Tuesday 28 August 2018

ஊதிய மாற்றக் குழுவின் மூன்றாவது கூட்டம்
ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் தலைமையில் 27.08.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தின் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு பெற்றனர். கடந்த கூட்டத்தில் ஊழியர் தரப்பு தங்களின் முன்மொழிவை கொடுத்திருந்தது. இந்தக் கூட்டத்தில் நிர்வாக தரப்பு அவர்களின் முன் மொழிவை முன்வைத்தது. நிர்வாக தரப்பில் புதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவிற்கு பழையை ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச ஊதியத்தை 2.4ஆல் பெருக்கி NE1ன் குறைந்த பட்ச ஊதிய விகிதத்தை 18,600 ரூபாய் என முன்வைத்தது. ஊழியர் தரப்பு அதனை ஏற்றுக் கொள்ளாமல் பெருக்கல் காரணி என்பது 2.44ஆக இருக்க வேண்டும் என்றும் அதன் காரணமாக E1 ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவு ரூ.18,934/- என இருப்பதை முழுமையாக்கி ரூ.19,000/- என இருக்க வேண்டும் என்று வாதிட்டனர். அத்துடன் அனைத்து ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவை கணக்கிட பெருக்கல் காரணியாக 2.44 என்பதை அடிப்படையாக வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதனை பரிசீலிக்க நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. 
ஊதிய விகிதத்தின் கால அளவு 43 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் முன்வைத்த ஆலோசனைக்கு பதிலளித்த நிர்வாக தரப்பு, இதன் காரணமாக ஓய்வூதிய பங்கீட்டில் செலவு கடுமையாக உயரும் என தெரிவித்தது. ஊதிய மாற்றத்திற்கு பின் எந்த ஒரு ஊழியரும் ஊதிய தேக்க நிலையை அடைந்துவிடாமல் இருப்பதற்கு தேவையான கால அளவு இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்தை 10.09.2018 அன்று நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது. 
பேச்சு வார்த்தை மிக மெதுவாக செல்வது குறித்து ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். இதே வேகத்தில் சென்றால் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க முடியாது என்று தெரிவித்த அவர்கள் இன்னமும் குறைந்த கால இடைவெளியில் இந்தக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். 

Monday 27 August 2018


               ஊதிய திருத்த பேச்சுவார்த்தை-27-8-18
மூனறாவது கட்டமாக 27/8/18 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
நிர்வாகம்—பழைய அடிப்படை சம்பளம் அதனுடன் 2.4 காரணி பெருக்கலாக வரக்கூடிய ரூ 18600/-NE-1 க்கு என்பதை முன்மொழிந்தது
ஊழியர் தரப்பு --- அடிப்படை சம்பளம் அதனுடன் 2.4 காரணி பெருக்கலாக
வரக்கூடிய ரூ 18944/- NE-1 க்கு என்பதை ரூ 19000/- என்பதை வலியுறுத்தினார்கள். நிர்வாகம் பரிசிலிப்பதாக கூறியுள்ளது.
ஊழியர் தரப்பு-----MAXIMUM என்பதை 43 வருஷமாக இருக்கவேண்டுமென்று கேட்கப்பட்டது.
நிர்வாகதரப்பு------அவ்வளவு அதிகமாக  நீட்டமுடியாது காரணம் பென்ஷன் பங்களிப்பு செலவு அதிகமாகும்.ஆனால் ஊழியர் தரப்பு அதிக பட்சமாக நீட்ட வேண்டுமென்று எந்த ஊழியரும் பாதிக்ககூடாது. என்று கோரினார்கள் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த கூட்டம் 10/9/18 அன்று நடைபெறும்

Wednesday 22 August 2018


                   நன்றி| நன்றி| நன்றி|



கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த மா நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நிதி வழங்கவேண்டுமென்று அனைவரிடமும் கேட்டோம். அந்த வகையில்
நன்கொடை அளித்துள்ளார்கள்
PGM OFFICE             RS 11805-
AUTOEXGE               RS 1750
KARUR                 RS 8700
ARIYALUR              RS 1800
CANT TR              RS 1700
                   ________________
TOTAL               RS 25755
                  _______________________
நன்கொடை அளித்த அனைவருக்கும் நம்முடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.       


Friday 17 August 2018

                               கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்

முன்னாள் பிரதமர் ,பாரதரத்னா விருதுபெற்றவரும் ,கவிஞருமான திரு
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்
காலமாகிவிட்டார் என்பதை கேட்டு வருத்தம் அடைந்தோம்.
அன்னாரது பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

Tuesday 14 August 2018

                                              நன்றி| நன்றி| நன்றி|
கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் வகையில் நன்கொடை
வழங்கவேண்டும் என்று கேட்டோம் ஊழியர்கள்,அதிகாரிகள்,ஓப்பந்த தொழிலாளர்கள் ரு 11605/- கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

Sunday 12 August 2018

                                   கேரளத்திற்கு உதவிடுவோம்

கடந்த 5 நாட்களுக்காக பெய்யும் கடும் மழையால் கேரளாவிலுள்ள 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அங்கு வசிக்கும் மக்கள் வீடிழந்து பொருட்களை இழந்து
தவிக்கின்றனர். கேரள அரசாங்கம் போர்கால நடவடிகையை மேற்கொண்டுள்ளது. இருந்தும் நாமும்
நம்முடைய உதவியை செய்யும் வகையில் நன்கொடை வசூலித்து அனுப்புவோம்.ஆகவே தோழர்கள் தாராளமாக  நிதிஉதவி அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்

Tuesday 7 August 2018

                                    கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்

முன்னாள் முதல்வர்,போராளி,பன்முகதன்மை கொண்ட டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் மறைவிற்கு நம்முடைய ஆழ் ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

Sunday 5 August 2018

                                              வாழ்த்துகிறோம்

தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் 5வது மாவட்டமாநாடு திருவெறும்பூர் 
5/8/18 அன்று நடைபெற்றது. அதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
தோழர் G  சுந்தராஜீ மாவட்டதலைவராகவும் தோழர் முபாரம் மாவட்டசெயராகவும் தோழர் A சண்முகம் மாவட்டபொருளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
அவர்களூக்கு நமக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.