவுகள்
புதுடெல்லியில் 18/6/19 அன்று நடந்த AUAB கூட்டத்தில் BSNLEU,NFTE-BSNL,SNEA,AIBSNLEA,AIGETOA,BSNLMS,BSNL-ATM,TEPU ஆகிய சங்கங்களின் பொதுசெயலர்கள்,பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறிப்பாக EB BILL கட்டாமல் FUSE பிடுங்கி செல்ல கூடிய நிலைமை,கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருப்பது இதனால் நம்முடைய வேலை தரம் பாதிப்பு,முதலீட்டு செலவிற்கு தடை விதித்துள்ளது பற்றியெல்லாம் விரிவாக விவாதம் நடத்தி கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
1)   தற்போதைய நிலைமையை சீர்செய்வதற்கு உடனடியாக நமது அமைச்சரை சந்திப்பதற்கு கடிதம் கொடுப்பது (கடிதம் கொடுக்கப்பட்டு விட்டது).
2)   BSNL நிர்வாகம் முதலீட்டு செலவிற்கு விதித்துள்ள தடையை உடனடியாக வாபஸ் வாங்கவேண்டும்
3)   தற்போதைய நிதி  நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவி செய்யவேண்டுமென்று அமைச்சருக்கு விளக்க கடிதம் எழுதுவது.
CMD ஐ சந்தித்து  FR 17A ஐ உடனடியாக கைவிட வேண்டுமென்று கோருவது.(இதன்படி அனைத்து பொதுசெயலர்களூம் CMD ஐ சந்தித்து பேசினர் அவரும் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்)

No comments:

Post a Comment