Saturday 3 November 2018


DOT SECRETARY வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை 2/11/2018
DOT SECRETARY வுடன் AUAB  தலைவர்களூடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
1.   3 வது ஊதியதிருத்தம் BSNL யிடம் சில சந்தேகங்கள் கேட்கப்பட்டுள்ளது அது கிடைத்தவுடன் அமைச்சரவை குறிப்பு தயார் செய்து மற்ற அமைச்சரகங்களூக்கு சுற்றுக்கு விடப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபடும். BSNL நிறுவனம் இந்த மாத இறுதிக்குள் DOT எழுப்பிய சந்தேகங்களூக்கு பதில் கொடுத்துவிடும்.மூன்று மாதங்களூக்குள் இதை முடிவுக்கவேண்டும் .பாராளூமன்ற தேர்தல் அறிவித்துவிட்டால் சிரமமாகிவிடுமென்று சொல்லப்பட்டது.விரைவில் தீர்த்துவைக்கப்படும் என்று   DOT SECRETARY உறுதியளித்தார்.
2.   4G ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு சம்மந்தமாக அமைச்சரவை குறிப்பு
மற்ற அமைச்சரகங்களூக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது பின் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபடும்
3.பென்ஷன் பங்களிப்பு உண்மை ஊதியத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை DOT யின் RECOMMENDATION வுடன் அடுத்த வாரம் DEPARTMENT OF EXPENDITURE க்கு அனுப்பபடும்
4.பென்ஷன் திருத்தம் சம்மந்தமான பிரச்சினையில் DOT SECRETARY அவர்கள் MEMBER SERVICES ஐ உடனடியாக இது சம்மந்தமாக தன்னுடன் விவாதிக்க வேண்டுமென்று கேட்டுள்ளார்.
5. நேரடி நியமன ஊழியர்களூக்கு ஓய்வூதிய பலன்களை
உயர்த்தி கொடுக்கவேண்டுமென்ற கோரிக்கை சம்மந்தமாக BSNL CMD தான் முடிவெடுக்கவேண்டுமென்று DOT SECRETARY கூறினார்.CMD அவர்கள் ஏற்கனவே இருந்ததைவிட இன்னும் கூடுதலாக 2 சதவீதம் உயர்த்துவதாக கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்குப்பின் AUAB தலைவர்கள் கூடி பேசினார்கள்.மற்ற பிரச்சினைகளில் DOT யின் பதில்கள் திருப்தியாக இருந்தாலும்  ஊதிய திருத்த பிரச்சினையில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை ஆகவே ஏற்கனவே திட்டமிட்ட 14 ந் தேதி பேரணி சக்திமிக்கதாக நடத்தவேண்டுமென்று AUAB கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
DOT SECRETARY ஐ சந்திப்பதற்கு முன் நடைபெற்ற AUAB கூட்டத்தில்
கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
1)   AUAB வின் சேர்மனாக தோழர் சந்தேஷ்வர்சிங் கன்வீனராக தோழர் அபிமன்யூ அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
2)   நிர்வாகத்திற்கு கொடுக்கும் கடிதங்களில் இருவரும் கையெழுத்து இட்டு தருவார்கள்
3)   வேலைநிறுத்த நோட்டீசீல் அனைத்து பொதுசெயலர்களூம் கையெழுத்து இடுவார்கள்
4)   இதேபோன்று அமைப்பு மாநில, மாவட்டங்களிலும் ஏற்படுத்தவேண்டும்.

No comments:

Post a Comment