Friday 28 June 2019


 BSNL ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
                 திருச்சி SSA.                         28/6/19
அன்பார்ந்த தோழர்களே,தோழியர்களே.
BSNL லின் வளர்ச்சிக்காக  பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களூக்கு செய்த வேலைக்கு ஊதியம் ஆறு மாதமாக தமிழ்நாட்டில் பல SSA க்களில் கொடுக்கப்படவில்லை.திருச்சியில் 4 மாதம் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.அவர்களூடைய குடும்பம் பசி.பட்டினியால் வாடுகிறது,சமுதாயத்தில் மிக மோசமாக நடத்தப்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது,அவர்கள் நடுத்தெருவுக்கு வரக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
BSNL நிறுவனத்தின் இந்த அலட்சிய போக்கினை கண்டித்தும் செய்த வேலைக்கு ஊதியம் உடனடியாக வழங்ககோரியும் இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக ஜீலை 2 முதல் 4 வரை (72 மணி நேரம்) தொடர் உண்ணாவிரதம் இருக்க அறைகூவல் விடப்பட்டுள்ளது . இதை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இரண்டு மாவட்ட சங்கங்களின் உறுப்பினர்கள்
பெருவாரியாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக்க உதவிபுரிய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
கோரிக்கைகள்
1.   ஒப்பந்த தொழிலாளர்களூக்கு வழங்க வேண்டிய நான்கு மாத ஊதியத்தை உடனே வழங்கு| அவர்களூடைய குடும்பத்தை பாதுகாத்திடு|
2.   நீதிமன்ற தீர்ப்பின்படி 2009-2010 க்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிகை எடு|
3.   EPF,ESI க்கு பிடித்தம் செய்கின்ற பணத்தினை உரிய இடத்தில் கட்டுவதை உறுதி செய்|
2/7/2019-------PGM OFFICE,D-TAX,AUTO EXGE,CANTONMENT,TIRUVERAMBUR ,THILLAINAGAR
3/7/2019--------TURAIYUR,PERAMBALUR,ARIYALUR,JAYAMKONDAM,SAMAYAPURAM,LALGUDI
4/7/2019---------KARUR,KULITALAI,MUSIRI,PUDUKOTTAI,MANAPARAI
ஒவ்வொரு நாளும் மேலே குறிப்பிட்ட கிளைகளிலிருந்து பங்கேற்பதை உறுதிபடுத்தவேண்டும்.
இரண்டு மாவட்ட சங்கங்களின் மாவட்ட சங்க நிர்வாகிகள்,
கிளை செயலர்கள் மூன்று நாட்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
2/7/2019 காலை 10.00 மணிக்கு துவங்கும் உண்ணாவிரதம் 3/7/19 காலை 10.00 மணிக்கு நிறைவு பெறும்.ஒவ்வொரு நாளும் இவ்வாரு தான் கிளைகளிலிருந்து பங்கேற்க வேண்டும்.
இறுதியாக 5/7/2019 காலை 10.00 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவுபெறும்.
2,3,4/7/2019-காலை 10.00 மணிக்கு PGM அலுவலகம் திருச்சி
     அனைவரும் பங்கேற்பீர்| வெற்றி பெறச்செய்வீர்|
                  தோழமையுடன்
                    BSNLEU              TNTCWU
மாவட்ட தலைவர் = தோழர் T. தேவராஜ்     தோழர். G. சுந்தரராஜூ
மாவட்ட செயலர்  =       .S அஸ்லம்பாஷா        G. முபாரக்அலி
மாவட்டபொருளாளர் = “     R. கோபி                A.. சண்முகம்

Friday 21 June 2019


ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து.58 ஆக குறைக்கும் பிரச்சினை
தற்போது மத்திய சங்கத்திற்கு நாடு முழுவதிலிருந்து ஒய்வு பெறும் வயது சம்மந்தமாக என்ன நிலைமை என்று நமது தோழர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். மத்திய சங்கம் அறிந்த வகையில் அரசாங்கத்தில் இந்த பிரச்சினை சம்மந்தமாக கடும் விவாதம் நடந்து வருவதாக அறிகிறோம்.  கடந்த 6/6/2019 அன்று நமது சங்கத்தின் சார்பாக அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் நாம் சுட்டி காட்டியிருந்தோம் அதில் 2000 த்தில் BSNL ஆகும் போது அரசாங்கம் கொடுத்த உறுதிமொழி அரசாங்க உத்திரவு BSNL க்கும் அமுல்படுத்தப்படும். அதன்படி மத்திய அரசு ஊழியர்களூக்கு ஒய்வு பெறும் வயது 60 ஆகும்.ஆகவே இது BSNL லில் பணியாற்ற கூடிய ஊழியர்களுக்கும் பொருந்தும்.ஆகவே அரசாங்கம் 2000 ம் வருடம் கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றும் என நம்புகிறோம்.

19/6/2019 அன்று புதுடெல்லியில் நடந்த AUAB கூட்ட முடிவுகள்
புதுடெல்லியில் 18/6/19 அன்று நடந்த AUAB கூட்டத்தில் BSNLEU,NFTE-BSNL,SNEA,AIBSNLEA,AIGETOA,BSNLMS,BSNL-ATM,TEPU ஆகிய சங்கங்களின் பொதுசெயலர்கள்,பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறிப்பாக EB BILL கட்டாமல் FUSE பிடுங்கி செல்ல கூடிய நிலைமை,கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருப்பது இதனால் நம்முடைய வேலை தரம் பாதிப்பு,முதலீட்டு செலவிற்கு தடை விதித்துள்ளது பற்றியெல்லாம் விரிவாக விவாதம் நடத்தி கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
1)   தற்போதைய நிலைமையை சீர்செய்வதற்கு உடனடியாக நமது அமைச்சரை சந்திப்பதற்கு கடிதம் கொடுப்பது (கடிதம் கொடுக்கப்பட்டு விட்டது).
2)   BSNL நிர்வாகம் முதலீட்டு செலவிற்கு விதித்துள்ள தடையை உடனடியாக வாபஸ் வாங்கவேண்டும்
3)   தற்போதைய நிதி  நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவி செய்யவேண்டுமென்று அமைச்சருக்கு விளக்க கடிதம் எழுதுவது.
CMD ஐ சந்தித்து  FR 17A ஐ உடனடியாக கைவிட வேண்டுமென்று கோருவது.(இதன்படி அனைத்து பொதுசெயலர்களூம் CMD ஐ சந்தித்து பேசினர் அவரும் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்)

Monday 10 June 2019


                                 12-6-2019--------மாலை நேர தர்ணா
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் 5 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை,நமது மாவட்டத்தில் 3 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை இதற்காக அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றது.நமது மாவட்டத்தில் 10 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இரண்டு மாநில சங்கங்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் மா நிலம் முழுவதும் 12/6/2019 அன்று மாலை நேர தர்ணா நடத்த அறை கூவல் விடப்பட்டுள்ளது.
ஆகவே BSNL ஊழியர் சங்க உறுப்பினர்களூம்,ஒப்பந்த  தொழிலாளர் சங்க உறுப்பினர்களூம் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
12-6-2019---------மாலை 4.00 மணி-------PGM அலுவலகம் திருச்சி
BSNLEU--------TNTCWU-------திருச்சி மாவட்ட சங்கங்கள்