Tuesday, 30 October 2018
Friday, 26 October 2018
CMD யுடன் சந்திப்பு
நமது பொதுசெயலர்
தோழர் அபினயூ அவர்கள் தோழர் அபினயூ அவர்கள்
CMD ஐ 25/10/18 அன்று சந்தித்து மத்திய அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென
கேட்டுக்கொண்டார். அதற்கு CMD அவர்கள் ஏற்கனவே18/10/18 சந்திப்பதற்கு முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அது
முடியவில்லை ஆகவே வருகிற 29/10/18 அன்று சந்திப்பதற்கு முயற்சி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
மத்திய செயற்குழுவின்
முக்கிய முடிவுகள்
1)
மத்திய
அரசாங்கத்தின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெறும் 2019 ஜனவரி
8,9 நடைபெறும் இரண்டு நாள் வேலைநிறுத்ததில் நமது சங்கம் கலந்து கொள்வதோடல்லாமல் அதை வெற்றிகரமாக நடத்தும் வகையில் அனைத்து மாநிலங்களிலும்
விரிவடைந்த மாநில செயற்குழு நடத்து வேண்டும்
2)
AUAB
அறிவித்துள்ள இயக்கங்களை வெற்றிகரமாக நடத்த பணியாற்ற வேண்டும்
3)
ஊதிய
மாற்ற பிரச்சினையில் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களூம் கூட்டாக ஒற்றுமையுடன் பணியாற்றுவதற்கு
பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சிறப்பான ஊதிய திருத்தம் மற்றும் HRA பெறுவதை உறுதிபடுத்த
வேண்டும்
4)
அகில
இந்திய மாநாட்டிற்கான சார்பாளர் கட்டணம் ரூ 1000/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5)
BSNL
CASUAL AND CONTRACT WORKERS FEDERATION அறிவித்துள்ள தர்ணாவை வெற்றிகரமாக்க நாம் முழுஒத்துழைப்பு
கொடுக்கவேண்டும்
6)
BSNL
புனரமைக்க கொண்டுவந்துள்ள திட்டமான BSNL AT YOUR DOOR STEP திட்டத்தை கீழ்மட்டம் வரை
கொண்டு செல்ல நம்முடைய தோழர்கள் பணியாற்ற வேண்டும்.
Thursday, 25 October 2018
மீண்டும் போராட்டத்தை
தீவிரப்படுத்துவோம்
ALL UNIONS
AND ASSOCIATIONS OF BSNL ன் 8/10/18 புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட
முடிவுகளை நமது மாவட்டத்தில் சிறப்பாக அமுல்படுத்துவதற்கான கூட்டம் 17/10/18 அன்று
நடைபெற்றது.அதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,TEPU ஆகிய சங்கங்களின் சார்பாக தோழர்கள்
கலந்து கொண்டனர்.கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1)
2000
நோட்டீஸ்கள் அச்சடித்து மாவட்டம் முழுவதும் வினியோகம் செய்வது.PGM OFFICE COMPOUND
ல் 29/10/18 அன்று காலை வினியோகம் செய்வது.
2)
29/10/18
அன்று மதியம் 3.00 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
கூட்டம்
நடத்துவது
3)
30/10/18
ஓரு நாள் தர்ணா திருச்சி PGM அலுவலகத்தில் நடத்துவது அனைத்து சங்கங்களிலிருந்தும் ஊழியர்களை
திரட்டுவது.
4)
14/11/18
பேரணி மற்றும் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்துவது.
5)
30/11/18
க்குள் பிரச்சினை தீராவிட்டால் வேலைநிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிகைகளூக்காக
ஊழியர்களை திரட்டுவது.
ஆகவே
அனைத்து அதிகாரிகளூம்,ஊழியர்களூம் அனைத்து இயக்கங்களிலும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன்
கேட்டுக் கொள்கிறோம்.
போராடமல்
பெற்றதில்லை, போராடி நாம் தோற்றதில்லை
ஓன்றுபடுவோம்| போராடுவோம்| வெற்றிபெறுவோம்|||
ALL
UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA
Thursday, 18 October 2018
Monday, 15 October 2018
மாவட்டமாநாடு
நமது மாவட்டத்தின்
9வது மாநாடு கீரனுரில் 10/10/18 அன்று மாவட்டதலைவர் தோழர் தேவராஜ் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.அதில் அகில இந்திய உதவிபொதுசெயலர் தோழர் S செல்லப்பா மாநில செயலர் தோழர்
A.பாபுராதாகிருஷ்ணன் நமது முதன்மை பொதுமேலாளர் திருமதி S E ராஜம் மற்றும் அதிகாரிகளும்
நமது சகோதர சங்க தோழர்கள் G சுந்தரராஜூ மாநிலஉதவி பொருளாளர் தோழர் M மல்லிகா மாநில
செயற்குழு உறுப்பினர் BSNL WWCC தோழர் I ஜான்பாஷா
DS AIBDPA தோழர் R கல்லடியான் மாநில செயற்குழு உறுப்பினர் TNTCWU G முபாரக் மாவட்ட
செயலர் TNTCWU தோழர் சின்னையன் மாநில செயற்குழு உறுப்பினர் AIBDPA ஆகியோர் கலந்து கொண்டனர்
செயல்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது, வரவு செலவு கணக்குகள்
சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின் கீழ்கண்ட
நிர்வாகிகள் ஏகமனாதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
1.மாவட்ட தலைவர் தோழர் T. தேவராஜ் TT
DTAX TRICHY
2.மாவட்ட உதவி
தலைவர் “ G. கார்திகேயன் AOS(G) CSC KARUR
3.” “ “ K. ராஜப்பா JE
PADALUR
4” “ “ R ஜம்புலிங்கம் TT
VIRAGALUR
5” “ “ U பூம்பாவை AOS(TG)
CSC PDK
6 மாவட்ட செயலாளர் “
S அஸ்லம்பாஷா AOS(TG) PGM-CSC
7 மாவட்ட உதவி
செயலர் “ G. சுந்தரராஜூ JE
AIRPORT TR
8 “ “ “ R முருகேசன் TT
BAZAR KARUR
9” “ “ G பாலசுப்ரமணியன் TT CM NWOP KRU
10 “ “ “
A இளங்கோவன் TT AUTO TRICHY
11 மாவட்ட பொருளாளர் “
R கோபி TT ARIYALUR
12.மாவட்ட உதவி
பொருளாளர் “ P ரவிச்சந்திரன் TT
TRICHY
13.மாவட்ட அமைப்பு
செயலர் “ A சண்முகம் TT WORAIYUR TR
14. “ “ “
K பன்னீர்செல்வம் TT KULITALAI
15 “ “ “
K தியாகராஜன் OS (T) PGM-CSC TR
16 “ “ “
K. பொன்னுசாமி TT THUVARNKURICHY
17 “ “ “
K. தண்டபானி TT THENNILAI
18 “ “ “
C ராஜேந்திரன் TT KEERANUR
Wednesday, 3 October 2018
வாழ்த்துகிறோம்
28/1/2018 அன்று
நடைபெற்ற JE தேர்வில் குறைந்த எண்ணிக்கையில்தான் தேர்வு பெற்றார்கள் காரணம் கேள்விதாள்
கடினமாக இருந்ததும் ஆனால் காலிபணியிடங்கள் அதிகமாக இருந்தது .ஆகவே மதிப்பெண்ணில் தளர்வு
கொடுக்க வேண்டும் அதன் மூலம் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில்
ஊழியர்கள் தேர்ச்சி
பெறவாய்ப்பு ஏற்படும்.நிர்வாகத்திற்கும் கூடுதல் எண்ணிக்கையில் JE க்கள் கிடைப்பார்கள்.
2008ல் நடைபெற்ற நரடி நியமன தேர்வில் காலிப்பணியிடங்கள்
நிரப்புவதற்கு மதிப்பெண்ணில் தளர்வு கொடுக்கப்பட்டது.அதை இலாகா தேர்வு எழுதிய ஊழியர்களூக்கும்
கொடுக்க
வேண்டுமென்று தொடர்ச்சியாக
நம்முடைய மத்திய சங்கம் கடிதம் கொடுத்து நிர்வாகத்துடன்
பேசிவந்தது.10/7/18 அன்று CMD வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் நாம் எடுத்துரைத்த
நியாயத்தை உணர்ந்து ஆவண செய்வதாக உறுதியளித்தார் .அதனை தொடர்ந்து DIRECTOR HR அவர்களையும்
சந்தித்து பேசியதின் விளைவாக தற்போது ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும்
250 ஊழியர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். நமது மாவட்டத்தில் நமது சங்கத்தை சேர்ந்த தோழியர்
இந்துமதி பள்ளப்பட்டி அவர்களும் தோழர் ரவிச்சந்திரன் பெரம்பலூர் அவர்களூம் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தபிரச்சினையை
விடாமல் நிர்வாகத்தோடு பேசி 250 ஊழியர்கள் பதவி உயர்வு பெற நடவடிகை எடுத்த மத்தியசங்கத்திற்கு
நம்முடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்
வாழ்த்துகிறோம்
அக்டோபர் 1 மற்றும்
2 தேதிகளில் திருப்பூரில் நடைபெற்ற TNTCWU
6வது மாநிலமாநாட்டில் தோழர் முருகையா
அவர்கள் தலைவராகவும் தோழர் வினோத்குமார் அவர்கள் மாநிலசெயலாளராகவும் தோழியர் பிரதீபா
அவர்கள் பொருளாளராகவும் நம்முடைய மாவட்டத்தை சேர்ந்த தோழர் கல்லடியான் அவர்கள் செயற்குழு
உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அவர்களூக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.
Friday, 28 September 2018
2019 ஜனவரி
8,9 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் மத்திய தொழிறசங்கங்கள் அறைகூவல்
புதுடெல்லியில்
இன்று (28//9/18) நடைபெற்ற மத்திய தொழி்ற்சங்கங்களின் சார்பாக நடைபெற்ற கருததரங்கில்
மத்திய அரசாங்கம் கடைபிடிக்ககூடிய புதிய பொருளாதார கொள்கைகள்,பொதுதுறை நிறுவனங்களை
தனியார்மயப்படுத்துவது,தொழிலாளர்களுக்கு விரோதமான,கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கைகளை
எதிர்த்து மூன்று நாள் புதுடெல்லியில் நடத்திய மாபெரும் தர்ணாவிற்குப்பின்னும் மத்திய
அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளிலிருந்து மாறவில்லை .ஆகவே வருகின்ற 2019 ஜனவரி 8,9 இரண்டு
நாட்கள் வேலைநிறுத்தம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில்
INTUC,AITUC,HMS,CITU,AIUTUC,TUCC,SEWA,AICCTU,LPF,UTUC ஆகிய மத்திய தொழிற்சங்கள் கலந்து
கொண்டன.நம்முடைய சங்கங்களிலிருந்தும் கனிசமான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்
Thursday, 27 September 2018
AUAB தலைவர்கள்
அமைச்சருக்கு கடிதம்
AUAB தலைவர்கள்
மத்திய நிதிதுறை இணைஅமைச்சர் திரு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களூக்கு 27/9/18 அன்று கடிதம்
எழுதியுள்ளனர்.
ஓய்வூதிய பங்களிப்பு வாங்கும் அடிப்படை ஊதியத்தின்
அடிப்படையில்இருக்க வேண்டுமென்கிற அரசாங்க உத்தரவை BSNL க்கும் அமுல்படுத்துவதற்கு
தாங்கள் தலையிட வேண்டுமென்றும் இதுசம்மந்தமாக தங்களை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கவேண்டுமென்று
கேட்டுள்ளார்கள்.இதில்
BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,AIGETOA,BSNLMS,TEPU,BSNLATM,BSNLOA பொதுசெயலர்கள் கையெழுத்திட்டுள்ளனர்
Wednesday, 26 September 2018
25-9-2018 அன்று
நடைபெற்ற ஊழியர் தரப்பு கூட்டம்
ஊதிய திருத்தத்திற்கான
ஊழியர் தரப்பு கூட்டம் 25/9/18 அன்று NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நமது பொதுசெயலர்
தோழர் அபிமன்யூ NFTE பொதுசெயலர் தோழர் சந்தேஷ்வர்சிங் உள்பட தோழர்கள் கலந்து கொண்டனர்.அதில்
ஊதிய விகிதங்கள் சம்மந்தமாக உறுப்பினர்களிடமிருந்து கருத்து கேட்ட நிலையில் ஊதிய தேக்கம்
ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்ற நிலையில் DOT யின் ஒப்புதல் பெறும் வகையில் அனுப்புவதற்கு
ஏதுவாக ஊதிய திருத்தத்தில் விரைவில் உடன்படிக்கை கையெழுத்து காணுவதற்கு முயற்சி கொள்ளவேண்டும்.அடுத்து
பெர்க்ஸ் மற்றும் அலவன்சுகள் சம்மந்தமாக உடனடியாக பேச்சுவார்த்தை துவங்க வேண்டும்.இது
DOT க்கு போகவேண்டிய அவசியமில்லை BSNL BOARD ஒப்புதல் கொடுத்தாலே போதுமானது. அதற்கான
நடவடிகை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
Friday, 14 September 2018
காத்திருப்பு போராட்டம்
17-9-2018 காலை 10.00 மணிமுதல் PGM OFFICE TRICHY
ஓப்பந்த தொழிலாளர்களுக்கு
பிரதி மாதம் 7ம் தேதியன்று ஊதியம் வழங்கவேண்டுமென்று கார்ப்பரேட் அலுவலக உத்தரவு,DLC உத்தரவு எதையும் மதிக்காமல் 15ம் தேதிக்குமேல் அதுவும்
போராட்டம் நடத்திதான் ஒவ்வொரு மாதமும் வாங்கவேண்டியுள்ளது. குறைந்த ஊதியம் பெற்று வாழ்க்கை
நடத்தும் ஒப்பந்த தொழிலாளர்கள் எவ்வளவு சிரமம் சந்ந்திப்பார்கள் என்பதை கான் ட்ராக்டர்களூம்
உணர்வதில்லை.PRINCIPAL EMPLOYER என்ற அடிப்படையில் நிர்வாகமும் உணர்வதில்லை கேட்டால்
பல்வேறு விளக்கங்களை சொல்லிக்கொண்டிருக்கிறது, ஆனால் பிரச்சினை தீர்ந்தபாடில்லை இந்த
நிலைமை தமிழ்நாடு முழுவதும் உள்ளது. சில மாவட்டங்களில் ஜூலை,ஆகஸ்ட் மாத ஊதியம் இதுவரை
வழங்கப்படவிலலை.ஆகவே BSNLEU,TNTCWU,NFTE மாநில சங்கங்கள் இணைந்து 17/9/18 முதல் ஊதியம்
வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து அறைகூவல்விட்டுள்ளன.
அனைத்து ஒப்பந்ததொழிலாளர்களும்
அவர்களூக்கு ஆதரவாக இரண்டு சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவேண்டுமாய் கேட்டுக்
கொள்கிறோம்.
Monday, 3 September 2018
வாழ்த்துகிறோம்
மத்திய அரசின்
மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாய
தொழிலாளர்கள் இணைந்து செபடம்பர் 5 ம் தேதி புதுடெல்லியில் மாபெரும் பேரணி நடத்தவுள்ளனர்.அதில்
இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.நமது சங்கத்திலிருந்து இந்தியா
முழுவதிலிமிருந்து சுமார் மூன்றாயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலத்திலிருந்து
சுமார் 250 க்கும் மேற்படோர் கலந்து கொள்ளவுள்ளனர்.நமது மாவட்டத்திலிருந்து இரண்டு
பேர் கலந்துகொள்ளவுள்ளனர்
அனைவரையும் வாழ்த்துகிறோம்..
Tuesday, 28 August 2018
ஊதிய மாற்றக் குழுவின் மூன்றாவது கூட்டம்
ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் தலைமையில் 27.08.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தின் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு பெற்றனர். கடந்த கூட்டத்தில் ஊழியர் தரப்பு தங்களின் முன்மொழிவை கொடுத்திருந்தது. இந்தக் கூட்டத்தில் நிர்வாக தரப்பு அவர்களின் முன் மொழிவை முன்வைத்தது. நிர்வாக தரப்பில் புதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவிற்கு பழையை ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச ஊதியத்தை 2.4ஆல் பெருக்கி NE1ன் குறைந்த பட்ச ஊதிய விகிதத்தை 18,600 ரூபாய் என முன்வைத்தது. ஊழியர் தரப்பு அதனை ஏற்றுக் கொள்ளாமல் பெருக்கல் காரணி என்பது 2.44ஆக இருக்க வேண்டும் என்றும் அதன் காரணமாக E1 ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவு ரூ.18,934/- என இருப்பதை முழுமையாக்கி ரூ.19,000/- என இருக்க வேண்டும் என்று வாதிட்டனர். அத்துடன் அனைத்து ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவை கணக்கிட பெருக்கல் காரணியாக 2.44 என்பதை அடிப்படையாக வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதனை பரிசீலிக்க நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
ஊதிய விகிதத்தின் கால அளவு 43 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் முன்வைத்த ஆலோசனைக்கு பதிலளித்த நிர்வாக தரப்பு, இதன் காரணமாக ஓய்வூதிய பங்கீட்டில் செலவு கடுமையாக உயரும் என தெரிவித்தது. ஊதிய மாற்றத்திற்கு பின் எந்த ஒரு ஊழியரும் ஊதிய தேக்க நிலையை அடைந்துவிடாமல் இருப்பதற்கு தேவையான கால அளவு இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்தை 10.09.2018 அன்று நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது.
பேச்சு வார்த்தை மிக மெதுவாக செல்வது குறித்து ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். இதே வேகத்தில் சென்றால் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க முடியாது என்று தெரிவித்த அவர்கள் இன்னமும் குறைந்த கால இடைவெளியில் இந்தக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
ஊதிய விகிதத்தின் கால அளவு 43 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் முன்வைத்த ஆலோசனைக்கு பதிலளித்த நிர்வாக தரப்பு, இதன் காரணமாக ஓய்வூதிய பங்கீட்டில் செலவு கடுமையாக உயரும் என தெரிவித்தது. ஊதிய மாற்றத்திற்கு பின் எந்த ஒரு ஊழியரும் ஊதிய தேக்க நிலையை அடைந்துவிடாமல் இருப்பதற்கு தேவையான கால அளவு இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்தை 10.09.2018 அன்று நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது.
பேச்சு வார்த்தை மிக மெதுவாக செல்வது குறித்து ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். இதே வேகத்தில் சென்றால் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க முடியாது என்று தெரிவித்த அவர்கள் இன்னமும் குறைந்த கால இடைவெளியில் இந்தக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
Monday, 27 August 2018
ஊதிய திருத்த பேச்சுவார்த்தை-27-8-18
மூனறாவது கட்டமாக
27/8/18 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
நிர்வாகம்—பழைய
அடிப்படை சம்பளம் அதனுடன் 2.4 காரணி பெருக்கலாக வரக்கூடிய ரூ 18600/-NE-1 க்கு என்பதை
முன்மொழிந்தது
ஊழியர் தரப்பு
--- அடிப்படை சம்பளம் அதனுடன் 2.4 காரணி பெருக்கலாக
வரக்கூடிய ரூ
18944/- NE-1 க்கு என்பதை ரூ 19000/- என்பதை வலியுறுத்தினார்கள். நிர்வாகம் பரிசிலிப்பதாக
கூறியுள்ளது.
ஊழியர் தரப்பு-----MAXIMUM
என்பதை 43 வருஷமாக இருக்கவேண்டுமென்று கேட்கப்பட்டது.
நிர்வாகதரப்பு------அவ்வளவு
அதிகமாக நீட்டமுடியாது காரணம் பென்ஷன் பங்களிப்பு
செலவு அதிகமாகும்.ஆனால் ஊழியர் தரப்பு அதிக பட்சமாக நீட்ட வேண்டுமென்று எந்த ஊழியரும்
பாதிக்ககூடாது. என்று கோரினார்கள் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த கூட்டம்
10/9/18 அன்று நடைபெறும்
Subscribe to:
Posts (Atom)